கொரோனா பரவலை தடுக்க அனைத்து கட்சி கூட்டம்:மோடிக்கு சோனியா கோரிக்கை | Dinamalar

கொரோனா பரவலை தடுக்க அனைத்து கட்சி கூட்டம்:மோடிக்கு சோனியா கோரிக்கை

Updated : மே 09, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (15)
Share
புதுடில்லி :''கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்வதில், நாட்டின் சுகாதார அமைப்பில் எந்த குறையும் இல்லை. ஆனால், மக்களை காப்பதில், பிரதமர் நரேந்திர மோடி அரசு தோல்வியடைந்து விட்டது. எனவே, அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்,'' என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டத்தில், அக்கட்சி தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளார்.கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதை
பிரதமர் மோடி, சோனியா, அனைத்து கட்சி கூட்டம்

புதுடில்லி :''கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்வதில், நாட்டின் சுகாதார அமைப்பில் எந்த குறையும் இல்லை. ஆனால், மக்களை காப்பதில், பிரதமர் நரேந்திர மோடி அரசு தோல்வியடைந்து விட்டது.

எனவே, அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்,'' என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டத்தில், அக்கட்சி தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளார்.கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதை அடுத்து, இது குறித்து ஆலோசனை நடத்த, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டத்தை, அக்கட்சி தலைவர் சோனியா நேற்று கூட்டினார்.'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்த இந்த கூட்டத்தில், கொரோனா வைரஸ் பரவல், மத்திய அரசின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தில் சோனியா பேசியதாவது:


அல்லாடும் நிலைமிக கொடூரமான சுகாதார பேரழிவை, இந்த நாடு சந்தித்து வரும் அசாதாரண வேளையில், காங்., - எம்.பி.,க்கள் கூட்டத்தை, கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான உயிர்கள் தினமும் பறிபோகின்றன. லட்சக்கணக்கான மக்கள், அடிப்படை சுகாதார வசதிகளுக்காகவும், உயிர் காக்கும் மருந்துகளுக்காகவும், ஆக்சிஜனுக்காகவும், தடுப்பூசிக்காகவும் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளிலும், சாலைகளிலும், வாகனங்களிலும் மருத்துவ உதவி கேட்டு மக்கள் கதறுவதை பார்க்கையில், இதயமே வெடித்துவிடும் போல் உள்ளது.மக்களின் வலிகளையும், வேதனைகளையும் துடைக்க வேண்டிய இந்த அரசு, மக்களை கைவிட்டு விட்டது. தாங்கள் செய்ய வேண்டிய பெறுப்பையும், கடமையையும், மக்களிடமே தள்ளி விட்டுள்ளது.ஆக்சிஜன், மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர்கள் வினியோகம் தொடர்பாக, நிபுணர்கள் கூறும் கருத்துகளை, இந்த அரசு உதாசீனப்படுத்துகிறது.

தடுப்பூசி கொள்முதலுக்கான திட்டமிடலில் இந்த அரசு தோல்வி அடைந்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில், மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல், அத்தியாவசியமற்ற இதர திட்டங்களுக்கு கோடி கோடியாக நிதி ஒதுக்குகிறது.மருத்துவ உதவி கேட்டு கதறுபவர்களை, பல மாநில அரசுகள் தங்கள் அதிகாரங்களை பயன்படுத்தி கைது செய்கின்றன. உதவி செய்ய முன்வரும் பல அமைப்புகள் மிரட்டப்படுகின்றன.சமூக வலைதளங்களில் வெளியாகும் உண்மைகள் மறைக்கப்படுகின்றன. உதவி கேட்டு வெளியாகும் பதிவுகளை நீக்கும்படி, சமூக வலைதள நிறுவனங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன.
மோடி அரசு தோல்விநாம் தற்போது சந்தித்து வரும் இந்த போர், அரசுக்கும், நமக்குமானது அல்ல; நமக்கும், கொரோனாவுக்குமானது என்பதில், காங்., தெளிவாக இருக்கிறது.இந்த போரில் வெற்றி பெற வேண்டுமானால், அரசியல் வேறுபாடுகளை களைந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து போரிட வேண்டும்.நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து விவாதிக்க, உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் மோடி கூட்ட வேண்டும்.மேலும், பார்லி., நிலைக்குழு கூட்டங்கள் உடனடியாக கூட்டப்பட்டு, தொற்று தடுப்பு நடவடிக்கைக்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும்.இன்னும் காலம் கடந்துவிடவில்லை.

இந்த நெருக்கடியை சமாளிக்க, திறமையான, அமைதியான, தொலைநோக்கு பார்வை உடைய தலைமை தேவை.ஒரு விஷயத்தை தெளிவுபட கூற விரும்புகிறேன். இந்த நாட்டின் சுகாதார அமைப்பில் எந்த குறையுமில்லை. ஆனால், நம்மிடம் உள்ள வளங்களையும், பலங்களையும் சரியான முறையில் பயன்படுத்தி, மக்களை காப்பதில், மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது.இவ்வாறு அவர் பேசினார்.
'முழு ஊரடங்குதவிர்க்க முடியாதது'காங்., - எம்.பி., ராகுல், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நம் நாடு, தற்போது மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. நாடு தழுவிய முழு ஊரடங்கு அறிவிப்பது, தவிர்க்க முடியாததாகி உள்ளது. இதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து சிந்தித்து கொண்டிருக்காமல், மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, அரசுக்கு உள்ளது.முழு ஊரடங்கு அறிவிப்பை எதிர்கொள்ள, மக்களும் தயாராக உள்ளனர்.
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, 6,000 ரூபாய் உதவித்தொகை மற்றும் உணவு பாதுகாப்பு வழங்கிவிட்டு, ஊரடங்கு அறிவிப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தேர்தல் முடிவுகள்சோனியா அதிருப்தி
சமீபத்தில் நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், காங்., கட்சியின் செயல்பாடு குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இது குறித்து சோனியா பேசுகையில், ''ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், நம் கட்சியின் செயல்பாடுகள் மிகவும் வருத்தமளிக்கிறது. முடிவுகள் எதிர்பாராததாக உள்ளன. விரைவில் நடைபெறவுள்ள காங்., செயற்குழு கூட்டத்தில், தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கப்படும்,'' என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X