10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டி ; இந்தியாவிற்கு ஐ.நா உதவி

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
நியூயார்க் : ஐ.நா.,வின் பல்வேறு அமைப்புகள், இந்தியாவுக்கு, 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளன.இந்தியா, கொரோனா சவாலை எதிர்கொள்ள, உலக நாடுகள் உதவி வருகின்றன.ஐ.நா., செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது: இந்தியாவுக்கு, ஐ.நா.,வின் உலக சுகாதார நிறுவனம், ஐ.நா., சிறார் நல நிதியம், ஐ.நா., மக்கள் தொகை நிதியம் ஆகியவை, 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளன.

நியூயார்க் : ஐ.நா.,வின் பல்வேறு அமைப்புகள், இந்தியாவுக்கு, 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளன.இந்தியா, கொரோனா சவாலை எதிர்கொள்ள, உலக நாடுகள் உதவி வருகின்றன.



latest tamil news



ஐ.நா., செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது: இந்தியாவுக்கு, ஐ.நா.,வின் உலக சுகாதார நிறுவனம், ஐ.நா., சிறார் நல நிதியம், ஐ.நா., மக்கள் தொகை நிதியம் ஆகியவை, 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளன. அத்துடன், ஒரு கோடி முக கவசங்கள், சுகாதார பணியாளர்களுக்கான, 15 லட்சம் முக கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், ஆக்சிஜன் உற்பத்தி பிரிவுகளையும் வழங்கியுள்ளன. கொரோனா தடுப்பூசியின் வீரியத்தை பாதுகாக்கும், குளிர்சாதன பெட்டிகளையும் அளித்துள்ளன.


latest tamil news



கொரோனா வைரஸ் ஆய்வு சாதனம், பரிசோதனை பொருட்கள், விமான நிலையங்களில் தட்பவெப்ப சோதனை இயந்திரங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளன.பல இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து, கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\


latest tamil news





6 நாட்களில் ஆறு விமானங்கள் :-


அமெரிக்கா, ஆறு நாட்களில், ஆறு விமானங்களில், 1,500 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 1.25 லட்சம் பேருக்கு தேவையான, 'ரெம்டெசிவிர்' மருந்து, 10 லட்சம் கொரோனா பரிசோதனை பொருட்கள் ஆகியவற்றை அனுப்பியுள்ளது. மேலும், 550 மொபைல் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 25 லட்சம் முக கவசங்களையும் சப்ளை செய்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
08-மே-202114:02:46 IST Report Abuse
sahayadhas வெள்ளையர்களுக்கு எல்லாரும் நன்றி சொல்வோம்.
Rate this:
Cancel
Raj - Namakkal,சவுதி அரேபியா
08-மே-202112:24:19 IST Report Abuse
Raj "இது எங்கள் உள்நாட்டு பிரச்சனை இதில் வெளிநாட்டு சக்திகளை அனுமதிக்க மாட்டோம்." எங்கேயோ கேட்டமாதிரி இருக்குல்ல ...
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
08-மே-202111:31:54 IST Report Abuse
sahayadhas நிறைய தாங்க digital India விற்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X