அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிதி ரூ.4 ஆயிரம், பெண்களுக்கு இலவச பயணம்; முதல்வர் ஸ்டாலின் போட்ட 5 கையெழுத்து

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (222)
Share
Advertisement
சென்னை: சென்னை தலைமைசெயலகத்திற்கு சென்ற ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் முதல் கையெழுத்தாக, கொரோனா நிவாரணமாக, ரூ.4000 ஆயிரம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.ஐந்து கோப்புகளில் ஸ்டாலின் கையெழுத்துமுதல் கையெழுத்தாக 2.07 கோடி அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரணமாக, ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். முதல்

சென்னை: சென்னை தலைமைசெயலகத்திற்கு சென்ற ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் முதல் கையெழுத்தாக, கொரோனா நிவாரணமாக, ரூ.4000 ஆயிரம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.latest tamil news
ஐந்து கோப்புகளில் ஸ்டாலின் கையெழுத்து


முதல் கையெழுத்தாக 2.07 கோடி அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரணமாக, ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். முதல் தவணையாக, இம்மாதமே ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.


2வது கையெழுத்து ;

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 ஆக குறைப்பு


3வது கையெழுத்து


அரசு உள்ளூர் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்கான அடையாள அட்டை வழங்கப்படும். நாளை முதல் பெண்கள் பயணிக்கலாம்.


4வது கையெழுத்து


மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்தல்.


5வது கையெழுத்து


தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் .
இவ்வாறு 5 கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.


4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்


தமிழக முதல்வர் ஸ்டாலினின் தனிச்செயலர்களாக, உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.latest tamil news
கோபாலபுரம் கருணாநிதி இல்லம்


பதவியேற்ற பின்னர் முதல்வர் ஸ்டாலின் , நேராக கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லம் சென்றார். அங்குள்ள கருணாநிதியின் உருவபடத்திற்கு கண்ணீர் விட்டபடி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உறவினர்கள் அவரை தேற்றினர். அதை தொடர்ந்த தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார்.


latest tamil newslatest tamil news

கருணாநிதி நினைவிடம்


கோபாலபுரத்திலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாநினைவிடம், கருணாநிதி நினைவிடம் சென்று பூக்கள் தூவி மரியாதை செலுத்தினார். ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் உதயநிதி ஆகியோரும் மலர்துாவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் அங்கிருந்து முன்னாள் மறைந்த திமுக பொது செயலாளர் அன்பழகன் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தார். அதை தொடர்ந்து தலைமை செயலகம் சென்று முதல்வராக பொறுப்பேற்று 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (222)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
07-மே-202120:51:04 IST Report Abuse
SUBBU தமிழகத்தில் உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் ஸ்டாலின் அறிவிப்பு:எங்கே மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசம் என சொல்லட்டும் பார்க்கலாம்?அரசு பேருந்துகள் சென்னையினை தவிர எல்லா இடத்திலும் அபாயத்தில் ஓடுகின்றன. பெரும்பாலும் அரசு பேருந்துகள் நெடுஞ்சாலையைச் தவிர ஊருக்குள் வருவதே இல்லை. தனியார் மினி பேருந்துகளும் இதர தனியார் வாகனங்களுமே ஆதிக்கம் செலுத்துகின்றன‌. ஓடாத பேருந்தில் ஏறாத பெண்களுக்கெல்லாம் இலவசம் என்பதெல்லாம் சாதாரணம் அல்ல‌?முதலில் அரசு சேவைகளை மேம்படுத்தலாம் அதன் பின் இதுபற்றி யோசிக்கலாம்?
Rate this:
Ramesh Lal - coimbatore,இந்தியா
11-மே-202114:55:29 IST Report Abuse
Ramesh Lalசூப்பர் , நல்ல வயிறு ஏ ஏ ரியுது....
Rate this:
Cancel
Ram Ram - கொங்கு நாடு,இந்தியா
07-மே-202119:59:33 IST Report Abuse
Ram Ram கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது என்பது இதுதான் . வரி பணத்தில் இலவசம் கொடுத்து விட்டு சாராய பணத்தில் அரசு நடத்துவது . ஏன் மது விலக்கை அமல் படுத்தி கையெழுத்து போட வேண்டியது தானே
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
07-மே-202120:27:41 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஅப்போ சொல்லுங்க வரிப்பணத்தில் என்ன செய்யலாம் ? மக்கள் பணம் மக்களுக்கு.... நீங்க என்ன சொல்வரீங்க காசாய் கொடுக்காதே இலவச மருத்துவ சேவை இலவச ஆக்சிஜென் செறிவூட்டி இலவச தடுப்பூசி இதெல்லாம் கொடுத்தால் சரி...இலவச காசு மட்டும் கூடாதா? எனக்கு இந்த லாஜிக் புரியலையே?...
Rate this:
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
08-மே-202111:41:53 IST Report Abuse
Dr. Suriyaபகுத்தறிவு மட்டைக்கெல்லாம் புரியாது தான்... இலவசமா காச வாங்கிக்கிட்டு டாஸ்மாக் மட்டையாவேண்டும் என்பது தான் புரியும்.......
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
08-மே-202114:47:42 IST Report Abuse
Visu Iyerமோடி ஜி இலவசமா ஐந்து மாதத்திற்கு தானியங்கள் தருகிறார்.. இது யாருடைய பணம்.. மத்திய அரசு மது தயாரிப்பு ஆலைக்கு தடை விதிக்கலாம் தானே.. ஆனால் மது இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கிறது.. மத்திய அரசை குறை சொல்லுவதை விட்டு விட்டு.. மாநில அரசை குறை சொல்லும் சிலர் பகுத்தறிவு மட்டை என்று கேலி பேசுகிறது வேடிக்கை .. அது சரி.. அவர்களுக்கு அந்த அறிவு இல்லை என்று தானே இப்படி பேசுகிறார்கள்.....
Rate this:
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
08-மே-202116:19:43 IST Report Abuse
Dr. Suriyaமாநில அரசிடம் அதிகாரம் உள்ளதே பகுத்தறிவு மட்டைகலே உங்களுக்கு இந்த சிற்றறிவு கூட இல்லையே... போய் தமிழகத்தின் தொழிற் கொள்கையை நன்றாக படித்து விட்டு அப்புறம் கருத்து போடுங்கள் அடுத்தவர்கள் அறிவை பற்றி கிடலும் கேலியும் செய்கிறீர்களே....? அதுவும் இது தனியார் நடத்துவது ஸ்டெர்லைட்டை மூடியது, விஸ்கோஸ் ஆலையை மத்திய அரசா இல்லையே மாநில அரசுதான்...பேச வந்துடாறு அதி புத்திசாலி மாதிரி......
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
07-மே-202119:46:27 IST Report Abuse
Rajas தனியார் மினி பஸ்களை சென்னையில் அறிமுகம் செய்து அதிகமாக விட்டால் ஆட்டோக்களுக்கு கொடுக்கும் பணம் மீதமாகும். பல இடங்களுக்கு பஸ் வசதி கிடைக்கும்.. இந்த பெண்களுக்கு சாதாரண பஸ்கள் இலவச பயணம் ஒரு தமாஷ் தான். சாதாரண பஸ்களே அதிகம் இல்லை. இதில் எப்படி பயணம். இருக்கும் ஆனால் இருக்காது.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
07-மே-202120:40:26 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஇலவசம் சென்னைக்கு மட்டுமா? அதெப்புடிங்க தமாசாகமுடியும்? அதிகாலையில் குறு வருவாய் குடுமப்த்தில் உள்ள வேலைக்கு செல்லும் பெண்கள் இவர்களிடம் கேட்கவேண்டும் இந்த திட்டம் எப்புடின்னு..சாதரண பஸ்களே அதிகம் இல்லை..அப்போ பஸ் இருக்கு..ஏன் இன்னும் இந்த சாதாரண பஸ் இன்னும் ஓடுது? இதில் பெண்கள் பயணிப்பதில்லையா? முதலில் ரேஷனில் அரசி குறைந்த விலையில் கிலோ 3 ரூபாய்க்கு ..அப்புறம் 3 ரூபாயா? இலவசம் வாங்கிட்டுபோங்கன்னு சொல்லியாச்சு..அதேபோல இதுவும் சாதரண பேருந்து கட்டணம் குறைவு ..அதேதுக்கு கொடுத்துட்டு இலவசமா போங்கன்னு சொல்லியாச்சு...இப்போ பள்ளிக்கு கல்லூரிக்கு செல்லும் பெண்கள்? இலவச பஸ் பாஸ் கொடுக்கலாம் இலவசமா போகமட்டும் சொல்லக்கூடாதா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X