சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. திருட்டு வழக்கில் சிறுவன் கைதுதிருப்பூர் : திருட்டு வழக்கில், 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், வீரபாண்டி, கருப்பகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் கங்காதரன், 44. கடந்த ஏப்., 14ம் தேதி குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். அப்போது, அவரது வீட்டு பீரோவில் இருந்த, 13 சவரன் நகை திருடு போனது. வீரபாண்டி போலீசார் விசாரித்து வந்தனர்.கங்காதரன் வீட்டுக்கு

தமிழக நிகழ்வுகள்
1. திருட்டு வழக்கில் சிறுவன் கைதுதிருப்பூர் : திருட்டு வழக்கில், 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், வீரபாண்டி, கருப்பகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் கங்காதரன், 44. கடந்த ஏப்., 14ம் தேதி குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். அப்போது, அவரது வீட்டு பீரோவில் இருந்த, 13 சவரன் நகை திருடு போனது. வீரபாண்டி போலீசார் விசாரித்து வந்தனர்.கங்காதரன் வீட்டுக்கு அருகே வாடகை வீட்டில் வசித்து வரும், 17 வயது சிறுவன் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்த வீரபாண்டி போலீசார், மூன்று சவரன் நகையை மீட்டனர்.அதன்பின், ஜே.எம்.எண்: 1, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், கோவை - அவிநாசி ரோட்டிலுள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.latest tamil news2. உ.பி., வாலிபர் கொலை சக தொழிலாளி கைது
பல்லடம் : பல்லடம் அருகே, உ.பி., வாலிபரை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், நாரணாபுரத்தில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில், உ.பி., மாநிலம், பியாரேபூர் பகுதியை சேர்ந்த சூரியபால் மகன் விஷால் பால், 17 என்பவர் பணிபுரிந்து வந்தார். அங்குள்ள காட்டுப்பகுதியில், நேற்று தலை நசுங்கிய நிலையில், கொல்லப்பட்டு கிடந்தார். பல்லடம் போலீசார், சடலத்தை மீட்டு, உ.பி., மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்த மோனு குமார் பால், 26 என்பவரை கைது செய்தனர்.விஷாலும், மோனு குமாரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தனர். அங்கு பணிபுரிந்த பெண் தொழிலாளியை மோனுகுமார் காதலித்தார்.


latest tamil newsஇதை விஷால், நிறுவன உரிமையாளரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக, மோனுகுமாருக்கும், விஷாலுக்கும் இடையே தகராறு ஏற்பட, இருவரும் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். விஷால் மீது ஆத்திரத்தில் இருந்த மோனு குமார், அவரை காட்டுப்பகுதிக்கு வர சொல்லி, இருவரும் மது அருந்தினர்.போதையில் விஷாலின் கைகளை கட்டி, அவரது தலையில் கல்லை போட்டு மோனு குமார் கொலை செய்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

3. வாலிபரை பாட்டிலால் குத்திய நபருக்கு சிறை
கோவை, : கோவை செல்வபுரம் கல்லாமேட்டை சேர்ந்தவர் உதயகுமார், 29; பெயின்டர். நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள குடோனில் அமர்ந்து, தனது மொபைல்போனில், பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த மாசாணம், 27 என்பவர் சத்தமாக பாட்டுக் கேட்கக்கூடாது என, உதயகுமாரை எச்சரித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த மாசாணம், அங்கு கிடந்த பாட்டிலை உடைத்து உதயகுமாரின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயமடைந்த உதயகுமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து, மாசாணத்தை சிறையில் அடைத்தனர்.

4. ரேஷன் அரிசி பறிமுதல்
பந்தலுார் : பந்தலுார் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் ஆய்வு மேற்கொண்டதில், பந்தலுார் ஹட்டி மயானபகுதியில் ஜீப் ஒன்று நிற்பதை பார்த்து அதை ஆய்வு செய்தனர். அதில், 16 மூட்டைகளில் 500 கிலோ அரிசி பதுக்கி கடத்த இருப்பதாக தெரியவந்தது. தொடர்ந்து தேவாலா போலீசார், ஜீப்பை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின்பு, ஜீப் பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் முகமது,30, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


latest tamil news
5. தேனி அருகே கோஷ்டி மோதல் சிறுவன் கொலையில் நால்வர் கைது
தேனி : கோஷ்டி மோதலில், பாட்டிலால் தாக்கி சிறுவன் கொலை செய்யப்பட்டார். நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம், தப்புக்குண்டைச் சேர்ந்த வனிதா, பாப்பு ஆகியோர் மீது, சட்டவிரோதமாக மது விற்றதாக, போலீசார் வழக்குப் பதிந்தனர். மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மது விற்பனை குறித்து, அதே பகுதியில் வசிக்கும் ருக்மணி, 45, குடும்பத்தினர் போலீசிற்கு தகவல் கூறுவதாக கருதினர். நேற்று முன்தினம் வனிதா, பாப்புவின் உறவினர் தருண், 21, கோஷ்டியினர், ருக்மணியிடம் தகராறு செய்து கற்களால் தாக்கினர். ருக்மணியின் உறவினர் சிறுவன் சக்திவேல், 12, மீது பாட்டிலை எறிந்தனர். பலத்த காயமடைந்த சக்திவேல், மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார்.


latest tamil newsஇது தொடர்பாக, தருண் உட்பட, 13 பேர் மீது, வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், 36 - 51 வயதுள்ள நான்கு பேரை கைது செய்தனர்.கொலையாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரி, சிறுவனின் உறவினர்கள், தேனி கலெக்டர் அலுவலகம் முன், சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுக்கு பின் கலைந்து சென்றனர். எதிர்தரப்பிலும், ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இந்தியாவில் நிகழ்வுகள்:
கொரோனா விதிமீறல் வழக்கு
நிவாரி: மத்திய பிரதேசத்தின் நிவாரி மாவட்டத்தில், கொரோனா பாதிப்புடன் திருமண விழாவில் பங்கேற்ற அருண் மிஸ்ரா, ஸ்வரூப் சிங் ஆகியோர் மீது, தொற்றை பரப்ப முயன்றதாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை கொரோனா மையத்தில் சேர்த்தனர். அவர்களுக்கு பாதிப்பு உள்ளதை அறிந்தும், திருமணத்திற்கு அழைத்து வந்த மணமகனின் சகோதரர் ரஞ்சன் நாயக் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவர் தலைமறைவானார்.


latest tamil newsஉலக நிகழ்வுகள் :-சக மாணவர்களை சுட்ட 6ம் வகுப்பு மாணவி
போயஸ் : அமெரிக்காவின் இடாஹோ மாகாண பள்ளியில், 6ம் வகுப்பு மாணவி துப்பாக்கியால் சுட்டதில், மாணவர்கள் உட்பட மூவர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தின் ரிக்பியில் உள்ள நடுநிலைப் பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியின், 6ம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளிக்கு வந்தார். திடீரென தன் புத்தகப்பையில் இருந்து, ஒரு கைத்துப்பாக்கியை எடுத்த மாணவி, கண்மூடித்தனமாக சுட்டார்.இதில், இரு மாணவர்கள் மற்றும் பள்ளி காவலரின் கால்களில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்கள், மாணவ - மாணவியர் உட்பட, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் இருந்த ஆசிரியை ஒருவர், மாணவியிடம் இருந்து துப்பாக்கியை பறித்து கொண்டார். காயம் அடைந்த மூவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசாரிடம், மாணவி ஒப்படைக்கப்பட்டார். அவரிடம், போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
08-மே-202120:39:43 IST Report Abuse
DARMHAR இடாஹோ மாகாணம் அல்ல ஐடஹோ என்றுதான் சொல்லவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X