அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவையில் தி.மு.க.,வை தோற்கடிக்க உதவினாரா மகேந்திரன்!

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (60)
Share
Advertisement
கோவை: மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் விலகியிருப்பதற்கு, தி.மு.க.,வின் நிர்ப்பந்தம்தான் காரணமென்ற தகவல் வெளியாகியுள்ளது.தேர்தல் முடிவுகள் வெளியான நான்கே நாட்களில், மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ் ஆகியோர், அக்கட்சியை விட்டு விலகியிருக்கின்றனர். இவர்களில் பொன்ராஜ், சமீபத்தில்தான் கட்சியில் சேர்ந்தவர். மகேந்திரன், கமல்
MNM, Mahendran, Coimbatore, மநீம, மக்கள் நீதி மய்யம், மகேந்திரன், கோவை, கோயம்புத்தூர்,

கோவை: மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் விலகியிருப்பதற்கு, தி.மு.க.,வின் நிர்ப்பந்தம்தான் காரணமென்ற தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான நான்கே நாட்களில், மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ் ஆகியோர், அக்கட்சியை விட்டு விலகியிருக்கின்றனர். இவர்களில் பொன்ராஜ், சமீபத்தில்தான் கட்சியில் சேர்ந்தவர். மகேந்திரன், கமல் கட்சி துவக்கியதிலிருந்து உடனிருந்தவர் என்பதால், அவருடைய விலகலுக்கான காரணமென்ன என்ற விவாதம் சூடு பறக்கிறது.தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றதும், முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலினை, கமல் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் வேறு யாரும் உடன் போகவில்லை. அந்த நேரத்தில், ஸ்டாலின் சொன்ன சில விஷயங்கள் பற்றி மகேந்திரனிடம் கமல் கேட்டதுதான், அவர் கட்சியை விட்டு விலகுவதற்குக் காரணமென்ற தகவல் பரவியுள்ளது.

தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் நம்மிடம் கூறியதாவது: மகேந்திரனின் சொந்த ஊர் பொள்ளாச்சி. அங்கு அவருக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டில், 2016ம் ஆண்டில் வருமானவரித்துறை ரெய்டு நடந்தது. பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடைய பினாமியாக அவர் இருப்பதுதான் ரெய்டுக்குக் காரணமென்று தகவல் பரவியது. அது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதை மறுத்துப் பேட்டி கொடுத்த மகேந்திரன், 'பொள்ளாச்சி ஜெயராமன் என் உறவினர்தான். ஆனால், அவருக்கும் எனக்கும் வேறு எந்தத் தொடர்பும் கிடையாது. நான் தொழில் செய்து சம்பாதித்ததுதான்' என்று விளக்கமளித்தார்.


latest tamil news



அதன்பின் கமல் கட்சி துவங்கியபோது, அந்தக் கட்சியில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் துவக்கப்பட்டபோது, துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட அவரை யாருக்குமே தெரியாது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட்டு, ஒன்றரை லட்சம் ஓட்டுக்களை மகேந்திரன் வாங்கினார். லோக்சபா தேர்தலுக்குப் பின், கமல் கட்சியிலிருந்து பல முக்கியப் பிரமுகர்கள் வெளியே போனபோதும் மகேந்திரன் மட்டும் கூடவே இருந்தார். அவர் கொடுத்த நம்பிக்கையில்தான், கமல் கோவை தெற்கில் போட்டியிடுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது.

ஆனால், குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் கமல் தோற்றார். பா.ஜ.,வேட்பாளர் வானதி வெற்றி பெற்றார். அதேபோல, சிங்காநல்லுாரில் மகேந்திரன் வாங்கிய ஓட்டுக்களால், தி.மு.க.,எம்.எல்.ஏ.,வாக இருந்த கார்த்திக் தோற்றுப்போனார். கோவை நகருக்குள் ஆறு தொகுதிகளில் தி.மு.க., தோல்விக்கு மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுக்கள் முக்கியக் காரணமாக இருந்தன. இதனால்தான், 10 தொகுதிகளிலும் தி.மு.க., தோற்றது. கமலை இங்கு போட்டியிட வைத்து, கோவை தொகுதிகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி, தி.மு.க.,வைத் தோற்கடிக்க வேண்டுமென்பதுதான், மகேந்திரனுக்கு அ.தி.மு.க.,வின் கோவை வி.ஐ.பி., கொடுத்த அசைன்மென்ட். அதை அவர் சிறப்பாக முடித்துக் கொடுத்து விட்டார்.


latest tamil news



மகேந்திரன் நினைத்திருந்தால், அவருடைய சொந்த ஊரான பொள்ளாச்சியில் போட்டியிட்டிருக்கலாம். அல்லது கமலை அங்கே நிறுத்தியிருக்கலாம். ஆனால், கோவை தெற்கில் கமலை நிற்க வைத்து, தி.மு.க., கூட்டணி ஓட்டுக்களைப் பிரித்து வானதியை ஜெயிக்க வைக்க வேண்டும்; சிங்காநல்லுாரில் கார்த்திக்கைத் தோற்கடிக்க வேண்டுமென்று அவருக்குச் சொன்ன வேலையை அவர் சிறப்பாகச் செய்துவிட்டார். கமலை எல்லோரும் பா.ஜ.,வின், 'பீ டீம்' என்று சொல்வார்கள். அதற்குக் காரணம், மகேந்திரன் போன்ற ஆட்கள்தான். கூடிய விரைவிலேயே மகேந்திரன் வேறு கட்சியில் ஐக்கியமாகிவிடுவார்.

இந்த விஷயங்களை எல்லாம், தி.மு.க., தலைவரைச் சந்தித்தபோது, கமல் தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அவர் அதைப் பற்றிக் கேட்டதும் மகேந்திரன் வெளியேறிவிட்டார். இவ்வாறு, அந்த நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். இது குறித்து மகேந்திரனிடம் கருத்துக் கேட்பதற்காக, அவரை தொடர்பு கொண்டபோது, அவரைப் பிடிக்கவே முடியவில்லை; பின்னர் அவர் விளக்கம் அளிக்க முன்வந்தால் வெளியிடப்படும்.
-நமது சிறப்பு நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
12-மே-202107:42:25 IST Report Abuse
jagan அப்போ இவர் தான் நம்மவர் (ப ஜா)
Rate this:
Cancel
maharaja - திருநெல்வேலி,இந்தியா
11-மே-202115:11:57 IST Report Abuse
maharaja எல்லாமே செட்டப்பா கோபால். கமல் பி டீமாகத்தான் இருந்திருக்கிறார்
Rate this:
P.MANIMARAN - keeranur,இந்தியா
11-மே-202116:37:52 IST Report Abuse
P.MANIMARANஉண்மை...
Rate this:
Cancel
P.MANIMARAN - keeranur,இந்தியா
11-மே-202112:46:11 IST Report Abuse
P.MANIMARAN இதெல்லாம் ஒரு பொழப்பா . இங்கெல்லாம் திராவிட கட்சி தான் வரும். நோட்டு கொடுத்தா தான் ஓட்டு . பொய் கேட்டு பாருங்கள் நேர்மையாக ஜெயிக்கவே முடியாது.. கமல் ஒரு ஓட்டுக்குஆயிரம் தருவாரா.அப்பா ஜெயிக்கவே முடியாது. இங்கு யாரும் நேர்மையாக வரவில்லை. பொய் கேளுங்கள் உண்மையை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X