பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன் தட்டுப்பாடு: மக்களே உஷார்

Added : மே 08, 2021
Share
Advertisement
தமிழகத்திற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே கொரோனா வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்.இந்தியா முழுவதும் கொரோனா 2ம் அலை கதிகலங்க வைத்து வருகிறது. வட மாநிலங்கள் முழுதும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் தற்போது வரை ஓரளவு போதுமான அளவிற்கு 'ஆக்சிஜன் உள்ளது. ஆனால் தேவை
 ஆக்சிஜன் தட்டுப்பாடு: மக்களே உஷார்

தமிழகத்திற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே கொரோனா வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்.

இந்தியா முழுவதும் கொரோனா 2ம் அலை கதிகலங்க வைத்து வருகிறது. வட மாநிலங்கள் முழுதும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் தற்போது வரை ஓரளவு போதுமான அளவிற்கு 'ஆக்சிஜன் உள்ளது. ஆனால் தேவை அதிகரித்தால் சிக்கல் ஏற்படும்.பொதுவாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை மிகவும் குறைவே.

சாதாரண மருத்துவமனைகளில் ஒரு மாதத்திற்கு 10 முதல் 15 வரை மட்டுமே சிலிண்டர்கள் தேவைப்பட்டன. அரசு மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளில் தான் திரவ ஆக்சிஜன் டேங்க் வைக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. தற்போது சாதாரண மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கே 10 சிலிண்டர் வரை தேவைப்படுகிறது. பெரிய மருத்துவமனைகளின் நிலை மிகவும் மோசம். அவர்கள் நோயாளிகளை அனுமதிப்பதே இல்லை.

தனியார் மருத்துவமனைகளில் பெரும் சிபாரிசுகளுடன் செல்வோருக்கு கூட இப்போது இடம் கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் ஆக்சிஜன் வசதி படுக்கைகள் இல்லாததே. நேற்று தமிழக மருத்துவத்துறை சார்பில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில் சென்னையில் உள்ள 135 மருத்துவமனைகளிலும் சேர்த்து ஐ.சி.யு.,வில் 16 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

செங்கல்பட்டில் உள்ள 45 மருத்துவமனைகளில் ஐ.சி.யு.,வில் 18 இடங்கள் மட்டுமே உள்ளன என குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்துக்கு தற்போது ஆக்சிஜன் தேவை 475 மெட்ரிக் டன். கையிருப்பு வேகமாக காலியாகி வருகிறது. இன்றைக்குள் மாற்று ஏற்பாடு செய்யாவிடில் நாளை முதல் பற்றாக்குறை ஏற்படும்.

ஏற்கனவே கேரள மாநிலம் காஞ்சிக்கோட்டில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆக்சிஜன் நிறுத்தப்பட்டுள்ளது. கேரளத்தில் தேவை அதிகரித்துள்ளதால் அங்கிருந்து அனுப்ப வில்லை. டில்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நிறுவி உள்ளது.

அத்தகைய யூனிட்டுகளை சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் நிறுவினால் நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும். ஸ்டெர்லைட் நிறுவனம் முழு வீச்சில் இயங்கி ஆக்சிஜன் தயாரிக்க துவங்கும் வரை நாம் வேறு மாநிலங்களை நம்பித்தான் இருக்க வேண்டி உள்ளது.

தினந்தோறும் பாதிப்புகளையும், அவர்களுக்காக உறவினர்கள் ஆக்சிஜனுக்கும், மருந்துக்கும் காத்திருப்பதையும் கதறுவதையும் பார்க்கிறோம். இந்த சூழலில் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள இருக்கும் ஒரே வழி முகக்கவசம், சமூக இடைவெளி, தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பது மட்டுமே. எனவே பொதுமக்களே உஷார்... உஷார்... உஷார்....

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X