மேற்கு வங்க கவர்னருடன் மத்திய குழுவினர் சந்திப்பு

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
கோல்கட்டா : மேற்கு வங்க கலவரத்துக்கான காரணத்தை கண்டறிய, கோல்கட்டா வந்துள்ள மத்திய குழுவினர், கவர்னர் ஜக்தீப் தன்கரை, நேற்று சந்தித்து பேசினர்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், பல்வேறு பகுதிகளிலும் பயங்கர கலவரம் வெடித்தது.விசாரணைஇதில்,

கோல்கட்டா : மேற்கு வங்க கலவரத்துக்கான காரணத்தை கண்டறிய, கோல்கட்டா வந்துள்ள மத்திய குழுவினர், கவர்னர் ஜக்தீப் தன்கரை, நேற்று சந்தித்து பேசினர்.



latest tamil news



மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், பல்வேறு பகுதிகளிலும் பயங்கர கலவரம் வெடித்தது.


விசாரணை


இதில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த, 16 பேர் பலியாயினர். இந்நிலையில், கலவரத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த, மத்திய உள்துறை கூடுதல் செயலர் தலைமையிலான, நான்கு பேர் அடங்கிய உண்மை கண்டறியும் குழு, நேற்று முன்தினம் கோல்கட்டா வந்தது.தெற்கு 24 பர்கனாஸ், வடக்கு 24 பர்கனாஸ் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்ற மத்திய குழுவினர், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உரையாடினர்.


latest tamil news



பின், கவர்னர் ஜக்தீப் தன்கரை, கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினர். மேற்கு வங்கத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, கவர்னர் ஜக்தீப்தன்கருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. இந்த அறிக்கை, மத்திய குழுவிடம் ஒப்படைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news



இதற்கிடையே, முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மேற்கு வங்கத்தின் ஒரு நாள் ஆக்சிஜன் தேவை, கடந்த, 24 மணிநேரத்தில், 470 டன்னாக உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில், 550 டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உயிர் இழப்பு


மற்ற மாநிலங்களுக்கு வழங்கும் ஆக்சிஜன் அளவை உயர்த்தியுள்ள மத்திய அரசு, மேற்குவங்கத்துக்கு மட்டும் இன்னும், 308 டன் ஆக்சிஜனை மட்டுமே வழங்கி வருகிறது. இதை உடனடியாக உயர்த்தவில்லை எனில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவது மட்டுமின்றி, உயிர் இழப்புகளும் அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
08-மே-202117:35:20 IST Report Abuse
PANDA PANDI இதே மாதிரி கோவையிலும் ஒரு மத்திய குழுவினரை அனுப்பி பாதிக்கப்பட்டவரை நீரில் சந்தித்து ஒரு சில ஆறுதல் வார்த்தைகூடவா சொல்லமுடியவில்லை. வெட்கம். தக்காளியும் ரத்தமா..
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
08-மே-202113:59:56 IST Report Abuse
sahayadhas மறுபடியும் பத்த வைக்கவா?
Rate this:
Cancel
suresh - nagercoil,இந்தியா
08-மே-202113:19:34 IST Report Abuse
suresh உன்னோட வினையின் பலன் உனக்கு கூடிய சீக்கிரம் அந்த ஆண்டவன் தருவான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X