ராஜஸ்தான், ம.பி.,யில் சதம் அடித்தது பெட்ரோல் விலை

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை, தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் உயர்ந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில், 1 லிட்டர் பெட்ரோலின் விலை, 100 ரூபாயை கடந்தது.பெட்ரோல், டீசல் விலையில், தினமும் மாற்றம் செய்து வரும் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம், 15ம் தேதி விலையை சிறிது குறைத்தன. அதன்பின், ஐந்து மாநில சட்டசபைதேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை, பெட்ரோல், டீசல்

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை, தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் உயர்ந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில், 1 லிட்டர் பெட்ரோலின் விலை, 100 ரூபாயை கடந்தது.



latest tamil news



பெட்ரோல், டீசல் விலையில், தினமும் மாற்றம் செய்து வரும் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம், 15ம் தேதி விலையை சிறிது குறைத்தன. அதன்பின், ஐந்து மாநில சட்டசபைதேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை, பெட்ரோல், டீசல் விலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த, 4ல், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 15 காசுகளும், டீசல் விலை, 18 காசுகளும் உயர்த்தப்பட்டன. 5, 6ம் தேதிகளிலும் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு, 29 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு, 31 பைசாவும் உயர்த்தப்பட்டது.


latest tamil news



இந்த விலை உயர்வு காரணமாக, ராஜஸ்தான் மாநிலத்தில், பெட்ரோல் விலை, லிட்டர், 102.15 ஆகவும், மத்திய பிரதேச மாநிலத்தில், 101.86 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக, பெட்ரோல், 1 லிட்டர் விலை, 100 ரூபாயை கடந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-மே-202108:06:48 IST Report Abuse
VENKATASUBRAMANIAN பாவம் தலபுராணம் புலம்ப ஆரம்பித்து விட்டார். அவருக்கு சம்பளம் உயரனும் நல்ல ரோட்டில் 150speed ல் போகணும் 24 மணி நேரமும் மின்சாரம் தண்ணீர் வேண்டும் ஆனால் வேறு எந்த விலையும் உயரக்கூடாது
Rate this:
Azhagan Azhagan - Chennai,இந்தியா
08-மே-202110:47:08 IST Report Abuse
Azhagan Azhaganமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..... இனி திமுக எதிர் கட்சியாக இருந்து கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இன்று தானே பதில் சொல்லியாக வேண்டும்....
Rate this:
Cancel
08-மே-202107:04:50 IST Report Abuse
ஆரூர் ரங் ராஜஸ்தான் காங்கிரசு அரசு லிட்டருக்கு 37 ரூபாய் வரி போடுது🤔 .( மத்திய வரி 22 ரூ தான் ) எனவே இன்று விடிந்தவுடன்😇 ராகுல் உத்தரவிட்டு மாநில வரி 37 ஐ நீக்குவதற்கு உத்தரவிடுவாரூ
Rate this:
வணங்காமுடி திராவிடன் - அஞ்சாமை திராவிடர் உடமையடா ,இந்தியா
08-மே-202112:54:24 IST Report Abuse
வணங்காமுடி திராவிடன் மேதாவி இதே தான congress காலத்தில் அப்போ மோடி ஜெட்லீ சுஸ்மா எல்லா ரோட்டில் போராட்டம் ஏண் செய்தார்களா...
Rate this:
Raj - Namakkal,சவுதி அரேபியா
08-மே-202113:03:15 IST Report Abuse
Rajமுதலில் நீங்கள் முப்பாத்தி ஐந்து ரூபய்க்கு பெட்ரோல்ன்னு சொன்னதை செயல்படுத்திவிட்டு அடுத்தவர்களை விமர்சிக்கலாம், சரியா?...
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
08-மே-202113:46:30 IST Report Abuse
Srinivas....@றங்கிடு..பீசப்பி காரனுங்க செய்த போலி வேஷ போராட்டம் இப்பவும் ஊடகங்களில் வந்துகொண்டுள்ளது தெரியுமா? ஸ்மிருத்தி சமையல் வாயு விலை ஏறிவிட்டது என்று ஊளையிட்ட பொது அதன் விலை என்னவென்று தெரியுமா? கச்சா எண்ணெய் விலை வெளி சந்தையில் 145 டாலராக இருந்தபோது பெட்ரோல்,டீசல் விலை இப்போது இருந்ததைவிட மிக...மிக...குறைவு. அதற்க்கு பீசப்பி ஊர் ஊராக சுத்தி வந்தானுங்க. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைகளை குறைப்போம்னு சொன்னானுங்க....செய்தானா? கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதெல்லாம் வரியை ஏற்றி விலை குறைப்பின் லாபம் மக்களுக்கு செல்லாமல் பார்த்து கொண்டான். பீசப்பி கும்பல் போலி வேஷ கொள்ளைக்கும்பல் என்பது இப்போது மக்களுக்கு தெரியும். கார்பரேட்டுக்கு சேவகம் செய்து பிரதிபலனாக பல ஆயிரம் கோடி நன்கொடையாக பெற்றுக்கொண்டிருக்கிறான். இது மட்டுமல்ல அத்தியாவசிய பொருட்களின் எந்த விலையையும் குறைக்கமாட்டானுங்க. ஏழை,நடுத்தர மக்களின் பிரச்சினையை எப்பவுமே இவனுங்க கேட்பதும் இல்லை....சிந்திப்பதும் இல்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X