அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிர்க்கட்சி தலைவர் பதவி : ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., மோதல்

Updated : மே 09, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (56+ 33)
Share
Advertisement
சென்னை :சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், நேற்று அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், எவ்வித முடிவும் எடுக்காமல் நிறைவடைந்தது.சட்டசபை தேர்தலில், 66 தொகுதிகளில் வெற்றி பெற்ற, அ.தி.மு.க.., பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. எனவே, எதிர்க்கட்சி தலைவராக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.,சும், இணை
எதிர்க்கட்சி ,தலைவர், பதவி ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., மோதல்

சென்னை :சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், நேற்று அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், எவ்வித முடிவும் எடுக்காமல் நிறைவடைந்தது.

சட்டசபை தேர்தலில், 66 தொகுதிகளில் வெற்றி பெற்ற, அ.தி.மு.க.., பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. எனவே, எதிர்க்கட்சி தலைவராக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.,சும், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.,சும் விரும்புகின்றனர்.
இருவரும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை, விட்டுக் கொடுக்க விரும்பாத நிலையில், நேற்று மாலை, 4:30 மணிக்கு, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.

மாலை, 4:00 மணியில் இருந்து, எம்.எல்.ஏ.,க்கள் வரத் துவங்கினர்; 4:45 மணிக்கு, ஓ.பி.எஸ்., வந்தார். அடுத்து, 5:10க்கு, இ.பி.எஸ்., வந்தார். இருவரும் ஜெயலலிதா படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், முதல் தளத்தில் காத்திருக்க, ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ்., தரை தளத்தில், தனித்தனி அறையில் அமர்ந்தனர். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன் ஆகியோர், இ.பி.எஸ்., அறைக்கு சென்று, அவரிடம் பேசி விட்டு, ஓ.பி.எஸ்., அறைக்கு சென்றனர்.

அங்கிருந்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அவர்கள் கூறியதை ஏற்க மறுத்து கோபமாக பேசினார். அதைத் தொடர்ந்து, அறைக்கதவுகள் மூடப்பட்டன. இரவு, 8:00 மணி வரை பேச்சு நடந்தும் தீர்வு ஏற்படவில்லை.எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தால், கட்சியின் பொதுச்செயலராக தன்னை நியமிக்க வேண்டும் என, இ.பி.எஸ்., நிபந்தனை விதிக்க, அதே நிபந்தனையை ஓ.பி.எஸ்.,சும் விதித்துள்ளார். இதனால், தீர்வு ஏற்படவில்லை.
இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்த நிலையில், மேல் தளத்தில் இருந்த, எம்.எல்.ஏ.,க்களில் பலர் புறப்பட்டு சென்றனர். அ.தி.மு.க., - சின்னத்தில் வெற்றி பெற்ற, புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தியும் புறப்பட்டு சென்றார்.

இரவு, 8:45க்கு, ஓ.பி.எஸ்.,சும், இ.பி.எஸ்.,சும் முதல் தளத்திற்கு சென்றனர். சட்டசபை தலைவரை தேர்வு செய்வதில், முடிவு ஏற்படாததால், கூட்டத்தை, 10ம் தேதி காலை, 9:30 மணிக்கு கூட்டி முடிவு செய்வோம் எனக்கூறி, புறப்பட்டு சென்றனர்.அதன்பிறகு ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., மற்றும் மூத்த நிர்வாகிகள், ஜெயலலிதா நினைவிடம் சென்று, மரியாதை செலுத்தினர். இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள போட்டி, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டம் குறித்து, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:
எம்.எல்.ஏ.,க்களை சந்தித்த ஓ.பி.எஸ்.,சும், இ.பி.எஸ்.,சும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கூறியது போல, மக்கள் பணியாற்ற வேண்டும் என்றனர். பிறகு ஒரு நாளில் எதிர்க்கட்சி தலைவர், ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவார்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை, அ.தி.மு.க., நிறைவேற்றியது. ஆட்சி இல்லை என்றாலும், மக்களுக்காக பணியாற்றுவோம். ஆளும் கட்சியின் மக்கள் விரோத போக்குகளை எதிர்ப்போம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம். கட்சியில் எந்த குழப்பமும் கிடையாது.
இவ்வாறு, அவர் கூறினார்.


அ.தி.மு.க., - தொண்டர்கள் மோதல்



அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் நேற்று கட்சி அலுவலகம் வந்ததும், அவரது கார் ஓரமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு வந்த, இ.பி.எஸ்., கார், அலுவலகம் முன் நிறுத்தப்பட்டது. இதற்கு ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒருங்கிணைப்பாளர் கார் தான் அலுவலகம் முன் நிற்க வேண்டும் என, வலியுறுத்தினர். அதற்கு இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க., மாவட்ட செயலர் ஆதிராஜாராம், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்.அதன்பிறகு ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள், அவரை வாழ்த்தி கோஷம் எழுப்ப, இ.பி.எஸ்.,சை வாழ்த்தி, அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்ப, தொடர்ந்து பதட்டம் நிலவியது.

Advertisement




வாசகர் கருத்து (56+ 33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-மே-202100:18:46 IST Report Abuse
Pugazh V மொத்த உறுப்பினர் எண்ணிக்கை யில் 10% மாவது உறுப்பினர் இருந்தால் தான் எதிர்க்கட்சி தலைவர் பதவி வகிக்க முடியும். இந்த பதவிக்கு கேபினட் மினிஸ்டருக்கான அனைத்து சலுகைகளும் சம்பளமும் உண்டு. இதெல்லாம் இங்கே எத்தனை பேருக்கு தெரியும்??
Rate this:
Cancel
Palan - Bangalore,யூ.எஸ்.ஏ
08-மே-202121:57:31 IST Report Abuse
Palan EPS எல்லாம் ஒரு தலைவர்?. காலில் விழுந்து CM ஆனவர். JJ வின் ஆயிர கணக்கான ரூபா வைத்துக்கொண்டு எல்ல MLA களுக்கும் லஞ்சம் கொடுத்து 4 ஆண்டு ஆச்சி எப்படியோ தாக்கு புடிச்சு இருந்தார். இப்போதும் எப்பொடியோ எதிர் கட்சி தலைவர் ஆக பார்க்கிறார். ஒரு சொத்தை தலைவர்.
Rate this:
Cancel
RG RG - Chennai,யூ.எஸ்.ஏ
08-மே-202121:54:52 IST Report Abuse
RG RG உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட்டே . நம்ம ரெண்டு பேரால ... என்ன காமெடி டா இது
Rate this:
SUNDARASIVAM S - baghram,இந்தியா
09-மே-202111:05:40 IST Report Abuse
SUNDARASIVAM Sஉடையவன் இல்லாட்டி ஒரு முழம் கட்டைதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X