தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு; பஸ்கள் ஓடாது; 24 ம் தேதி வரை அமல்

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (58) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலால் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு 2 வாரங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்களின் முன்வசதிக்காக இன்று (மே 8) மற்றும் நாளை (மே 9) மட்டும் ஊரடங்கு இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், மே 10ம் தேதி காலை 4 மணி முதல்
Tamilnadu, Lockdown, Restriction, தமிழகம், முழு ஊரடங்கு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலால் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு 2 வாரங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்களின் முன்வசதிக்காக இன்று (மே 8) மற்றும் நாளை (மே 9) மட்டும் ஊரடங்கு இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், மே 10ம் தேதி காலை 4 மணி முதல் 24ம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.



இது தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்


* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும்.
* வெளிநாடுகள், இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களுக்கு இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்களுக்கு தடை.


தேநீர் , மளிகை கடைகள் 12 மணி வரை


* மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை.
* அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும்.
* தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
* தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை.
* உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
* இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
* அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.


latest tamil news



* திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், கேளிக்கை பூங்காக்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதியில்லை.
* மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை தொடரும்.


வழிபாட்டிற்கு அனுமதி இல்லை


* அத்தியாவசிய துறைகளான, தலைமை செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, போலீஸ், ஊர்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது.
* அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை. விதி விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்க தடை.
* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை.
* சுற்றுலா தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை.


latest tamil news



* கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
* பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைக்கால முகாம்கள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை.
* நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி இல்லை.
* மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கு தடை.
* அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு, மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவர்.
* உணவு விநியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்களை தவிர மற்ற சேவைகளுக்கு அனுமதி இல்லை.
* அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
* காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும்.
* நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.
* நடைபெற்றுவரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும்.
* ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.
* மே 8 மற்றும் மே 9-ம் தேதிகளில் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் வழக்கம் போல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
* இன்று ( சனி) , நாளை ( ஞாயிறு) அரசு பஸ்கள் 24 மணி நேரம் ஓடும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-மே-202101:21:04 IST Report Abuse
சதீஷ் குமார் தகவலுக்கு மிக்க நன்றி!!
Rate this:
Cancel
Kumzi தள்ளுபடி டோப்பா சூட்லீன் - trichy,யுனைடெட் கிங்டம்
08-மே-202122:19:18 IST Report Abuse
Kumzi தள்ளுபடி டோப்பா சூட்லீன்  4000 ஓவாவ நம்பி வாக்களித்த டுமிழனுங்களா அனுபவிங்கடா ஹீஹீஹீ
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
08-மே-202121:07:31 IST Report Abuse
blocked user தேர்தலுக்கு முன் லாக்டவுன் சாத்தியமில்லை... தேர்தலுக்குப்பின் எல்லாம் தலைகீழ் - சாராய வியாபாரம் தவிர...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X