அரசியல் செய்தி

தமிழ்நாடு

புகழுரையோ, பொய்யுரையோ வேண்டாம்

Updated : மே 09, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை:''புகழுரையோ, பொய்யுரையோ எதிர்கொள்ளக்கூடிய கட்டாயம் எனக்கில்லை. முழு உண்மையை, நேருக்கு நேர் சந்திப்போம். தீர்வு குறித்து சிந்திப்போம்; மக்கள் மகிழ்ச்சி அடையும் சூழ்நிலையை உருவாக்குவோம்,'' என, மாவட்ட கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.நடவடிக்கைகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன்,
புகழுரை, பொய்யுரை,  கலெக்டர்கள், ஸ்டாலின் உத்தரவு

சென்னை:''புகழுரையோ, பொய்யுரையோ எதிர்கொள்ளக்கூடிய கட்டாயம் எனக்கில்லை. முழு உண்மையை, நேருக்கு நேர் சந்திப்போம். தீர்வு குறித்து சிந்திப்போம்; மக்கள் மகிழ்ச்சி அடையும் சூழ்நிலையை உருவாக்குவோம்,'' என, மாவட்ட கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


நடவடிக்கை



கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் ஸ்டாலின், நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆய்வு நடத்தினார்.அப்போது, ஸ்டாலின் பேசியதாவது:கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, இரு வாரங்களில், மேலும் உயர வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.நோய் தொற்றால் பாதிப்பு உயரும் போது, படுக்கை வசதி, ஆக்சிஜன் தேவை, மருந்துகள் தேவை அதிகரிக்கும்.எனவே, நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும், மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.மருத்துவத் துறை, காவல் துறை, உள்ளாட்சி துறை போன்ற துறைகள் ஒருங்கிணைந்து, நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். நோய் பரவலை கட்டுக்குள் வந்தால், கட்டமைப்பு சுமையை குறைத்திட முடியும்.


தேவையான முயற்சி



இது தொடர்பான கண்காணிப்பு அலுவலர்கள், அனைத்து பணியாளர்கள், இணைந்து பணியாற்ற வேண்டும்.இறப்புக்களை குறைத்திட, மருத்துவர்களும், செவிலியர்களும், மற்ற பணியாளர்களும், இரவு பகல் பாராமல் அரும்பணியாற்றி வருகின்றனர்.அவர்களின் அயராது உழைப்பு, கொரோனா உச்சத்தை எட்டும் நிலையில், அர்ப்பணிப்பு உணர்வுடன் மேலும் தொடர வேண்டும்.கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை ஆகியோரை, இப்பணியில் ஈடுபடுத்திட, தேவையான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும்.மருத்துவமனைகளில், 'ரெம்டெசிவர்' போன்ற மருந்துகள், ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா பாதிப்பால், 45 வயதுக்கு மேற்பட்டோர் இறக்கும் அபாயம் உள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி அவசியம்.எனவே, தகுதியான அனைவரும், தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை, தமிழகத்தில் சற்று குறைவாக உள்ளது.இந்த குறியீட்டில், தேசிய அளவில் தமிழகம் முன்னிலை பெற, மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.


கூடுதல் கவனம்



சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில், தொற்று பாதிப்பு கூடுதலாக உள்ளது.இங்கு தொற்று கட்டுப்பட்டால் மட்டுமே, நோய் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும். எனவே, அங்கு பணிபுரியும் அலுவலர்கள், நோய் பரவலை கட்டுப்படுத்தவும், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தவும், கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். திருப்திகரமாக இருக்கிறது என, நமக்கு நாமே ஆறுதல் கூறிக் கொள்ளும் கூட்டம் அல்ல.உண்மையை நேருக்கு நேர் சந்திக்கும் மனப்பக்குவம் இருந்தால் மட்டுமே, பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.எனவே, அலுவலர்கள் உள்ளதை உள்ளபடி முன் வைத்து, தங்கள் தேவைகளை, அமைப்பில் உள்ள குறைபாடுகளை, கடக்க வேண்டிய தூரத்தை, ஒளிவு மறைவில்லாமல், எடுத்து வைக்க வேண்டும்.புகழுரையோ, பொய்யுரையோ எதிர்கொள்ளக்கூடிய கட்டாயம் எனக்கில்லை. முழு உண்மையை நேருக்கு நேர் சந்திப்போம். தீர்வு குறித்து சிந்திப்போம்.


மகிழ்ச்சி



மக்கள் மகிழ்ச்சி அடையும் சூழ்நிலையை உருவாக்குவோம்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
09-மே-202105:44:57 IST Report Abuse
meenakshisundaram நாங்க இப்பத்தான் மாநில மற்றும் மோடி அரசுகளை திட்டி திட்டியே வெற்றிக்கனியை பரித்துள்ளோம் என்கிறாரா ?
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-மே-202100:11:26 IST Report Abuse
Pugazh V சரிதான்.. தலைமைச் செயலரை ஜெயலலிதா இப்படி அருகில் நிற்க வைத்ததில்லை. அறை வாசலிலேயே பத்தடி தள்ளி தான் நிற்க வைப்பார். அகங்காரப் பெண்மணி பாவம் இருட்டறையில் 75 நாட்கள் சித்திரவதைப் பட்டு போய்ச் சேர்ந்தார். கூட இருந்தவங்களே போட்டு தள்ளிட்டீங்களேபா...சே.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-மே-202100:08:02 IST Report Abuse
Pugazh V செய்த ஊழல்கள் கொள்ளைகளுக்காக நான் ஜெயிலுக்கு போகிறேன் நீ முதல்வர் என்று முதல்வரான.ஓபிஎஸ் போல அல்ல. அம்மாவை மேல அனுப்பியாச்சு நான் ஜெயிலுக்கு போறேன் நீ முதல்வர் என்று முதல்வர் ஆன இபிஎஸ் போல அல்ல. தடைகள் எதிர்ப்பு கள் அவதூறுகள் அனைத்தையும் முறியடித்து, மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின். நல்லாட்சி யின் உதயம் நன்றாக தெரிகிறது. விடிய ஆரம்பித்து விட்டது. இனி இருட்டில் வாழும் உயிரினங்கள் ஓடி ஒளியட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X