ராஞ்சி: கொரோனா நிலைமை தொடர்பாக விவாதிக்க பிரதமர் கூட்டிய கூட்டங்கள் மான் கி பாத் நிகழ்ச்சி போல் இருப்பதாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம்சாட்ட, அவருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் அறிவுரை வழங்கியுள்ளார்.
![]()
|
ஜார்கண்டில் காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். அம்மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. தற்போது 59,532 பேர் கொரோனா பாதிப்புடன் உள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 3346 பேர் இதுவரை அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று (மே 06) ஜார்கண்ட், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய நான்கு மாநில முதல்வர்களுடன் கொரோனா நிலைமை பற்றி பேசினார். புதுவை மற்றும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர்களுடனும் கூட்டம் கூட்டினார். தடுப்பூசி பணிகளின் வளர்ச்சி, தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து அவர்களுடன் ஆய்வு செய்ததாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டிருந்தது.
இது பற்றி ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அளித்த பேட்டியில், மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவது போல அவர் நினைப்பதை மட்டும் பிரதமர் பேசுகிறார். மாநிலங்களின் பிரச்னைகள், பணிகள் பற்றி பேசியிருந்தால், கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூறினார். அதனை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு ஜார்கண்ட் மாநில பா.ஜ.க.,வினர் கண்டனம் தெரிவித்தனர்.
அந்த கூட்டத்தில் பிரதமருடன் பேசிய ஆந்திர முதல்வர் ஜெகனும், ஹேமந்த் சோரனின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் பதிவிட்டுள்ளார். அதில், “ நான் உங்களிடம் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நமக்குள் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், இதுபோன்ற அரசியலில் ஈடுபடுவது நம் சொந்த தேசத்தை பலவீனப்படுத்தும். ஒரு சகோதரனாக இதை நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில் இது பழிப்போடுவதற் கான நேரமல்ல. தொற்றுநோயை எதிர்த்து போராட ஒன்றிணைந்து, நமது பிரதமரின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய நேரமிது.” என கூறியுள்ளார்.
![]()
|
In this war against Covid-19, these are the times not to point fingers but to come together and strengthen the hands of our Prime Minister to effectively combat the pandemic. 2/2
— YS Jagan Mohan Reddy (@ysjagan) May 7, 2021
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement