பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் கொரோனா தடுப்பூசி 'ஸ்டாக்' இல்லை; மக்கள் ஏமாற்றம்

Updated : மே 09, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கோவை :கோவை மாநகராட்சி வசம் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால், மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில், 32 மருத்துவமனைகள் உள்ளன. நாளொன்றுக்கு, 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் மருந்து சப்ளை செய்ய வேண்டும். ஆனால், சில நாட்களாக சொற்ப அளவிலான இருப்பு வழங்கப்படுகிறது. கடந்த, 4ல் ஒவ்வொரு மண்டலத்துக்கும், 200 வீதம்
 கோவை, கொரோனா தடுப்பூசி .'ஸ்டாக்' இல்லை; மக்கள் ஏமாற்றம்

கோவை :கோவை மாநகராட்சி வசம் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால், மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில், 32 மருத்துவமனைகள் உள்ளன. நாளொன்றுக்கு, 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் மருந்து சப்ளை செய்ய வேண்டும். ஆனால், சில நாட்களாக சொற்ப அளவிலான இருப்பு வழங்கப்படுகிறது.

கடந்த, 4ல் ஒவ்வொரு மண்டலத்துக்கும், 200 வீதம் பிரித்து 1,000 டோஸ் மருந்து வழங்கப்பட்டது. நாளொன்றுக்கு, 100 பேர் வீதம் இரு நாட்களில் தடுப்பூசி போடப்பட்டது. மீதமுள்ள இருப்பு வைத்திருந்த மையங்களில், நேற்று ஊசி போடப்பட்டது. உப்பிலிபாளையத்தில் உள்ள பள்ளியில் நேற்று தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.

அதிகாலை, 4:30 மணிக்கு பொதுமக்கள் சென்று காத்திருந்தனர். காலை, 7:30 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டு, 9:30 மணிக்கு வாருங்கள் என திருப்பி அனுப்பப்பட்டனர். வீட்டுக்குச் சென்று , 9:30 மணிக்கு வந்தவர்களுக்கு, 'ஸ்டாக்' தீர்ந்து விட்டது; அடுத்த வாரம் வாருங்கள் என கூறியதால், பொதுமக்கள் கோபம் அடைந்து, அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

அவர்கள் கூறுகையில்,'இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட வேண்டும். இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மூன்று நாட்களாக அலைகிறோம். டோக்கன் கொடுத்து விட்டு, வீட்டுக்குச் சென்று , வாருங்கள் என்றார்கள். இப்போது, மருந்து இல்லை என்கிறார்கள். எங்களை தேவையின்றி அலைக்கழிக்கிறார்கள்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
08-மே-202122:21:26 IST Report Abuse
PRAKASH.P Seems other than Chennai no stock
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
08-மே-202117:26:21 IST Report Abuse
Dr. Suriya சொல்லறதே எல்லாம் செய்ச்சிருவாங்களா இருந்தா இநேரம் எல்லோரும் ரெண்டு ஏக்கருக்கு சொந்தக்காரங்களா ஆயிருப்பாங்க
Rate this:
Cancel
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி நிலைமையை சீர் செய்யவேண்டும். சகோதரி. திருமதி. வானதி ஸ்ரீனிவாசன் எம் எல் எ உடனடியாக இந்த விஷயத்தில் மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X