சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 07, 2021
Share
Advertisement
'நீங்கள் இப்படி குதர்க்கம் பேசுவது, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கூட ரசிக்காது...' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை: கடந்த சில நாட்களாக நாடு முழுதும் கொரோனா பரிசோதனை அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று குறைந்துள்ளது என காட்ட முனைகின்றனர். நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்களை ஏமாற்ற

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீங்கள் இப்படி குதர்க்கம் பேசுவது, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கூட ரசிக்காது...' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை: கடந்த சில நாட்களாக நாடு முழுதும் கொரோனா பரிசோதனை அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று குறைந்துள்ளது என காட்ட முனைகின்றனர். நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்களை ஏமாற்ற நினைக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது.


'உங்கள் நம்பிக்கை வீண் போகாது இருக்கட்டும், ஐந்தாண்டுகள் காத்திருப்போம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் அறிக்கை:
தமிழக முன்னாள் முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கு வாழ்த்து கூறினேன். நான் போட்டியிட்ட துறைமுகம் தொகுதியில், தீவிர பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்தவர் அவர். தமிழகத்திற்கு இது போதாத காலம். அவர் மீண்டும் வலுவுடன் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.


'அவர் நினைத்ததும் ஒழித்து விட, கொரோனா ஒன்றும் சாதாரணமானது இல்லை; எல்லாரையும் பாடுபடுத்தித் தான் ஓயும் போலிருக்கிறது...' என, நினைவுபடுத்த தோன்றும் வகையில், திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிக்கை:
நெருப்பாற்றில் நீந்தி, ஏச்சுப் பேச்சுகளை தாண்டி, தி.மு.க.,வின் மூன்றாம் முதல்வராகிறார் ஸ்டாலின். முதல் சவாலாக, கொரோனாவை ஒழிக்க மக்கள் இயக்கமாக செயல்பட முன்வந்து விட்டார்!


'கூட்டணி கட்சியான நீங்களே, ஸ்டாலின் அரசுக்கு இப்படி குடைச்சல் கொடுக்கலாமா; அவர் பதவியேற்றதும், கொரோனா குறைந்து வருகிறது என்றல்லவா கூற வேண்டும்...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை; இறப்பு எண்ணிக்கை கூடுகிறது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போதாது. முழு ஊரடங்கை அறிவிக்கவும், கொரோனா நிவாரண நிதி, 4,000 ரூபாயை உடனே வழங்கவும் வேண்டும்.



'இப்படி, ஒரு மாநில முதல்வரே வன்முறையை கட்டவிழ்த்து விடுவதும், மேற்கு வங்கத்தில் மட்டும் தான் பார்க்க முடிகிறது...' என, சொல்லத் துாண்டும் வகையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு:
மேற்கு வங்க மம்தா பானர்ஜி போன்ற மமதை பிடித்தவர், இந்த உலகிலேயே கிடையாது. அவரை எதிர்த்தவர்கள் யாரும் நல்லபடியாக வாழ்ந்தது இல்லை. அவர்கள் துன்புறுத்தப்பட்டது கடந்த கால வரலாறு. மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறைக்கு அவர் தான் பொறுப்பு.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X