பொது செய்தி

இந்தியா

அரசு பணியாளர்கள் வருகை: ஒழுங்குபடுத்த உத்தரவு

Updated : மே 09, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :'கொரோனா பாதிப்பை கருத்தில் வைத்து, மத்திய அரசு அலுவலகங்களில், அதிகாரிகள் மற்றும் பணியாளர் வருகையை ஒழுங்குபடுத்த வேண்டும்' என, துறை செயலர்களுக்கு, தொழிலாளர் நல அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு:கொரோனா பரவல் அதிகரிப்பால், மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் வருகையை ஒழுங்குபடுத்தும் பணிகளை,
 அரசு பணியாளர்கள் வருகை , ஒழுங்கு,


புதுடில்லி :'கொரோனா பாதிப்பை கருத்தில் வைத்து, மத்திய அரசு அலுவலகங்களில், அதிகாரிகள் மற்றும் பணியாளர் வருகையை ஒழுங்குபடுத்த வேண்டும்' என, துறை செயலர்களுக்கு, தொழிலாளர் நல அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு:கொரோனா பரவல் அதிகரிப்பால், மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் வருகையை ஒழுங்குபடுத்தும் பணிகளை, துறை செயலர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணியர், அலுவலகம் வரத் தேவையில்லை; வீடுகளில் இருந்து பணியாற்றலாம்.அலுவலகங்களில், அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் கூடுவதை தவிர்க்க, நேர வாரியாக பணி ஒதுக்கீடு மேற்கொள்ளலாம்.

கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் அதிகாரிகள் உட்பட அனைவரும், அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.அவர்கள் அனைவரும்,வீடுகளில் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக பணிகளை தொடரலாம். தொலைபேசி மற்றும்

ஆன்லைன் தொடர்புகளை, முறையாக பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
08-மே-202108:46:42 IST Report Abuse
Rajarajan நேர்ல போனாலே, இன்னிக்கு, நாளைக்கு, அப்பறம், ஆள் இல்லை, எதுக்கு வந்த, அவரை பாரு, இவரை பாரு, கவனிச்சிட்டு போ, அடுத்த மாசம் வா, இப்போ நிறுத்தி வெச்சிருக்கோம், ஆபிஸ்ர் இல்ல, இப்படி தான் பதில் வரும். இவங்க வீட்ல ஒக்காந்து அப்படி வேலை செஞ்சிருவாங்க ?? ஆங்கிலத்தில் மனு எழுதிட்டு போனாலே, படிக்காமலே, அவரை பாருன்னு திருப்பி அனுப்பறவங்க ஆச்சே ??? ம்ம்ம்ம். கரும்பு தின்ன கூலியா ??? ஜமாய்ங்க. சம்பளம், சலுகைகள் எல்லாம் கொடுத்து, வீட்லயே ஆவியும் வேற. அப்பறம் எப்படிப்பா நாடு முன்னேறும் ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X