இதே நாளில் அன்று

Added : மே 07, 2021
Share
Advertisement
மே 8, 1967ஆந்திர மாநிலம், குடிவாடா என்ற ஊரில், வசதியான குடும்பத்தில், 1909ம் ஆண்டு பிறந்தவர், கூடூரு வெங்கடாசலம். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, 14 மாதங்கள், வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார்.உ.பி.,யில் உள்ள, பனாரஸ் ஹிந்து பல்கலையில், தாவரவியலில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றார். அரிசி ஆராய்ச்சியாளராக பணியாற்றி, பல்வேறு அரிசி வகையை உருவாக்கினார். இவர்

இதே நாளில் அன்று


மே 8, 1967



ஆந்திர மாநிலம், குடிவாடா என்ற ஊரில், வசதியான குடும்பத்தில், 1909ம் ஆண்டு பிறந்தவர், கூடூரு வெங்கடாசலம். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, 14 மாதங்கள், வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார்.உ.பி.,யில் உள்ள, பனாரஸ் ஹிந்து பல்கலையில், தாவரவியலில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றார். அரிசி ஆராய்ச்சியாளராக பணியாற்றி, பல்வேறு அரிசி வகையை உருவாக்கினார். இவர் உருவாக்கிய, 'எஸ்.ஆர்., - 26, பி' என்ற அரிசி, வெகு பிரபலமானது.
துணை வேளாண் ஆணையராக, மத்திய அரசில் உணவு மற்றும் வேளாண் அமைச்சகத்தில் சேர்ந்தார். விதை உற்பத்தி மற்றும் பயிற்சி திட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார். தேசிய விதை சட்டத்தின் முக்கிய வரைவுகளில், இவரின் பங்கு உண்டு. 'பத்மஸ்ரீ' உட்பட, ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். -1967 மே, 8ம் தேதி தன், 58வது வயதில் இயற்கை எய்தினார்.விவசாய விஞ்ஞானி கூடூரு வெங்கடாசலம் காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X