அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : இது கொள்ளை கணக்கு!

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (91)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற, இரண்டு, எம்.பி.,க்கள், எந்த பதவியை ராஜினாமா செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனராம். அந்த இரண்டு, 'மஹானுபாவன்கள்' வேறு யாருமில்லை... அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி,

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற, இரண்டு, எம்.பி.,க்கள், எந்த பதவியை ராஜினாமா செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனராம். அந்த இரண்டு, 'மஹானுபாவன்கள்' வேறு யாருமில்லை... அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தான். இந்த இருவரும், ராஜ்யசபா, எம்.பி.,யாக உள்ளனர். எம்.எல்.ஏ., ஆகிவிட்டால், அமைச்சர் ஆகி விடலாம் என்ற கனவில், இருவரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர்.



latest tamil news



'எப்படியாவது வெற்றி பெற வேண்டும்' என்ற எண்ணத்தில், பணத்தை வாரி இறைத்து, அவர்கள் ஜெயித்தும் விட்டனர். ஆனால், அ.தி.மு.க., தோற்று விட்டது. இப்போது, எம்.எல்.ஏ., அல்லது எம்.பி., இதில் எந்த பதவியை துறப்பது என, அவர்கள் குழம்பியுள்ளனர். மனிதனுக்கு, ஆசை இருக்கலாம்; ஆனால் இந்த இருவருக்கும் இருந்தது, பேராசை. ராமாயணத்தில் வரும் ஒரு நிகழ்வு தான் நினைவுக்கு வந்தது. தசரத மஹாராஜா, ஒரு முறை, அந்தணன் ஒருவனைப் பார்த்து, 'நீ எவ்வளவு துாரம் ஓடுகிறாயோ, அது வரையிலான நிலம் உனக்குச் சொந்தம்' என்றார். பேராசை பிடித்த அந்த அந்தணன் ஓடினான், ஓடினான்... கால்கள் சோர்ந்தன; கண்கள் இருண்டன; இறுதியில் மூர்ச்சையாகி விழுந்து மாண்டான். அவனுக்கு கிடைத்தது, ஆறடி நிலம் தான்!


latest tamil news



இதைத் தான், கவிஞர் சுரதா, 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா...' என, அழகாகச் சொன்னார். 'மக்கள் நலம்' என்று பேசும் இந்த அரசியல்வாதிகள் எல்லாம், சுயநலவாதிகள் தான். சின்ன மீனைப் போட்டு, பெரிய மீனை பிடிக்கும் காரியவாதிகள். ஏற்கனவே பதவி இருப்போர், மற்றொரு பதவிக்கு போட்டியிடக் கூடாது என, சட்டம் இயற்ற வேண்டும். இல்லை என்றால், பேராசை பிடித்த அரசியல்வாதிகளால், மக்களின் வரிப்பணம், அரசு ஊழியர்களின் நேரம் மற்றும் உழைப்பு வீணாகும். பதவிக் காலம் முடியும் முன்பே, தங்கள் சுய லாபத்திற்காக, அந்த பதவியை ராஜினாமா செய்வது, தொகுதி மக்களுக்கு செய்யும் துரோகம். எந்த பதவியில் இருந்தால், அதிகம் கொள்ளையடிக்கலாம் என்ற கணக்கு தான், இந்த மாதிரியான சம்பவங்களுக்கு காரணம்

Advertisement




வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
14-மே-202110:27:50 IST Report Abuse
karutthu தசரத மஹாராஜா, ஒரு முறை, அந்தணன் ஒருவனைப் பார்த்து, 'நீ எவ்வளவு துாரம் ஓடுகிறாயோ, அது வரையிலான நிலம் உனக்குச் சொந்தம்' என்றார். பேராசை பிடித்த அந்த அந்தணன் ஓடினான், ஓடினான்.............உங்கள் கருத்தில் தவறு இருக்கிறது எந்த அந்தணனும் அந்த காலத்தில் பேராசை பிடித்தவராக இருந்திருக்கமாட்டார்கள் .......ஏனென்றால் அந்த காலத்து அந்தணர்களுக்கு நல்ல மரியாதை ...மதிப்பு சமுதாயத்தில் இருந்தது .....இந்த காலத்தைப்போல் அந்த காலத்தில் வஞ்சிக்கப்பட்டதில்லை ....ஆ ஊ என்றால் உடனே அந்தணனை பற்றி எழுதணுமா ???
Rate this:
Cancel
சிவ.இளங்கோவன் . - முதல்வன் ஸ்டாலின் ,இந்தியா
08-மே-202123:22:06 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . ஒரத்தநாட்டில் புல்லட் ராமச்சந்திரன் என்ற எளிய மனிதர்தான் வெற்றிபெறுவார் என்று அணைத்து கருத்துக்கணிப்புகளும் சொல்லியது .. இதனால் அதிர்ச்சியடைந்த வைத்திலிங்கம் வெற்றிபெறுவது கடினம் என்று ஓட்டு ஒன்றுக்கு இரண்டாயிரம் வீதம் தொகுதிமுழுவதும் விநியோகம் செய்தார் .. 50 கோடிகளுக்கு மேல் வாரி இறைத்து தான் இந்த வெற்றியை பெறமுடிந்தது . ஊழல் செய்த பணம் மற்றும் கல்லணை கால்வாய் பராமரிப்பு திட்டங்களுக்கான ஒப்பந்தம் இரண்டாயித்து ஐநூறு கோடியில் கிடைத்த கமிஷன் மற்றும் பாபனாசம் துரைக்கண்ணு விடம் இருந்து கைப்பற்றிய கண்டைனர் முழுவதும் இவரது கட்டுப்பாட்டில்தான் இருந்ததாக கூறுகின்றனர் .
Rate this:
Cancel
Teees - madurai,இந்தியா
08-மே-202123:18:53 IST Report Abuse
Teees mufX
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X