புதுடில்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. தினசரி 4 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பிரதமர் மோடி மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். மாநில அரசுகள் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடியிடம் ஓர் கணித மாடல் காண்பிக்கப்பட்டது. வைரஸ் தாக்கம் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்று இந்த மாடல் மூலம் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆனால் இது துல்லியமாக இருக்குமா அல்லது மேம்போக்கான ஒரு கணிப்பா என்று இன்னும் சரியாகத் தெரியாத நிலையில், வரும் நாட்களில் வைரஸ் தாக்கம் இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் என இந்த மாடல் கூறுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் மாதமும் இந்த கணித மாடல் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதன் முடிவுகள்போல கடந்த மாதம் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் கருதி பிரதமர் மோடி இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த மறுக்கிறார். அந்தந்த மாநிலங்கள் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

ஐதராபாத் ஐஐடி பேராசிரியர் வித்யாசாகர் இந்த மாடல் குறித்துக் கூறுகையில், ‛வரும் ஜூன் மாதத்துக்குள் தினசரி 20 ஆயிரம் வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுவர் என கணிக்கப்படுகிறது,' என்று தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 15ம் தேதி வைரஸ் தாக்கம் உச்சத்தில் இருக்கும் என்று இதே குழு கணித்து இந்த அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தது. ஆனால் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் மாறுபடுவதால் சரியாக கணிக்க முடியவில்லை என டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் இரண்டு லட்சம் பேர் வைரஸ் தாக்கத்திற்கு பலியாகி உள்ள நிலையில் இதே நிலை நீடித்தால் வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் இந்தியா முழுவதும் பலி எண்ணிக்கை 4 லட்சத்து 4 ஆயிரமாக உயரும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.