அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஐந்து உத்தரவுகளுக்கு முதல் கையெழுத்து!

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (41+ 234)
Share
Advertisement
சென்னை :முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, முதல் தவணையாக, 2,000 ரூபாய் நிவாரணம்; பால் விலை லிட்டருக்கு, 3 ரூபாய் குறைப்பு; அரசு நகர பஸ்களில், பெண்களுக்கு இலவச பயணம்; தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை உட்பட, ஐந்து முக்கிய அரசாணைகளில், முதல் கையெழுத்திட்டு, முதல் நாளிலேயே சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். தமிழக முதல்வராக,
ஐந்து உத்தரவுகள்,முதல் கையெழுத்து!

சென்னை :முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, முதல் தவணையாக, 2,000 ரூபாய் நிவாரணம்; பால் விலை லிட்டருக்கு, 3 ரூபாய் குறைப்பு; அரசு நகர பஸ்களில், பெண்களுக்கு இலவச பயணம்; தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை உட்பட, ஐந்து முக்கிய அரசாணைகளில், முதல் கையெழுத்திட்டு, முதல் நாளிலேயே சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்.

தமிழக முதல்வராக, ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றார். கவர்னர் மாளிகையில், பதவிப் பிரமாணம் முடிந்த பின், சென்னை தலைமைச் செயலகம் வந்தார். அவரை, அப்போதைய தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் மற்றும் முக்கிய அதிகாரிகள் வரவேற்றனர்.


அரசாணை



முதல்வர் அறைக்கு சென்றதும், இருக்கையில் அமர்ந்தார். முதல் கையெழுத்தாக, தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள, பொது மக்களுக்கு உதவும் வகையிலும், ஐந்து முக்கிய அரசாணைகளை பிறப்பித்தார்.
அவற்றின் விபரம்:

*கொரோனா அச்சுறுத்தலால் மக்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் போக்க, அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும், ஆறுதல் அளிக்கும் வகையில், 4,000 ரூபாய் வழங்கப்படும் என, தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதை நிறைவேற்ற, 2 கோடியே, ஏழு லட்சத்து, 67 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 4,153.39 கோடி ரூபாய் செலவில், 2,000 ரூபாய் வீதம், நிவாரண தொகை, முதல் தவணையாக, மே மாதத்தில் வழங்கப்படும்

*அடுத்து, ஆவின் பால் விலை லிட்டருக்கு, 3 ரூபாய் வீதம், வரும் 16ம் தேதி முதல் குறைத்து விற்பனை செய்யப்படும்

*தமிழகம் முழுதும் உள்ள, அரசு போக்குவரத்து கழகங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும், சாதாரண கட்டண நகர பஸ்களில், பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும், இலவசமாக, 'பஸ் பாஸ்' இல்லாமல், இன்று முதல் பயணம் செய்யலாம். இதனால், போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும், கூடுதல் செலவுத் தொகை, 1,200 கோடி ரூபாயை, அரசு மானியமாக வழங்கும்

*தேர்தல் பிரசாரத்தின் போது, மாவட்டந்தோறும், மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பான மனுக்களை, ஸ்டாலின் பெற்றார். அந்த மனுக்கள் மீது, ஆட்சிக்கு வந்த, 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்வு காணப்படும் என, வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றும் வகையில், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற, திட்டத்தைச் செயல்படுத்த, ஒரு புதிய துறை உருவாக்கப்படும். அதற்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுகிறார்

*கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பலரும், அரசு மருத்துவமனைகளில் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் நலன் கருதி, அவர்கள் சுமையை குறைக்கும் வகையில், சிகிச்சைக்கான கட்டணத்தை, தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கும்.

இதன்படி, முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும், தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்கும்.இத்தகைய ஐந்து கோப்புகளில், முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.இதன் பின், சென்னை வர்த்தக மையத்திற்குச் சென்றார். அப்போதும், தலைமைச் செயலராக ராஜிவ் ரஞ்சன் உடன் சென்றார். தொடர்ந்து கலெக்டர் மாநாடு நடந்தது. அதில், ராஜிவ் ரஞ்சன் மாற்றப்பட்டு, இறையன்பு ஐ.ஏ.எஸ்., புதிய தலைமைச் செயலராக பணியாற்றத் துவங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (41+ 234)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
08-மே-202121:37:56 IST Report Abuse
oce வாசகர் கருத்துக்கள் பிரவுசாகவில்லை.இது போன்ற தொல்லைகள் இனி மேல் அதிகம் இருக்கும்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
08-மே-202121:33:07 IST Report Abuse
oce செய்தி விவரம் பிரவுசாகவில்லை.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
08-மே-202120:56:53 IST Report Abuse
siriyaar அனைத்து நகரபேருந்துகளிலும் இலவசமாக அனுமதிக்காதது ஏமாற்று வேலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X