சில வரி செய்திகள்...: இந்தியா

Added : மே 07, 2021
Share
Advertisement
கொரோனாவுக்கு எம்.எல்.ஏ., பலிலக்னோ: உத்தர பிரதேசத்தின், ரேபரேலி மாவட்டம் சலோன் தொகுதியின், பா.ஜ., - எம்.எல்.ஏ., தால் பகதுார் கோரி, 64. கட்சியின் மூத்த தலைவரான இவர், கொரோனாவில் குணமடைந்த நிலையில், நோய்க்கு பிந்தைய பாதிப்புகளால், லக்னோ மருத்துவமனையில் இறந்தார்.மாணவர்களுக்கு தடுப்பூசி?புதுடில்லி: டில்லியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, உடனடியாக
 சில வரி செய்திகள்...: இந்தியா

கொரோனாவுக்கு எம்.எல்.ஏ., பலி

லக்னோ: உத்தர பிரதேசத்தின், ரேபரேலி மாவட்டம் சலோன் தொகுதியின், பா.ஜ., - எம்.எல்.ஏ., தால் பகதுார் கோரி, 64. கட்சியின் மூத்த தலைவரான இவர், கொரோனாவில் குணமடைந்த நிலையில், நோய்க்கு பிந்தைய பாதிப்புகளால், லக்னோ மருத்துவமனையில் இறந்தார்.

மாணவர்களுக்கு தடுப்பூசி?

புதுடில்லி: டில்லியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, உடனடியாக தடுப்பூசி வழங்க உத்தரவிடக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கலான பொதுநல மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.'தற்போதைய தடுப்பூசிகளை, 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்த முடியுமா' என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம், டில்லி கல்வி அமைச்சகம் பதில் அளிக்க, 'நோட்டீஸ்' அனுப்பியது.

கொரோனா விதிமீறல் வழக்கு

நிவாரி: மத்திய பிரதேசத்தின் நிவாரி மாவட்டத்தில், கொரோனா பாதிப்புடன் திருமண விழாவில் பங்கேற்ற அருண் மிஸ்ரா, ஸ்வரூப் சிங் ஆகியோர் மீது, தொற்றை பரப்ப முயன்றதாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை கொரோனா மையத்தில் சேர்த்தனர். அவர்களுக்கு பாதிப்பு உள்ளதை அறிந்தும், திருமணத்திற்கு அழைத்து வந்த மணமகனின் சகோதரர் ரஞ்சன் நாயக் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவர் தலைமறைவானார்.

குஜராத்தில் சிங்கம் பலி

ஆமதாபாத்: குஜராத்தின் சோம்நாத் மாவட்டம், கிர் வனப்பகுதி அருகே, நவபந்தகர் கிராமத்திற்கு வெளியே, சிங்கம் ஒன்று இறந்து கிடந்ததாக, வன அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில், அதன் முதுகெலும்பு உடைந்திருப்பது உறுதியானது. இதனால், பிற சிங்கங்களுடன் ஏற்பட்ட சண்டையில், அது இறந்திருக்கலாம் என, தெரிகிறது.

வான்ராஜ் பாட்டியா காலமானார்

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்த, மூத்த இசையமைப்பாளர் வான்ராஜ் பாட்டியா, 94, வயது மூப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளால், காலமானார். அங்கூர், பூமிகா உட்பட, பல்வேறு திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர், 6,000க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு பின்னணி இசை அமைத்து உள்ளார். தன் இசை பயணத்தில் இறுதியாக, அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த, 'அக்னி வர்ஷா' என்ற நாட்டிய நாடகத்திற்கு இசை அமைத்தார். நாடகங்கள், 'டிவி' தொடர்களுக்கு இசை அமைத்ததற்காக, பல்வேறு விருதுகள் பெற்றுள்ள இவருக்கு, 2012ல் மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது வழங்கியது.

தலைமை நீதிபதி இரங்கல்

புதுடில்லி: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஒய்.இக்பால், உடல் நலன் பாதிப்பால், டில்லி மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக விசாரணை துவங்கும் முன், அஞ்சலி செலுத்தினார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், எம்.ஒய்.இக்பால் பணியாற்றி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X