பொது செய்தி

தமிழ்நாடு

கடின உழைப்பிற்கு பாராட்டுகள் போலீசாருக்கு டி.ஜி.பி., கடிதம்

Added : மே 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும்போலீசாருக்கு, டி.ஜி.பி., திரிபாதி பாராட்டு கடிதம் அனுப்பி, நன்றி தெரிவித்து உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், சட்டசபை தேர்தல் அமைதியாகவும், வெற்றிகரமாகவும், நல்ல முறையில் நடைபெற்று உள்ளது. இதற்காக, சமூக விரோதிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தது, உளவு தகவல் சேகரித்தது, மின்னணு
 கடின உழைப்பிற்கு பாராட்டுகள் போலீசாருக்கு டி.ஜி.பி., கடிதம்

சென்னை:தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும்போலீசாருக்கு, டி.ஜி.பி., திரிபாதி பாராட்டு கடிதம் அனுப்பி, நன்றி தெரிவித்து உள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், சட்டசபை தேர்தல் அமைதியாகவும், வெற்றிகரமாகவும், நல்ல முறையில் நடைபெற்று உள்ளது. இதற்காக, சமூக விரோதிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தது, உளவு தகவல் சேகரித்தது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு என, பல்வேறு பணிகளில், காவல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்தீர்கள்.

அதேபோல, தேசிய மற்றும் மாநில கட்சித்தலைவர்கள் பங்கேற்ற, தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கான பாதுகாப்பிலும் திறம்பட திட்டமிட்டு, தவறுகள் ஏதும் நிகழ்ந்து விடாமல் பணியாற்றினீர்கள்.கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த சூழலிலும், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், அனைவரும் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதற்கான களத்தை ஏற்படுத்தி தந்தீர்கள்.

கொரோனா தொற்று பரவல் தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஓட்டுச் சாவடி மற்றும் ஓட்டு எண்ணிக்கை மையங்களில், தேவைக்கேற்ப அதிரடிப் படை மற்றும் அதிவிரைவுப் படையை நிறுத்தி, வியூகங்கள்வகுத்து, திறம்பட பாதுகாப்பு அளித்தது, தங்களின் உன்னதத்தை காட்டுகிறது.கடின உழைப்பு, பணியின் மீது ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வோடு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது, மன நிறைவை தருகிறது.

அனைத்து தரப்பில் இருந்தும், பாராட்டுதலையும் பெற்றுத் தந்துள்ளது.காவல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்ளிட்ட அனைவரின் கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்போடு பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும், என் மனமார்ந்த பாராட்டுகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
13-மே-202108:48:35 IST Report Abuse
Girija நானே இதே போஸ்டில் அடுத்த மாசம் ரிடையர் ஆகணும்னு பயந்துகிட்டு இருக்கேன் .... நீங்க வேற .... ஆயதமாவது ... படையாவது .... புத்தி உள்ள புள்ள பொழச்சுக்கும் ....
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
12-மே-202107:18:09 IST Report Abuse
meenakshisundaram அது சரி அய்யா .ஆனா எனக்கு ஒன்னு புரியலையே அந்த போலீசை (திமுக புள்ளியோட பேசின ) ஏன் ஆயுத பிரிவுக்கு மாற்றினீர்கள் ?அவர் வீட்டுக்கு தண்ணி யாவது விட்டிங்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X