பிரதமரின் பேச்சை கிண்டலடித்த ஜார்க்கண்ட் முதல்வருக்கு எதிர்ப்பு

Updated : மே 09, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
பிரதமருடன் நடக்கும் ஆலோசனை கூட்டங்கள் குறித்து, அரசியல் உள்நோக்கங்களுடன், பொதுவெளியில் விதிமுறைகளுக்கு மாறாக, முதல்வர்கள் பகிரும் போக்கிற்கு, பா.ஜ., மேலிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து, மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கடி ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். சர்ச்சைஅப்போது, முக்கிய அறிவிப்புகள்
பிரதமர், பேச்சு,கிண்டல் ,ஜார்க்கண்ட் முதல்வர், எதிர்ப்பு

பிரதமருடன் நடக்கும் ஆலோசனை கூட்டங்கள் குறித்து, அரசியல் உள்நோக்கங்களுடன், பொதுவெளியில் விதிமுறைகளுக்கு மாறாக, முதல்வர்கள் பகிரும் போக்கிற்கு, பா.ஜ., மேலிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து, மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கடி ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். சர்ச்சைஅப்போது, முக்கிய அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை, பிரதமர் வழங்கி வருகிறார்.இதுபோன்ற ஒரு ஆலோசனையில் பங்கேற்ற, ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், அந்த கூட்டம் குறித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்ட கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில், அவர் கூறியிருந்ததாவது:பிரதமர் இன்று பேசினார். வழக்கமான பேச்சு தான். அவர் எப்போதும் பேசுவாரே, மனதின் குரல் நிகழ்ச்சியில்; அதுபோலத் தான் பேசினார். பிரதமர் அவ்வாறு பேசியதை காட்டிலும், முக்கியமான பிரச்னைகளை பட்டியலிட்டு, அவை குறித்து, மற்றவர்களிடம் கருத்துக் கேட்டிருந்தாலோ அல்லது அவை குறித்து, அவர் பேசியிருந்தாலோ நன்றாக இருந்திருக்கும்.இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

ஹேமந்த் சோரனின் இந்த கருத்துக்கு, பா.ஜ., தேசிய அமைப்புச் செயலர் பி.எல்.சந்தோஷ், மிசோராம் முதல்வர் ஜொரம்தாங்கா மற்றும் நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், பா.ஜ., மேலிட வட்டாரங்கள் கூறியதாவது:ஆட்சி நிர்வாகம் என்பது வேறு, அரசியல் என்பது வேறு.

ஆனால், சில முதல்வர்கள், வேண்டுமென்றே, பிரதமருடனான உரையாடலை, அரசியலாக்கும் போக்கை துவக்கியுள்ளனர்.சமூக வலைதளம்டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான், இதை துவக்கி வைத்தார். பிரதமருக்கும், முதல்வருக்கும் இடையிலான பேச்சுகளை, பொது வெளியில் அம்பலப்படுத்துவது சரியல்ல.இதுபோன்ற தரம் தாழ்ந்த செயல்களை கண்டிக்கும் வகையில், சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும், பா.ஜ.,வின் சார்பில், உரிய பதிலடிகள் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-மே-202123:50:49 IST Report Abuse
Pugazh V நாகரீகம் பற்றி ஆரூரங் எழுதுகிறாரா??? உலகமகா ஜோக் இதுதான். இதே பத்திரிகை யில் அநாகரிக சேற்றில் உழலும் சிலதுகளுக்கு இந்த ஆரூரங் அறிவுரை எழுதி அவர்களைத் திருத்த முயலவும். நான் எழுதினேன் பதிவு வாகவிவ்லை. எனவே திருத்த இயலவில்லை. பதிவானாலே படித்து திருந்தப் போவதில்லை. அப்புறம் எங்கே.
Rate this:
Cancel
08-மே-202120:02:13 IST Report Abuse
ஆரூர் ரங் பார்லிமென்ட் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க காங்கிரசிடம் கோடி க் கணக்கில் லஞ்சம் வாங்கி சுப்ரீம் கோர்ட்டில் அதற்கு நியாயம் கற்பித்த அக்கிரமக்காரர்கள்👹 கட்சி இவனுடையது . இப்போ அதே😡 காங்கிரசுடன் கூட்டணி. பின்னர் நாகரீக துக்கு இடமேது ?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
08-மே-202118:19:46 IST Report Abuse
r.sundaram காங்கிரஸ் காரர்களுக்கு தங்கள் எதிர்க்கட்சியில் இருப்பது பிடிக்க வில்லை. அதுவும் எதற்க்காகவாவது மோடியை வம்புக்கு இழுக்க வேண்டும், ராகுல் போல். அவர்களுக்கு அரசியல் தெரியுமே தவிர அரசாங்க நடைமுறைகள் தேரோடியாது போலிருக்கிறது. அவர்கள் தலைவருக்கே தெரியவில்லையே, சட்ட நகலை கிழித்துப் போட்டவர்தானே. அவர்களையும் அவர்கள் ஆளும் மாநிலத்தின் எதிர்கட்சிகள் இதுபோல் திருப்பி தாக்கினால் அப்போது அவர்களுக்கு புரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X