கொரோனா சூழலில் 'சென்ட்ரல் விஸ்தா' தேவையா: ராகுல் கொதிப்பு

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (25) | |
Advertisement
புதுடில்லி: 'மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்தா திட்டம் ஒரு தேவையற்ற குப்பைக்கு நிகரான குற்றம்' என, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் விமர்சித்துள்ளார்.துணை ஜனாதிபதி மாளிகை கட்டடம் கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மே 2022 வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. இதேபோல் டில்லியில் உள்ள பிரதமர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் குடியிருப்பைக்

புதுடில்லி: 'மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்தா திட்டம் ஒரு தேவையற்ற குப்பைக்கு நிகரான குற்றம்' என, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் விமர்சித்துள்ளார்.
latest tamil news


துணை ஜனாதிபதி மாளிகை கட்டடம் கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மே 2022 வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. இதேபோல் டில்லியில் உள்ள பிரதமர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் குடியிருப்பைக் கட்டிமுடிக்க டிச., 2022 வரையும்; புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டிமுடிக்க நவ., 2022 வரையும் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மத்திய அரசு கட்டடங்களையும் கட்ட சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.


latest tamil news

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையால் கட்டுமானத் துறைக்கு தற்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் டில்லியில் உருவாகவிருக்கும் இந்த மூன்று அரசு கட்டடங்களை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதைக் கடுமையாக விமர்சித்துள்ள டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் ராகுல்.


ராகுல் தனது டுவிட்டரில் பக்கத்தில், 'நாடே கொரோனாவின் இரண்டாவது அலையால் தத்தளித்துவரும் இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் கட்டுமான தரத்தை உயர்த்துதல்; புதிய அரசு மருத்துவமனைகளை கட்டுதல் உள்ளிட்ட செயல்களில் மத்திய அரசு ஈடுபட வேண்டுமே தவிர, சென்ட்ரல் விஸ்தா திட்டத்துக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தேவை இல்லை' எனப் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
12-மே-202111:59:34 IST Report Abuse
M  Ramachandran உனக்கு ஏன் இந்த பொட்சியெரிப்பு. நீ கொள்ளை அடித்த பணத்தையோ உபயோக படுத்துகிறார்கள்? அல்லது நீ சீனா விடம் காய் யேந்தி வாங்கி வந்த பணத்தையோ சுருட்டி காட்டுகிறார்கள். உருப்படியான ஏதாவது மூளையிலில் உதித்தால் இந்த கொராணா வை எதிர்த்து பொராட கூறினால் இந்த மக்கள் சமூகத்திற்கு அது கட்சி தலைவரின் முதிர்ச்சியை கூறும். உதவியாய் இருக்கும். அது அல்லாமல்... மாதிரி பேசுவது அழகல்ல.
Rate this:
Cancel
08-மே-202108:42:45 IST Report Abuse
ravi chandran முதல்லே நீயும் உன் குடும்பமும் இந்தியாவிற்கு தேவையில்லை. இத்தாலி போய் வேலையை பாருங்க
Rate this:
Cancel
Ram - Dindigul,இந்தியா
08-மே-202102:14:54 IST Report Abuse
Ram While hospitals plead for life-saving oxygen and Covid-19 patients die in their thousands, India's Prime Minister is pushing ahead with a Rs.20,000 crores project for this parliamentary revamp including a new home for him. Is it really required at this need of hour? This shows how these selfish, power corrupt leaders are giving importance to their own people. Since hundreds of thousands of people suffering from food, medical care every day, he should have spent this tax payers money to them instead of his luxuriness God Bless India
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X