மாமா பிறந்த நாளுக்கு கமலா ஹாரிஸ் வாழ்த்து

Added : மே 07, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
நியூயார்க்:அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சென்னையில் வசிக்கும் தன் மாமாவின், 80வது பிறந்த நாளுக்கு, தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் பூர்வீகம், தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள, துளசேந்திரபுரம் கிராமம். சென்னையில், அவரது மாமா பாலகிருஷ்ணன், சித்தி சரளா கோபாலன் உள்ளிட்ட உறவினர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில்
 மாமா பிறந்த நாளுக்கு கமலா ஹாரிஸ் வாழ்த்து

நியூயார்க்:அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சென்னையில் வசிக்கும் தன் மாமாவின், 80வது பிறந்த நாளுக்கு, தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் பூர்வீகம், தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள, துளசேந்திரபுரம் கிராமம். சென்னையில், அவரது மாமா பாலகிருஷ்ணன், சித்தி சரளா கோபாலன் உள்ளிட்ட உறவினர்கள் வசிக்கின்றனர்.

இந்நிலையில் பாலகிருஷ்ணன் கூறியதாவது:சமீபத்தில், என், 80வது பிறந்த நாள் வந்தது. என் சகோதரி மகள் கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபராக உள்ள சூழலில், பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என, உறவினர்கள் கூறினர். கமலா ஹாரிஸ் வருவதற்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். துரதிர்ஷ்டவசமாக, கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், பிறந்த நாளை வீட்டிலேயே மிக எளிமையாக கொண்டாடினோம்.

நேரில் வர முடியாத கமலா ஹாரிஸ், தொலைபேசியில் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் கணவர் டக் எம்ஹாப்பும் வாழ்த்து கூறினார். அத்துடன், 'கவலைப்படாதீர்கள் மாமா, உங்கள் சகோதரி மகளை பத்திரமாக பார்த்துக் கொள்வேன்' என்றார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M GM - DAR-ES-SALAAM,தான்சானியா
13-மே-202117:18:44 IST Report Abuse
M GM தினமும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் எண்பதாவது பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். ஒரு வாழ்த்து சொல்வதில் என்ன பெரிய அதிசயம்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
12-மே-202119:25:37 IST Report Abuse
Girija ரெண்டு வருஷத்திற்கு முன்பு இந்த மாமா பற்றி நினைவில்லையா? மதம் மாறியாச்சு, இப்போ சமணர், தேசம் மாறியாச்சு, அப்புறம் என்ன மாமா? கச்சாமி கோத்திரம்
Rate this:
Cancel
Modikumar - West Mambalam,இந்தியா
11-மே-202119:29:04 IST Report Abuse
Modikumar அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மூலம் தான் இந்தியாவுக்கு மிக பெரிய ஆப்பு காத்திருக்கிறது. அது தெரியாமல் முகஸ்துதி பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X