பொது செய்தி

தமிழ்நாடு

புதிய தலைமை செயலர் இறையன்பு

Added : மே 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:தமிழக அரசின், 48வது தலைமை செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இறையன்பு நேற்று பொறுப்பேற்றார்.தமிழக அரசின் தலைமை செயலராக, ஜன., 31ம் தேதி, ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டார். தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் மாற்றம் செய்யப்படுவார் என, தகவல் வெளியானது.அதன்படி, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் மாற்றப்பட்டு, புதிய தலைமை செயலராக
 புதிய தலைமை செயலர் இறையன்பு

சென்னை:தமிழக அரசின், 48வது தலைமை செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இறையன்பு நேற்று பொறுப்பேற்றார்.

தமிழக அரசின் தலைமை செயலராக, ஜன., 31ம் தேதி, ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டார். தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் மாற்றம் செய்யப்படுவார் என, தகவல் வெளியானது.அதன்படி, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் மாற்றப்பட்டு, புதிய தலைமை செயலராக இறையன்பு நியமிக்கப்பட்டார்.


வாழ்த்து

அவர் உடனடியாக முதல்வரை சந்தித்து, தான் எழுதிய, 'வையத் தலைமைகொள்' என்ற புத்தகத்தை வழங்கி வாழ்த்து பெற்றார். அதன்பின், புதிய தலைமை செயலராக பொறுப்பேற்றார்.அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், மாலையில், முதல்வர் நடத்திய கூட்டத்தில், தலைமை செயலராக இறையன்பு பங்கேற்றார்.

இவர், சேலம் மாவட்டம், காட்டூர் கிராமத்தில், 1963 ஜூன் 16ல், வெங்கடாசலம் - பேபி தம்பதிக்கு இளைய மகனாக, பிறந்தார். பி.எஸ்சி., வேளாண்மை, எம்.பி.ஏ., ஆங்கிலத்தில் பிஎச்.டி., - எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை, எம்.எஸ்.சி., உளவியல் உட்பட, பல்வேறு பட்டங்களை இறையன்பு பெற்றுள்ளார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் தெரியும். கடந்த, 1987ல் நடந்த, ஐ.ஏ.எஸ்., தேர்வில், தேசிய அளவில், 15வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தார்.

1988 ஆக., 25ல், ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தார்.நாகப்பட்டினம் சப் - கலெக்டர், கடலுார் மாவட்ட கூடுதல் கலெக்டர், காஞ்சிபுரம் கலெக்டர், நகராட்சி நிர்வாகம் இணை ஆணையர், செய்தித் துறை இயக்குனர், முதல்வர் செயலக கூடுதல் செயலர், சுற்றுலாத் துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலர். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர், அண்ணா மேலாண்மை நிலைய இயக்குனர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை முதன்மை செயலர், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் முதன்மை செயலர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். சிறந்த பேச்சாளர். 100க்கும் மேற்பட்ட நுால்களை எழுதி உள்ளார்.


சேலம் மைந்தர்

அதிகாரியாக மட்டுமின்றி, எழுத்தாளர், ஊக்கமூட்டும் பேச்சாளர் என, பன்முகத்தன்மை உடையவர். இவரது மூத்த சகோதரர் திருப்புகழும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக குஜராத்தில் பணிபுரிகிறார். இரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை உருவாக்கிய, சேலத்தில் உள்ள வீடு, இன்றும் எளிமையாக காட்சியளிக்கிறது.கடந்த, 2019 முதல், அண்ணா மேலாண்மை நிலையம், பயிற்சி துறை தலைவராக செயல்பட்டு வந்தார். இவர் எழுதியுள்ள, 100க்கும் மேற்பட்ட நுால்கள், பரிசு, பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளன.


முதல்வரின் செயலர்கள் மாற்றம்!

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், தலைமை செயலர் மட்டுமின்றி, முதல்வர் அலுவலக செயலர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, துறை செயலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் விபரம்:

பெயர் - பழைய பதவி - புதிய பதவி

இறையன்பு - இயக்குனர், அண்ணா மேலாண்மை பயிற்சி மையம் - தலைமை செயலர்

ராஜிவ்ரஞ்சன் - தலைமை செயலர் - மேலாண் இயக்குனர், தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம்

உதயசந்திரன் - கமிஷனர், தொல்லியல் துறை - முதல் செயலர், முதல்வர் அலுவலகம்

உமாநாத் - மேலாண் இயக்குனர், மருத்துவ சேவை கழகம் - இரண்டாம் செயலர், முதல்வர் அலுவலகம்

சண்முகம் - கமிஷனர், அருங்காட்சியகம் - மூன்றாம் செயலர், முதல்வர் அலுவலகம்

அனு ஜார்ஜ் - கமிஷனர், தொழில் மற்றும் வர்த்தகம் - நான்காம் செயலர், முதல்வர் அலுவலகம்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
08-மே-202111:50:50 IST Report Abuse
.Dr.A.Joseph இறையன்பு எளிமையான பொதுவுடைமை சிந்தனையாளர், தமிழ் பற்றாளர்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
11-மே-202105:12:50 IST Report Abuse
meenakshisundaramசில சமயங்களில் சிலருக்கு புகழும் பெரும் தகுதிக்கு மீறியே வந்து விடுகின்றன ,சகாயம் மாதிரி ஆகி விடக்கூடாது...
Rate this:
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
13-மே-202121:22:40 IST Report Abuse
.Dr.A.Josephசகாயம் என்னை நேர்மையாக வேலை செய்ய விட மறுக்கிறார்கள் என்றுதான் சொல்கிறார். அவர் மட்டுமல்ல அவர்போல நிறைய பேர் இருக்கிறார்கள். உமாசங்கர் கிறிஸ்தவத்துக்கு தூக்கவில்லை எனில் அவரும் நல்ல நிர்வாகியே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X