முதல்வரின் தனிச்செயலராக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்| Dinamalar

முதல்வரின் தனிச்செயலராக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (12) | |
சென்னை: முதல்வர் ஸ்டாலின் முதன்மைச் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.உதயசந்திரன்அதிமுக ஆட்சியில், தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக சிறப்பாக பணியாற்றியவர். டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயச்சந்திரன் சிறப்பாக பணியாற்றி வந்தார். ஹால் டிக்கெட்களை நாமாகவே பதிவிறக்கம்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் முதன்மைச் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news




உதயசந்திரன்


அதிமுக ஆட்சியில், தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக சிறப்பாக பணியாற்றியவர். டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயச்சந்திரன் சிறப்பாக பணியாற்றி வந்தார். ஹால் டிக்கெட்களை நாமாகவே பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்வது என்ற புதிய உத்திகளை கையாண்டார். கீழடி அகழாய்வு விஷயத்தில் மிகுந்த பங்களிப்பு வழங்கி அகழாய்வை விரிவுபடுத்தினார்.



உமாநாத்


உமாநாத் ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர். மாவட்ட நிர்வாகத்தில் நிறைய சீரமைப்பு செய்து பெயர்பெற்றார். தமிழக மருத்துவ கொள்முதல் பிரிவில் உமாநாத் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முக்கிய பங்கு வகித்து வருகிறார்.



latest tamil news




சண்முகம்


சண்முகம் 2002 ஐஆர்எஸ் பேட்ஜ் அதிகாரி. அருங்காட்சியக ஆணையராக பதவி வகித்து வருகிறார். திறமையான அவரை தேர்ந்தெடுத்து ஸ்டாலின் அருகில் கொண்டு வந்து அமர்த்தியுள்ளார்.



அனு ஜார்ஜ்


ஐஏஎஸ் அதிகாரி அனு ஜார்ஜ், தொழில்துறை கமிஷனராக பதவி வகித்தார். தொழில் மற்றும் வணிக இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். அவர் முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ்., மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி காரியத்துக்கான பணிகளை அமுதா ஐஏஎஸ்சுடன் சேர்ந்து கவனித்துக் கொண்டவர். ஆக இந்த 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுமே திறமையானவர்கள். இந்நிலையில், இந்த நால்வரையும் ஸ்டாலின் தனிச்செயலாளர்களாக நியமித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X