எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

15 நிமிடங்களில் ஆக்சிஜன் குறைபாட்டை சரி செய்யலாம் : சொல்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்

Updated : மே 08, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
கொரோனாவின் இரண்டாம் அலை, மருத்துவ கட்டமைப்பை உலுக்கிப் போட்டுள்ளது. இந்நிலையில், சித்த வைத்தியம் மற்றும் ஆயுர்வேதத்தின் பக்கம், தமிழக அரசின் கவனம் திரும்பி உள்ளது. இருப்பினும், நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் மீது, பெரும்பாலான மக்களுக்கு சந்தேகம் உள்ளது. பாரம்பரிய மருத்துவ முறைகளால், கொரோனாவை குணப்படுத்த முடியுமா என்ற கேள்வியோடு, சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத
 15 நிமிடங்கள், ஆக்சிஜன்,  ஆயுர்வேதம் சொல்கின்றனர்

கொரோனாவின் இரண்டாம் அலை, மருத்துவ கட்டமைப்பை உலுக்கிப் போட்டுள்ளது. இந்நிலையில், சித்த வைத்தியம் மற்றும் ஆயுர்வேதத்தின் பக்கம், தமிழக அரசின் கவனம் திரும்பி உள்ளது. இருப்பினும், நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் மீது, பெரும்பாலான மக்களுக்கு சந்தேகம் உள்ளது.

பாரம்பரிய மருத்துவ முறைகளால், கொரோனாவை குணப்படுத்த முடியுமா என்ற கேள்வியோடு, சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர்களான டாக்டர் சுதீர் - டாக்டர் மீரா சுதீர் தம்பதியை பேட்டி கண்டோம். இவர்கள், உ.பி., மாநிலம் மீரட் நகரில் உள்ள, 'ஆனந்த் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்' என்ற, பல்நோக்கு மருத்துவமனையில், ஐ.சி.யூ., பிரிவில் சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் அளித்த பேட்டி:


*எப்போதிலிருந்து ஐ.சி.யூ., நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறீர்கள்; இதுவரை எத்தனை பேருக்கு அளித்துள்ளீர்கள்?கடந்த, 2020செப்டம்பர் முதல், ஆனந்த் மருத்துவமனையுடன் இணைந்து, அங்கு, ஐ.சி.யூ.,வில் சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு காணொலி வாயிலாக சிகிச்சை அளித்து வருகிறோம். அங்குள்ள, அலோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுடன் இணைந்து இதை செய்கிறோம். இதுவரை, 1,000த்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்துள்ளோம்.


*அலோபதி பல்நோக்கு மருத்துவமனையில், ஆயுர்வேத சிகிச்சையா; நம்ப முடியவில்லையே?ஆனந்த் மருத்துவமனை, 300 படுக்கை வசதி உடையது. இதன் பங்குதாரர்களில் ஒருவரான, டாக்டர் சஞ்ஜய் ஜெயின்; எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். அவருக்கு ஆயுர்வேதத்தில், அபார நம்பிக்கை உண்டு. அதனால், ஆனந்த் மருத்துவமனையிலும் அந்த பிரிவை ஏற்படுத்தி உள்ளார்.கடந்த, ௨௦௨௦ ஏப்ரலில் இருந்தே, இந்த மருத்துவமனைக்கு வரும், கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத சிகிச்சையை, அலோபதியுடன் சேர்த்து அளித்து வந்தனர். அதில், நல்ல பலன் கிடைத்ததால், ஐ.சி.யூ.,வில் சேர்க்கப்படுவோருக்கு, ஆயுர்வேத சிகிச்சை அளிக்க விரும்பினர். அந்த நேரத்தில் தான் நாங்கள், கடந்த ஆண்டு ஆகஸ்டில், பெங்களூரு ஜெனோமிக்ஸ் சென்டர் நடத்திய, சர்வதேச கருத்தரங்கில், எங்களின் சிகிச்சை முறை பற்றிய ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டோம். அதை பார்த்து விட்டு, டாக்டர் சஞ்ஜய் ஜெயின் எங்களை அழைத்தார்.


*ஐ.சி.யூ.,வில் சிகிச்சை எப்படி; எவ்வளவு துாரம் நோயாளிகளை குணப்படுத்த முடிகிறது?ஐ.சி.யூ.,வுக்கு வரும் ஒவ்வொருவரும் கொரோனா தவிர, பிற பிரச்னைகளோடும் வருகின்றனர். அதாவது, நீரிழிவு நோய், நிமோனியா, கல்லீரல் பிரச்னை, உடல் பருமன் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒவ்வொருவருக்கும், தனித்தனியே தான் சிகிச்சையை முடிவு செய்ய முடியும். அனைவருக்கும், ஒரே மருந்து என்பது ஆயுர்வேதத்தின் அணுகுமுறை அல்ல. இதுவரை, 1,000த்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்துள்ளோம்.

அதில், ஒரு இறப்பு கூட இல்லை என்பதை, ஆனந்த் மருத்துவமனையின் ஆவணங்களில் பார்க்கலாம். தகுந்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காதவர்கள் அல்லது 10- - 20 நாட்கள் ஆக்சிஜன் உதவியோடு இருந்தவர்களே, அனேகமாக ஐ.சி.யூ., நோயாளிகளாக மாறுகின்றனர். நீண்ட காலம் ஆக்சிஜன் உதவியில் இருந்தால், நிமோனியா பாதிப்பு ஏற்படும். எவ்வளவு விரைவாக ஆக்சிஜன் உதவி மற்றும் ஐ.சி.யூ.,வில் இருந்து நோயாளிகள் வெளியேறுகின்றனரோ, அந்த அளவுக்கு, அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். அந்த வகையில், ஆயுர்வேத சிகிச்சை வாயிலாக, ஐ.சி.யூ.,வில் உள்ளவர்களை, அதிகபட்சம் ஒரு வாரத்தில் பூரணமாக குணப்படுத்தி விடுகிறோம். மருத்துவமனையை பொறுத்தவரை, ஐ.சி.யூ.,வில் வேகமாக இடம் காலியாவது, அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.
*பல கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது. அந்த வசதிகளோடு ஆயுர்வேத மருந்துகள் கொடுப்பது என்பது வேறு; ஆயுர்வேத சிகிச்சை மட்டும் அளிப்பது வேறு அல்லவா?ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், ஆக்சிஜனை பிடித்து, உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கின்றன. கொரோனா தொற்று பாதிக்கும் போது, சிவப்பு அணுக்களின் ஆக்சிஜன் பிடிப்பு திறன் குறைகிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும் போது, சிலிண்டர் வாயிலாக ஆக்சிஜன் கொடுப்பது, கொரோனா நோயால் ஏற்படும், ஆக்சிஜன் குறைபாடுக்கு தற்காலிக நிவாரணம் தான். அது. குணப்படுத்துவதற்கான சிகிச்சை கிடையாது.

உதாரணமாக, சென்னையில் உள்ள எங்கள் மருத்துவமனைக்கு, 55 வயது நபர் ஒருவர் பெருங்களத்துாரில் இருந்து வந்தார். அவருக்கு மூச்சுத் திணறல் உட்பட, கொரோனாவிற்கான அனைத்து அறிகுறிகளும் இருந்தன. ஆனால், பரிசோதனையில் நோய் இல்லை என, சொல்லி விட்டனர். அதனால், எந்த மருத்துவமனையிலும் இடம் கிடைக்கவில்லை. எங்களிடம் வந்த போது, அவரது ஆக்சிஜன் அளவு, 88 சதவீதமாக இருந்தது. 88 என்பது, மிகவும் குறைவான அளவு. அவருடைய நிலைக்கு ஏற்ற, சில ஆயுர்வேத மருந்துகளை கலந்து கொடுத்தோம். அடுத்த, 15 நிமிடங்களில் அவரது ஆக்சிஜன் அளவு, 98 சதவீதமாகி விட்டது. தொடர் சிகிச்சையில், அவருக்கு ஆக்சிஜன் அளவு சீரானது. ஆயுர்வேத வைத்தியம் வாயிலாக, கொரோனாவால் ஏற்படும் மூச்சுத்திணறலை கையாள முடியும்.

இதே போல, சித்த வைத்தியத்திலும் மருந்துகள் உள்ளன. மூச்சுத்திணறல் ஏற்படும் போது தான், அனேக கொரோனா நோயாளிகள் அஞ்சுகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறை, அதை கொண்டு சேர்க்கும் இயந்திரத்தில் கோளாறு ஆகியவற்றால், பல நோயாளிகள் இறப்பதாக செய்திகள் வாசிக்கிறோம். அத்தகைய சூழலை சுலபமாக தவிர்த்து, உயிர் காக்கலாம். இதனால், அரசின் அலோபதி மருத்துவமனைகள் மீதான பாரமும் வெகுவாக குறையும்.
*இவ்வளவு நோயாளிகளை பார்த்ததில், கொரோனா பற்றி ஏதேனும் புதிய புரிதல் ஏற்பட்டுள்ளதா?வழக்கமாக, வைட்டமின் ஏ, டி மற்றும் ஜிங்க் ஊட்டங்களை சாப்பிடச் சொல்கின்றனர். இவற்றை விட மிக முக்கியமாக தேவைப்படுவது இரும்புச்சத்து. தகுந்த நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வந்தால், அனைவரையும் காப்பாற்ற முடியும்; இறப்புகளை முற்றிலும் தவிர்க்கலாம்.


*அலோபதி மருத்துவமனை உதவியின்றி, தனிப்பட்ட முறையில், கொரோனாவுக்கு சிகிச்சை அளித்திருக்கிறீர்களா?எங்களை நாடும் அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து வருகிறோம். இதுவரை யாரும், ஐ.சி.யூ.,விற்கு செல்ல வேண்டிய நிலை வரவில்லை. மருந்தையும்,
பத்தியத்தையும் கடைப்பிடிப்பவர்கள் அனைவரும், ஒரு வாரத்துக்குள் குணமாகி விடுகின்றனர்.


*கொரோனா கிருமி மரபணுவில், இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டு, இன்னும் வீரியமாகியுள்ளது. மஹாராஷ்டிராவில் தோன்றிய இது, தற்போது, தென் மாநிலங்களில் பரவி வருகிறது என்கின்றனர். இதையும், ஆயுர்வேதத்தில் சரி செய்ய முடியுமா?வைரஸ் கிருமிகள் உருமாறியபடியே இருக்கும். ஒரு மருந்தால் கட்டுப்படுத்தினால், அதற்கு எதிர்ப்பு சக்தி உருவாக்கிக் கொண்டு உருமாறும். ஆயுர்வேதத்தில், கிருமிகளை குறிவைக்கும் வைத்தியம் பொதுவாக கையாளப்படுவதில்லை. கிருமிகள் வாழ, பல்கிப் பெருக நம் உடம்பின் சூழல் அவற்றிற்கு தோதாக இருக்க வேண்டும். அதனால் தான், 100 பேருக்கு தொற்று ஏற்பட்டால், அதில், ௨ சதவீதம் பேர் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆயுர்வேதம் உடலில் உள்ள சூழலை மாற்றுகிறது. கிருமி வாழ முடியாதபடி ஆக்குகிறது. அதனால், கொரோனா எத்தனை முறை உருமாறினாலும், ஆயுர்வேதத்தால் பூரணமாக குணப்படுத்த முடியும்.


*தமிழக அரசு, சித்தா - ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறக்கவுள்ளதாக கூறப்படுகிறதே...அப்படி தமிழக அரசு சிகிச்சை மையங்களை தொடங்கும் அல்லது தொடங்குவதற்கு அனுமதி வழங்குமேயானால், அது வரவேற்கத்தக்கது. அலோபதியா, ஆயுர்வேதமா என்பது தற்போதைய கேள்வியல்ல. பலர் உயிரிழந்து வருகின்றனர். அலோபதியும், ஆயுர்வேதமும் கைகோர்த்து உயிர் காக்க பாடுபட வேண்டும். கடந்த ஆண்டு பல, 'கோவிட் கேர்' மையங்களில், சித்த மருத்துவர்கள் பணியாற்றினர். தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் சிகிச்சையால், ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்.

இந்த சித்த மருத்துவர்களிடம், அனைத்து நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய விபரமும் உள்ளது. அவற்றை சேகரித்து முறையாக ஆய்வு செய்தால், சித்தா மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளை அனைவரும் ஏற்கும் வகையில் அங்கீகரிக்க முடியும். இந்த முயற்சியை அரசு தான் செய்ய முடியும். அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள். இவ்வாறு அவர்கள் கூறினர்.Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
11-மே-202104:52:17 IST Report Abuse
Varatharaajan Rangaswamy மிகவும் பாராட்டத்தக்க செயல்பாடு. இந்த தம்பதிகளின் அனுபவத்தை மற்ற ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் தெரிவித்து, தேவை ஏற்பட்டால் பயிற்சிக்கும் அரசு ஏற்பாடு செய்யலாமே
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-மே-202112:27:09 IST Report Abuse
D.Ambujavalli எப்பொழுதுமே தோட்டத்து மூலிகைக்கு மதிப்பில்லை அதையே ஒரு கேப்சூல், மாத்திரையாக்கி அல்லோபதிக் பெயரிட்டுக் கொடுத்தால் பத்து மடங்கு விலைக்கு கூட வாங்குவோம் நம் சுபாவம் தெரிந்துதான், மருத்துவர்களும், மருந்துக் கம்பெனிகளும் கொள்ளையடிக்கிறார்கள்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
08-மே-202123:03:16 IST Report Abuse
தல புராணம் // அலோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுடன் இணைந்து இதை செய்கிறோம். // இவனுங்க ஸ்டீராய்ட் மருந்துகளை தங்களின் மருந்துகளுடன் கலந்து கொடுப்பது மிகவும் சகஜமாக செய்கிறார்கள். தவறாக பிரயோகம் செய்தால் ஸ்டீராய்ட் மருந்துகள் பேராபத்தை தரும் என்று தெரிந்தே செய்வார்கள்.. பலன் உடனடியாக இருப்பது போன்ற நிலை ஏற்படும். இவர்களில் 99% ஏமாற்று பேர்வழிகள்.. மீதி 1% தானாக குணமைடையும் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்து பேர் வாங்கியவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X