சென்னை:125 இடங்களில் தனித்து வெற்றி பெற்ற திமுக தனிப்பெரும்பாண்மையுடன் இன்று ஆட்சி அமைக்கிறது. 10 ஆண்டுகளுக்குப்பின் திமுக ஆட்சி கட்டிலில் அமர்கிறது. சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக அமைச்சர்களை கவர்னரிடம் அறிமுகம் செய்தார் ஸ்டாலின். காலை 9;10 மணியளவில் கவர்னர் பன்வாரிலால் ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர்.

கொரோனா காரணமாக எளிய முறையில் கவர்னர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடந்தது. முன்னாள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் , உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் , நீதிபதிகள், என விழாவில் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

விழாவில் ஐகோர்ட் நீதிபதிகள், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணசேன், காங்., தலைவர் அழகிரி, தமிழக காங்., மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், மதிமுக பொதுசெயலர் வைகோ, மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்,சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இடதுசாரயின் முத்தரசன், கொங்கு., ஈஸ்வரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


முத்துவேல் கருணாநிதியின் மகன்
ஸ்டாலின் அவரது உறுதியேற்பில் எடுக்கும் போது கவர்னர் எம்.கே. ஸ்டாலின் எனும் நான் என துவக்கி வைத்தார், தொடர்ந்து ஸ்டாலின் படிக்க துவங்கியதும் ;
" முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான், சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசின் நம்பிக்கையின் பால் உண்மையான நம்பிக்கையையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியும், தமிழ்நாட்டு அரசியலமைப்படியும், கடமையை நிலைநிறுத்துவேன் என்றும், உண்மையாகவும் என் கடமையும் செய்வேன் என்றும் அரசியல் அமைப்பின் சட்டத்தின்படி, ஒருதலை சார்பின்றி, விறுப்பு வெறுப்பின்றி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் உண்மையாக இருப்பேன் என்றும் அரசின் ரகசியங்களை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ தெரிவிக்க மாட்டேன் " என உளமாற உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் உறுதிமொழியை படித்தார்.

கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம்
கடவுளின் பேரால் இல்லை
கடவுளின் பேரால் என்று யாரும் உறுதிமொழி எடுக்கவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE