அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தின் 13வது முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பு

Updated : மே 09, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (11+ 89)
Share
Advertisement
சென்னை :தமிழகத்தின், 13வது முதல்வராக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று பதவியேற்றார். 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...' எனக்கூறி, பதவிப் பிரமாணம் எடுத்தார். முதல்வரைத் தொடர்ந்து, 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.ஸ்டாலின் தலைமையிலான, புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, நேற்று காலை கவர்னர் மாளிகை, திறந்த புல்வெளியில் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக, அமைச்சர்கள்,
தமிழகம், 13வது முதல்வர், ஸ்டாலின் பதவியேற்பு

சென்னை :தமிழகத்தின், 13வது முதல்வராக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று பதவியேற்றார். 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...' எனக்கூறி, பதவிப் பிரமாணம் எடுத்தார். முதல்வரைத் தொடர்ந்து, 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

ஸ்டாலின் தலைமையிலான, புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, நேற்று காலை கவர்னர் மாளிகை, திறந்த புல்வெளியில் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக, அமைச்சர்கள், அவர்களின் குடும்பத்தினர் என, 700 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

நல்ல நேரம் பார்த்து, காலை, 9:00 மணிக்கு, ஸ்டாலின் தன் குடும்பத்தினருடன், விழா அரங்கிற்கு வந்தார். அவரை, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.ஸ்டாலின் மனைவி துர்கா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், சகோதரி கனிமொழி, மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி, மகள் கயல்விழி மற்றும் உறவினர்கள் வந்தனர். காலை, 9:05க்கு, விழா அரங்கிற்கு கவர்னர் வந்தார்.
அவரை, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து கொடுத்துவரவேற்றனர்.அமைச்சர்களை கவர்னருக்கு ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார்; அதன்பின், தன் குடும்பத்தினரை அறிமுகம் செய்தார். ஸ்டாலின் பேரக் குழந்தைகளை, கவர்னர் தட்டிக் கொடுத்தார்.இதன்பின், கவர்னரும், ஸ்டாலினும் மேடைக்கு சென்றனர். தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து, முறைப்படி பதவியேற்பு நிகழ்ச்சி துவங்கியது.


latest tamil newsபதவி பிரமாணம்தமிழக முதல்வராக ஸ்டாலின், காலை, 9:10 மணிக்கு பதவிப் பிரமாணம் எடுத்தார். அவருக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.கவர்னர், 'ஐ எம்.கே.ஸ்டாலின்' என கூறியதும், ஸ்டாலின், 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...' எனக்கூறி, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்; பின், ரகசிய காப்பு உறுதிமொழியும் ஏற்றார்.அப்போது, விழா அரங்கில் இருந்த அனைவரும், கரகோஷம் எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர். கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து, தலைமை செயலர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதை பெற்ற ஸ்டாலின், கவர்னருக்கு பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார்.


latest tamil news


Advertisement
அமைச்சர்கள்இதன்பின், துரைமுருகன் முதல் கயல்விழி வரை, ஒருவர் பின் ஒருவராக, 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். கவர்னர் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தேசிய கீதம் ஒலிக்க, விழா நிறைவடைந்தது.கவர்னருடன், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, தேநீர் விருந்து நடந்தது.


latest tamil news

ஓ.பி.எஸ்.,கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., முன்னாள் சபாநாயகர் தனபால், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் ஆகியோர், ஒரே மேஜையில் அமர்ந்து, தேநீர் அருந்தினர்.தேநீர் விருந்து முடிந்த பின், முதல்வர் ஸ்டாலின், பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்புடன் புறப்பட்டார். அமைச்சர்கள், அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட கார்களில் சென்றனர்.


latest tamil newsதுர்கா ஆனந்த கண்ணீர்முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின், 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...' எனக் கூறியபோது, விழாவிற்கு வந்தவர்கள் கரகோஷம் எழுப்பினர். அப்போது, மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த ஸ்டாலின் மனைவி துர்கா, ஆனந்த கண்ணீர் விட்டார். உடனடியாக, கண்ணீரை துடைத்துக் கொண்டார்.


கூட்டணி கட்சி தலைவர்கள்latest tamil news
*முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., - முன்னாள் சபாநாயகர் தனபால், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்

*தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழக காங்., தலைவர் அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூ., செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தி.க., தலைவர் வீரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


சமூக இடைவெளி 'மிஸ்சிங்'*அழைப்பிதழ் வைத்திருந்தோர் மட்டுமே, கவர்னர் மாளிகை நுழைவு வாயிலில் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும், கைகளை சுத்தம் செய்து கொள்ள, கிருமி நாசினி, 'என் - 95' முக கவசம் வழங்கப்பட்டன மேடையில், கவர்னர் மற்றும் முதல்வருக்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மேடைக்கு கீழே, முதல் இரண்டு வரிசையில், அமைச்சர்களுக்காக நாற்காலிகள் சமூக இடைவெளியுடன் போடப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் இருக்கைகள், சமூக இடைவெளியின்றி போடப்பட்டிருந்தன

*விழா தொகுப்பாளினி, அவ்வப்போது, 'அனைவரும் முக கவசத்தை, வாய் மற்றும் மூக்கை மூடும்படி அணியுங்கள்; சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்' என, அறிவித்தபடி இருந்தார்

*நிகழ்ச்சி முடிந்ததும், தேநீர் மற்றும் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை வாங்க சென்றவர்களும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை

*முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றதும், அவர்களுக்கு யாரும் பூங்கொத்து வழங்க வேண்டாம் என, அறிவிக்கப்பட்டது. அதை ஏற்று வந்திருந்தவர்கள், பூங்கொத்து கொடுக்காமல் வாழ்த்து கூறினர்

*பதவியேற்பு நிகழ்ச்சியை, அனைவரும் கண்டு களிக்கும் வகையில், ஆங்காங்கே பிரமாண்டமான, 'டிஜிட்டல்' திரைகள் அமைக்கப்பட்டு, பதவியேற்பு நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.


latest tamil news

பிரசாந்த் கிஷோர் பங்கேற்புசட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற, அரசியல் ஆலோசகராக செயல்பட்டவர், பிரசாந்த் கிஷோர். அவர் நேற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அவரை, ஸ்டாலின்
மருமகன் சபரீசன் ஆரத்தழுவி வரவேற்றார்.


இருக்கைகள் ஒதுக்குவதில் திணறல்*முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு, இருக்கை வசதி செய்யப்படாததால், அவர்கள் விழா அரங்கிற்கு வந்து, சிறிது நேரம் நின்றனர். அதன்பின், அங்கிருந்தோர் இருக்கைகளை எடுத்து வந்து, அமைச்சர்களின் வரிசைக்கு பின்னால் போட்டு, அவர்களை அமர வைத்தனர்

*அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பி.எஸ்., - முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு, ஆறாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. அதன்பின், மூன்றாவது வரிசையில் நாற்காலிகள் போடப்பட்டு, ஓ.பி.எஸ்., அந்த வரிசையில் அமர வைக்கப்பட்டார்.


நினைவிடங்களில் முதல்வர் அஞ்சலிlatest tamil news
சென்னை :முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா முடிந்ததும், கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள, கருணாநிதி
நினைவிடம் சென்றனர். அங்கு அனைவரும், மலர் துாவி மரியாதை செலுத்தினர். ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஆகியோர் மண்டியிட்டு வணங்கினர்.
அதன்பின், அண்ணாதுரை நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர். அங்கிருந்து புறப்பட்டு, ஈ.வெ.ரா., நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர். இதன்பின், முதல்வர் ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு தன் தந்தை கருணாநிதி படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் கண் கலங்க, அவரது சகோதரி செல்வி ஆறுதல் கூறினார். தன் தாய் தயாளுவிடம் ஆசி பெற்றார். பின், மறைந்த தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் வீட்டிற்கு சென்று, அவரது படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, தன் சகோதரி கனிமொழி வீட்டிற்கும் சென்று, அவரது தாய் ராசாத்தியிடம் ஆசி பெற்றார். பின், அங்கிருந்து புறப்பட்டு, தலைமை செயலகம் சென்றார். அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்கள், அவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு, போலீசார் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். அதை ஏற்ற பின், முதல்வர் அறைக்கு சென்று, பணிகளை துவக்கினார்.


தலைமை செயலகத்தில் ஸ்டாலின் படம்தலைமை செயலகத்தில், நுழைவு வாயில் எதிரே, பிரதான கட்டடத்தில், 10 ஆண்டுகளாக ஜெயலலிதா படம் பொருத்தப்பட்டிருந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, அவரது படம் அங்கிருந்து அகற்றப்பட்டது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, அந்த இடத்தில், மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது படம் பொருத்தப்பட்டுள்ளது.


நுழைவு வாயில்களில் மலர் அலங்காரம்புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து, நேற்று தலைமை செயலகம் நுழைவு வாயிலில், மலர் மாலைகளால் தோரண வாயில் அமைக்கப்பட்டிருந்தது. தலைமை செயலகத்தின், முதல் நுழைவு வாயில், நான்காவது நுழைவு வாயில், 10வது நுழைவு வாயில்களும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.


அமைச்சர்கள் அறைகளில் நெரிசல்தலைமை செயலகத்தில், முதல்வர் மற்றும் புதிய அமைச்சர்களை காண்பதற்காக, தி.மு.க., நிர்வாகிகள் ஏராளமானோர், நேற்று குவிந்தனர். பூங்கொத்து மற்றும் பரிசு பொருட்களை கைகளில் ஏந்தியபடி வந்தவர்களை, போலீசார் கெடுபிடி செய்யாமல், உள்ளே அனுமதித்தனர்.இதன் காரணமாக, அமைச்சர்களின் அறைகள் அமைந்துள்ள, தலைமை செயலக கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளத்திலும், தரை தளத்திலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. கொரோனா குறித்த கவலையின்றி, கட்சியினர் நெருக்கியடித்தபடி, அமைச்சர்களின் அறைகளில் குவிந்தனர்.


ஓ.பி.எஸ்., அறையில் துரைமுருகன்தலைமை செயலகத்தில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இருந்த அறை, அமைச்சர் துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்த அறை, அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே தளத்தில், கீதாஜீவன், மதிவேந்தன் ஆகியோருக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற அமைச்சர்களுக்கு, தரை தளம், இரண்டாவது தளம் மற்றும் மூன்றாவது தளத்தில், அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.நேற்று அமைச்சர்களை காண வந்த தி.மு.க.,வினர், எந்த அமைச்சருக்கு எந்த அறை என்பது தெரியாமல் திண்டாடினர்.

Advertisement
வாசகர் கருத்து (11+ 89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
08-மே-202123:06:31 IST Report Abuse
வெகுளி கிழமை: வெள்ளிக்கிழமை.... எண்: 13வது ..... ரொம்ப கெடுதலாச்சே.... என்ன பரிகாரம் பண்ணனும்ன்னு எஸ்ராவை கேளுங்க.....
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-மே-202117:31:08 IST Report Abuse
Endrum Indian உலகில் மிகவும் அற்புதமான பிரசித்தி பெற்ற எண் 13 அதாவது துரதிர்ஷ்டமான எண்???மிக மிக மிக நல்ல பொருத்தம்
Rate this:
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
08-மே-202114:05:54 IST Report Abuse
TAMILAN அடிமை போய் , கொத்தடிமை தி.மு.க வந்திருக்கின்றது
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
08-மே-202114:27:32 IST Report Abuse
Srinivas....எதிர்கட்சி பதவிக்கு அடித்துக்கொண்டு சட்டையை பிச்சிக்கிட்டானுங்களே. இப்பவாவது முடிவு செஞ்சானுங்களா? இல்லை வடகத்தியான் காலில் விழுந்துதான் தீர்க்கணுமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X