பொது செய்தி

இந்தியா

தமிழகத்துக்கு 2.05 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021
Share
Advertisement
புதுடில்லி: 'தமிழகத்துக்கு 2,05,000 ரெம்டெசிவிர் குப்பிகளும், புதுவைக்கு 11,000 குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு மாநிலத்திலும் ரெம்டெசிவிர் தேவையைக் கருத்தில் கொண்டு, அது போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்ய, 2021 மே 16ம் தேதி வரை

புதுடில்லி: 'தமிழகத்துக்கு 2,05,000 ரெம்டெசிவிர் குப்பிகளும், புதுவைக்கு 11,000 குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளதாவது:



latest tamil news



ஒவ்வொரு மாநிலத்திலும் ரெம்டெசிவிர் தேவையைக் கருத்தில் கொண்டு, அது போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்ய, 2021 மே 16ம் தேதி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட ரெம்டெசிவிர் குப்பிகளின் விவரத்தை வெளியிட்டுள்ளோம். அதன்படி, தமிழகத்துக்கு 2,05,000 ரெம்டெசிவிர் குப்பிகளும், புதுவைக்கு 11,000 குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதே போல் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.


latest tamil news



அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்தை நியாயமாகப் பயன்படுத்த, இவற்றின் வினியோகத்தை முறையாகக் கண்காணிக்கும்படி மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X