பொது செய்தி

தமிழ்நாடு

கத்தி கத்தி வெடித்து சாகும் சிறுமலை சில்வண்டுகள்: அதிகாலை முதல் அந்தி வரை கீச்சிடும் அதிசயம்

Added : மே 08, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மதுரை:மதுரை, திண்டுக்கல் ஒட்டிய சிறுமலை வனப்பகுதி சார்ந்த குடியிருப்பு, தோட்டங்களில் பகல் வேளைகளில் சில்வண்டுகளின் ரீங்காரம் அருவியின் பேரிரைச்சலாய் கேட்டு மாலையில் அடங்கி விடுகிறது.சிறுமலை தென்மலை குடியிருப்பு பகுதி, தோட்டங்களுக்கு செல்லும் போது மரங்கள் அடர்ந்த பகுதியில் மேலிருந்து சாரலாய் தண்ணீர் தெறித்து விழும். தொடர்ந்து பேரிரைச்சலாய் சில்வண்டுகளின்
 கத்தி கத்தி வெடித்து சாகும் சிறுமலை சில்வண்டுகள்: அதிகாலை முதல் அந்தி வரை கீச்சிடும் அதிசயம்

மதுரை:மதுரை, திண்டுக்கல் ஒட்டிய சிறுமலை வனப்பகுதி சார்ந்த குடியிருப்பு, தோட்டங்களில் பகல் வேளைகளில் சில்வண்டுகளின் ரீங்காரம் அருவியின் பேரிரைச்சலாய் கேட்டு மாலையில் அடங்கி விடுகிறது.

சிறுமலை தென்மலை குடியிருப்பு பகுதி, தோட்டங்களுக்கு செல்லும் போது மரங்கள் அடர்ந்த பகுதியில் மேலிருந்து சாரலாய் தண்ணீர் தெறித்து விழும். தொடர்ந்து பேரிரைச்சலாய் சில்வண்டுகளின் ரீங்காரம் கேட்கிறது. அண்ணாந்து பார்த்தால் வானம் வெளிச்சமாய் காணப்படுகிறது. எங்கிருந்து சாரல் போல விழுகிறது என்பதை கவனித்தால் மரங்களில் ஆங்காங்கே வண்டுகள் காணப்படுகின்றன.

தரையிலிருந்து பத்தடி வரையுள்ள மரத்தண்டுகளில் வண்டுகளின் உயிரற்ற கூடுகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.இதுகுறித்து அப்பகுதி விவசாயி ரவிச்சந்திரன் கூறியதாவது: எல்லா பகுதியிலும் சித்திரையில் சில்வண்டுகள் ரீங்காரம் அதிகமாக இருக்கும். இவை சூரியன் உதிப்பதற்கு முன் கத்த ஆரம்பிக்கும். அஸ்தமனமாகும் போது நிசப்தமாகி விடும். இடைப்பட்ட நேரம் முழுவதும் காதைப் பிளக்கும் வகையில் இரைச்சலாக இருக்கும்.

எங்கள் தோட்டத்தில் சத்தம் அதிகமாக இருக்கும். அவ்வப்போது மழை போல சாரலாய் தண்ணீர் விழும். மறுநாள் காலையில் ஆங்காங்கே மரங்களில் முதுகு மட்டும் இரண்டாக பிளந்து உள்ளே வெறும் கூடாய் காணப்படுகிறது. இவற்றின் முட்டை, புழுப்பருவம் இதுவரை பார்த்ததில்லை. மண்ணுக்குள் தோண்டினாலும் இதே அளவில் பூச்சியாகவே காணமுடிகிறது. பூச்சியை வெட்டினால் வெள்ளைநிற ரத்தம் வருகிறது. இவை கத்தி கத்தி உடல் வெடித்து செத்துப் போகிறது என நாங்கள் நினைக்கிறோம்.

சித்திரையில் இந்த வண்டுகளை பார்த்து விட்டால் கோடை மழை நிச்சயம் வரும் என நம்புகிறோம். அதிகபட்சமாக வைகாசி கடைசி வரை இந்த வண்டுகளின் ரீங்காரம் கேட்கும். அதன் பிறகு பார்க்கவும் முடியாது. ரீங்காரத்தை கேட்கவும் முடியாது. இந்த வண்டுகள் மரத்தையோ, பயிர்களையோ சேதப்படுத்தியதில்லை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. Samson Kirubakaran - Madurai,இந்தியா
10-மே-202113:14:27 IST Report Abuse
J. Samson Kirubakaran சில்வண்டுகள் வெடித்து சாகிறது என்பது தவறான தகவல் , சில்வண்டுகளின் வளர்ச்சி நிலையில் தோலை உரித்து பறக்க ஆரம்பித்துவிடும்.
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
10-மே-202108:55:55 IST Report Abuse
N Annamalai மனிதனை தவிர அனைத்து உயிர்களும் பூமிக்கு பயன் தருபவை .மனிதன் மட்டும் தான் அழிக்க யோசிக்கிறவன் .
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
08-மே-202118:29:45 IST Report Abuse
RajanRajan இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு ஜீவராசிகளும் இந்த பூமியை சீரமைப்பதற்காகவே படைக்கப்படுகின்றன எனும் தத்துவத்தை மனிதன் எப்போது உணருவான் என்பதே இங்கு கேள்வி.???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X