அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வரின் தனிச்செயலராக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: முதல்வர் ஸ்டாலின் முதன்மைச் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.உதயசந்திரன்அதிமுக ஆட்சியில், தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக சிறப்பாக பணியாற்றியவர். டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயச்சந்திரன் சிறப்பாக பணியாற்றி வந்தார். ஹால் டிக்கெட்களை நாமாகவே பதிவிறக்கம்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் முதன்மைச் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news




உதயசந்திரன்


அதிமுக ஆட்சியில், தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக சிறப்பாக பணியாற்றியவர். டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயச்சந்திரன் சிறப்பாக பணியாற்றி வந்தார். ஹால் டிக்கெட்களை நாமாகவே பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்வது என்ற புதிய உத்திகளை கையாண்டார். கீழடி அகழாய்வு விஷயத்தில் மிகுந்த பங்களிப்பு வழங்கி அகழாய்வை விரிவுபடுத்தினார்.


உமாநாத்


உமாநாத் ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர். மாவட்ட நிர்வாகத்தில் நிறைய சீரமைப்பு செய்து பெயர்பெற்றார். தமிழக மருத்துவ கொள்முதல் பிரிவில் உமாநாத் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முக்கிய பங்கு வகித்து வருகிறார்.


latest tamil news




சண்முகம்


சண்முகம் 2002 ஐஆர்எஸ் பேட்ஜ் அதிகாரி. அருங்காட்சியக ஆணையராக பதவி வகித்து வருகிறார். திறமையான அவரை தேர்ந்தெடுத்து ஸ்டாலின் அருகில் கொண்டு வந்து அமர்த்தியுள்ளார்.


அனு ஜார்ஜ்


ஐஏஎஸ் அதிகாரி அனு ஜார்ஜ், தொழில்துறை கமிஷனராக பதவி வகித்தார். தொழில் மற்றும் வணிக இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். அவர் முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ்., மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி காரியத்துக்கான பணிகளை அமுதா ஐஏஎஸ்சுடன் சேர்ந்து கவனித்துக் கொண்டவர். ஆக இந்த 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுமே திறமையானவர்கள். இந்நிலையில், இந்த நால்வரையும் ஸ்டாலின் தனிச்செயலாளர்களாக நியமித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-மே-202106:22:46 IST Report Abuse
மனுநீதி இந்த 5 பேர் தான் இனி தமிழ்நாட்டை ஆளப்போறாங்க... பாராட்டுகிறேன். காரணம், நமக்கு வராத ஒன்றை ஆள் வைத்து செய்துகொள்ள வேண்டும் என்னும் அவர் மனநிலைக்கு. இக்கட்டான கட்டத்தில் முடிவெடுக்க அடிமைகள் கொண்ட கட்சி இருக்கிறது. தேர்தலில் ஜெயிக்க வைக்க 350 கோடி ஆசாமியும், அவன் பொய் பிரச்சாரத்தை நம்பி ஓட்டுபோட இளிச்சவாயன் தமிழனும், மதமாற்ற அடிப்படைவாதிகளும் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
08-மே-202106:22:38 IST Report Abuse
மனுநீதி இந்த 5 பேர் தான் இனி தமிழ்நாட்டை ஆளப்போறாங்க... ஸ்டாலினை பாராட்டுகிறேன். காரணம், நமக்கு வராத ஒன்றை ஆள் வைத்து செய்துகொள்ள வேண்டும் என்னும் அவர் மனநிலைக்கு. இக்கட்டான கட்டத்தில் முடிவெடுக்க அடிமைகள் கொண்ட கட்சி இருக்கிறது. தேர்தலில் ஜெயிக்க வைக்க 350 கோடி ஆசாமியும், அவன் பொய் பிரச்சாரத்தை நம்பி ஓட்டுபோட இளிச்சவாயன் தமிழனும், மதமாற்ற அடிப்படைவாதிகளும் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Kumzi தள்ளுபடி டோப்பா சூட்லீன் - trichy,யுனைடெட் கிங்டம்
08-மே-202100:05:11 IST Report Abuse
Kumzi தள்ளுபடி டோப்பா சூட்லீன்  துண்டுசீட்டு எழுதும் குழுவா பிரமாதம் தெலுங்கர்கள் மாதிரி இரிக்கி ஓஹ் இப்போ புரிஞ்சிடுச்சி ஹீஹீஹீ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X