பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி பதிவு குளறுபடியை தடுக்க 4 இலக்க ரகசிய எண்

Updated : மே 09, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா தடுப்பூசி போடாமலே, தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக வரும் குறுந்தகவல் குளறுபடியை தடுக்க, 'கோவின்' வலைதளத்தில், நான்கு இலக்க ரகசிய எண்ணுடன் கூடிய பாதுகாப்பு வசதி, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.கவனக்குறைவு மத்திய அரசின், 'கோவின், ஆரோக்கியசேது' ஆகிய வலைதளங்களில், கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் வசதி உள்ளது. இது குறித்து, மத்திய
தடுப்பூசி பதிவு , குளறுபடி, 4 இலக்க ரகசிய எண்

புதுடில்லி:கொரோனா தடுப்பூசி போடாமலே, தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக வரும் குறுந்தகவல் குளறுபடியை தடுக்க, 'கோவின்' வலைதளத்தில், நான்கு இலக்க ரகசிய எண்ணுடன் கூடிய பாதுகாப்பு வசதி, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


கவனக்குறைவுமத்திய அரசின், 'கோவின், ஆரோக்கியசேது' ஆகிய வலைதளங்களில், கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் வசதி உள்ளது. இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவின் வலைதளத்தில், கொரோனா தடுப்பூசிக்காக பதிவு செய்த சிலர், குறிப்பிட்ட நாளில் மருத்துவமனைக்கு செல்லாத போதிலும், தடுப்பூசி போட்டு விட்டதாக, மொபைல் போனில் குறுந்தகவல் வந்துள்ளதாக புகார் தெரிவித்து உள்ளனர்.

தடுப்பூசி போட மருத்துவமனைக்கு வருவோரின் தகவல்களை கணினியில் பதிவு செய்யும் ஊழியர்களின் கவனக்குறைவால், இந்த குளறுபடி நிகழ்வதாக தெரியவந்துள்ளது. இதை தடுக்க, தடுப்பூசிக்காக பதிவு செய்வோருக்கு, நான்கு இலக்க ரகசிய எண் கொடுக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. மருத்துவமனையில், ஆவணங்களை சரிபார்ப்போர் கேட்கும்போது, இந்த ரகசிய எண்ணை தெரிவிக்க வேண்டும். அவர்கள் அந்த எண்ணை பதிவு செய்த பின், தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிப்பர்.


வாய்ப்பில்லை

இதைத் தொடர்ந்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்த குறுந்தகவல் அனுப்பப்படும். இந்த ரகசிய எண்ணை, கணினியில் உள்ளீடு செய்த பிறகே, ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என்பதால், இனி இத்தகைய குளறுபடிகள் நிகழ வாய்ப்பில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-மே-202123:53:50 IST Report Abuse
Pugazh V BJP's nasty face should be exposed, for which such marketing is needed. The biggest looter of this country now is BJP only.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
08-மே-202122:58:29 IST Report Abuse
தல புராணம் எதை தான் ஒழுங்காக செயலாக்கியிருக்கிறார்கள் இந்த மோடி கூட்டம்..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
08-மே-202108:03:49 IST Report Abuse
தல புராணம் மருந்தை திருடி விக்கிறாய்ங்க பாஜாக்கா ஐடி விங் சங்கிங்க.. அவங்க தான் ஆதார் விவரங்கள் முதல் வங்கிக்கணக்கு வரை எல்லாத்தையுமே திருடி கைலே வெச்சிருக்காங்க.. பாண்டிச்சேரி தேர்தலில் ஆதார் நிறுவனத்திலிருந்து வாக்காளர் அட்ரஸை திருடி கோல்மால் பண்ணாங்க.. இப்போ மருந்தை மொத்தமா தனியார் மருத்துவமனைக்கு வித்துட்டு இல்லாட்டி ஏற்றுமதி பண்ணிட்டு இங்கே எல்லாருக்கும் போட்டாச்சின்னு கணக்கு காட்டிடுவானுங்க..
Rate this:
Truth Behind - Tamilnadu,
08-மே-202112:56:13 IST Report Abuse
Truth BehindCool buddy, BJP BJP BJP always. You are doing marketing for them indirectly, keep it up....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X