அரசியல் செய்தி

தமிழ்நாடு

நினைவிடங்களில் முதல்வர் அஞ்சலி

Added : மே 07, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா முடிந்ததும், கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள, கருணாநிதி நினைவிடம் சென்றனர். அங்கு அனைவரும், மலர் துாவி மரியாதை செலுத்தினர். ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஆகியோர் மண்டியிட்டு வணங்கினர். அதன்பின், அண்ணாதுரை நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர். அங்கிருந்து புறப்பட்டு,
 நினைவிடங்களில் முதல்வர் அஞ்சலி

சென்னை:முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா முடிந்ததும், கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள, கருணாநிதி நினைவிடம் சென்றனர். அங்கு அனைவரும், மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஆகியோர் மண்டியிட்டு வணங்கினர். அதன்பின், அண்ணாதுரை நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர். அங்கிருந்து புறப்பட்டு, ஈ.வெ.ரா., நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர்.

இதன்பின், முதல்வர் ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு தன் தந்தை கருணாநிதி படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கண் கலங்க, அவரது சகோதரி செல்வி ஆறுதல் கூறினார். தன் தாய் தயாளுவிடம் ஆசி பெற்றார்.

பின், மறைந்த தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் வீட்டிற்கு சென்று, அவரது படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, தன் சகோதரி கனிமொழி வீட்டிற்கும் சென்று, அவரது தாய் ராசாத்தியிடம் ஆசி பெற்றார். பின், அங்கிருந்து புறப்பட்டு, தலைமை செயலகம் சென்றார். அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்கள், அவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.

தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு, போலீசார் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். அதை ஏற்ற பின், முதல்வர் அறைக்கு சென்று, பணிகளை துவக்கினார்.


தலைமை செயலகத்தில் ஸ்டாலின் படம்

தலைமை செயலகத்தில், நுழைவு வாயில் எதிரே, பிரதான கட்டடத்தில், 10 ஆண்டுகளாக ஜெயலலிதா படம் பொருத்தப்பட்டிருந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, அவரது படம் அங்கிருந்து அகற்றப்பட்டது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, அந்த இடத்தில், மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது படம் பொருத்தப்பட்டுள்ளது.


நுழைவு வாயில்களில் மலர் அலங்காரம்

புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து, தலைமை செயலகம் நுழைவு வாயிலில், மலர் மாலைகளால் தோரண வாயில் அமைக்கப்பட்டிருந்தது. தலைமை செயலகத்தின், முதல் நுழைவு வாயில், நான்காவது நுழைவு வாயில், 10வது நுழைவு வாயில்களும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.


அமைச்சர்கள் அறைகளில் நெரிசல்

தலைமை செயலகத்தில், முதல்வர் மற்றும் புதிய அமைச்சர்களை காண்பதற்காக, தி.மு.க., நிர்வாகிகள் ஏராளமானோர், நேற்று குவிந்தனர். பூங்கொத்து மற்றும் பரிசு பொருட்களை கைகளில் ஏந்தியபடி வந்தவர்களை, போலீசார் கெடுபிடி செய்யாமல், உள்ளே அனுமதித்தனர்.

இதன் காரணமாக, அமைச்சர்களின் அறைகள் அமைந்துள்ள, தலைமை செயலக கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளத்திலும், தரை தளத்திலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. கொரோனா குறித்த கவலையின்றி, கட்சியினர் நெருக்கியடித்தபடி, அமைச்சர்களின் அறைகளில் குவிந்தனர்.


பன்னீர்செல்வம்., அறையில் துரைமுருகன்

தலைமை செயலகத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம்., இருந்த அறை, அமைச்சர் துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்த அறை, அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே தளத்தில், கீதாஜீவன், மதிவேந்தன் ஆகியோருக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற அமைச்சர்களுக்கு, தரை தளம், இரண்டாவது தளம் மற்றும் மூன்றாவது தளத்தில், அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர்களை காண வந்த தி.மு.க.,வினர், எந்த அமைச்சருக்கு எந்த அறை என்பது தெரியாமல் திண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
09-மே-202106:14:23 IST Report Abuse
N Annamalai மிக நல்ல சிறந்த திறமையான அரசை கொடுக்கட்டும் .
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
08-மே-202118:22:56 IST Report Abuse
r.sundaram பகுத்தறிவு என்ன செய்ய என்று தெரியாமல் திண்டாடுது.
Rate this:
Cancel
P Ravindran - Chennai,இந்தியா
08-மே-202115:53:36 IST Report Abuse
P Ravindran பகுத்தறிவு சிங்கங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X