தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக இறையன்பு நியமனம்

Updated : மே 08, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (41) | |
Advertisement
சென்னை: தமிழக அரசின், 48வது தலைமை செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இறையன்பு நேற்று பொறுப்பேற்றார்.தமிழக அரசின் தலைமை செயலராக, ஜன., 31ம் தேதி, ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டார். தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் மாற்றம் செய்யப்படுவார் என, தகவல் வெளியானது. அதன்படி, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் மாற்றப்பட்டு, புதிய தலைமை செயலராக
புதிய தலைமைச்செயலாளர், இறையன்பு, நியமனம், தமிழகம்

சென்னை: தமிழக அரசின், 48வது தலைமை செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இறையன்பு நேற்று பொறுப்பேற்றார்.

தமிழக அரசின் தலைமை செயலராக, ஜன., 31ம் தேதி, ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டார். தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் மாற்றம் செய்யப்படுவார் என, தகவல் வெளியானது. அதன்படி, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் மாற்றப்பட்டு, புதிய தலைமை செயலராக இறையன்பு நியமிக்கப்பட்டார்.


latest tamil news

வாழ்த்து


அவர் உடனடியாக முதல்வரை சந்தித்து, தான் எழுதிய, 'வையத் தலைமைகொள்' என்ற புத்தகத்தை வழங்கி வாழ்த்து பெற்றார். அதன்பின், புதிய தலைமை செயலராக பொறுப்பேற்றார்.அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், மாலையில், முதல்வர் நடத்திய கூட்டத்தில், தலைமை செயலராக இறையன்பு பங்கேற்றார்.

இவர், சேலம் மாவட்டம், காட்டூர் கிராமத்தில், 1963 ஜூன் 16ல், வெங்கடாசலம் - பேபி தம்பதிக்கு இளைய மகனாக, பிறந்தார். பி.எஸ்சி., வேளாண்மை, எம்.பி.ஏ., ஆங்கிலத்தில் பிஎச்.டி., - எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை, எம்.எஸ்.சி., உளவியல் உட்பட, பல்வேறு பட்டங்களை இறையன்பு பெற்றுள்ளார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் தெரியும். கடந்த, 1987ல் நடந்த, ஐ.ஏ.எஸ்., தேர்வில், தேசிய அளவில், 15வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தார்.

1988 ஆக., 25ல், ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தார்.நாகப்பட்டினம் சப் - கலெக்டர், கடலுார் மாவட்ட கூடுதல் கலெக்டர், காஞ்சிபுரம் கலெக்டர், நகராட்சி நிர்வாகம் இணை ஆணையர், செய்தித் துறை இயக்குனர், முதல்வர் செயலக கூடுதல் செயலர், சுற்றுலாத் துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலர். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர், அண்ணா மேலாண்மை நிலைய இயக்குனர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை முதன்மை செயலர், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் முதன்மை செயலர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். சிறந்த பேச்சாளர். 100க்கும் மேற்பட்ட நுால்களை எழுதி உள்ளார்.சேலம் மைந்தர்


அதிகாரியாக மட்டுமின்றி, எழுத்தாளர், ஊக்கமூட்டும் பேச்சாளர் என, பன்முகத்தன்மை உடையவர். இவரது மூத்த சகோதரர் திருப்புகழும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக குஜராத்தில் பணிபுரிகிறார். இரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை உருவாக்கிய, சேலத்தில் உள்ள வீடு, இன்றும் எளிமையாக காட்சியளிக்கிறது.கடந்த, 2019 முதல், அண்ணா மேலாண்மை நிலையம், பயிற்சி துறை தலைவராக செயல்பட்டு வந்தார். இவர் எழுதியுள்ள, 100க்கும் மேற்பட்ட நுால்கள், பரிசு, பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-மே-202115:00:25 IST Report Abuse
Malick Raja புகழ்வதற்கு பலர் .. இகழ்வதற்கும் சிலர் .. இருப்பது உண்மை .. இருப்பினும் மாண்புக்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் அறிவீனத்தை வெளிப்படுத்தும் ..
Rate this:
Cancel
08-மே-202114:48:41 IST Report Abuse
Ramasubramaniam நிச்சயமாக துர்கா பரிந்துரை
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
08-மே-202112:24:26 IST Report Abuse
HSR இவர் தீவிர இந்துமத நம்பிக்கையாளர் ..இவர் பேச்சுக்களில் ஈஸ்வரனின் நடராஜர் நாட்டியத்தில் சர்வமும் இயங்குகிறது அதற்கு பெயர் பேரண்ட நடனம் என்று கூறிய விளக்கம் இன்னும் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்துள்ளது..நல்ல முறையில் எல்லாம் நடக்க ஈசன் அருளட்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X