சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஜெனிவா: சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு,அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், உலக நாடுகள் முழுவதும் பரவியது. தற்போது, வரை உலகம் முழுதும் 15.75 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க உலக
WHO, CovidVaccine, Sinopharm, China, உலக சுகாதார அமைப்பு, கொரோனா, தடுப்பூசி, சினோபார்ம், சீனா

ஜெனிவா: சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு,அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், உலக நாடுகள் முழுவதும் பரவியது. தற்போது, வரை உலகம் முழுதும் 15.75 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க உலக ஆராய்ச்சியாளர்கள் போராடி, தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளனர். ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் மாடர்னா, இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட பல தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.


latest tamil news


இந்நிலையில், சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் சீனாவில் தயாரான தடுப்பூசிக்கு முதல்முறையாக உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதே சமயம் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்ற 6-வது தடுப்பூசி இதுவாகும். இந்த தடுப்பூசியின் 79 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாகவும், 3 முதல் 4 வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


ஏற்கனவே 22 நாடுகள் இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பும் ஒப்புதல் வழங்கியிருப்பதால், மேலும் பல நாடுகள் இந்த தடுப்பூசிக்கு அனுமதி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-மே-202123:07:58 IST Report Abuse
ஆப்பு சீன தடுப்பூசி சீன கொரோனாவுக்கே வேலை செய்யும். ஃபைசர் அமெரிக்க கொரோனாவுக்குதான் வேலை செய்யும். இந்திய தடுப்பூசி இங்கே இருக்குறவங்களுக்குதான் வேலை செய்யும். அதுதான் ஆத்மநிர்பரா. கொரோனாவுக்கும் நாட்டுப்பற்று உண்டு. தடுப்பூசி க்கும் உண்டு.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
08-மே-202122:45:55 IST Report Abuse
mathimandhiri தற்போது அவன் இந்தியாவின் மேல் பயோ யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறான் என்பதை இங்குள்ள பதவி வெறி பிடித்தவன் எல்லோருக்கும் தெரியும்.// வங்க தேசம் வழியாக கொரோனா பாதித்த நபர்களை ஊடுருவ விட்டு , அவர்கள் மூலம் மிக அதிக அளவில் நாடு முழுவதும் பரப்புவதாக நமது "ரா" அமைப்பு நினைப்பதாகப் பேசப் படுகிறது.// சீனாவின் கூஜாக்களை ஒழித்துக் கட்டினாலொழிய பிரச்சினை முடிவுக்கு வருவது கஷ்டம்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
08-மே-202122:23:43 IST Report Abuse
தல புராணம் தடகள பயிற்சியின் போது ஒரு வீரர் தனது பயிற்சியாளரிடம், "ஓடிய பிறகு மூச்சு இரைக்கும் போது மூக்கு வழியாக மட்டுமே மூச்சு விடவேண்டுமா, இல்லை வாய் வழியாகவும் மூச்சு விடலாமா?" என்று கேட்டார். அதற்கு பயிற்சியாளர், முடிந்தால் காது, கண்ணு வழியாக கூட நீ மூச்சு விடலாம் என்றார்.. தடுப்பூசி மக்களை காப்பாற்றும் எனும் போது, இதை சவூதி அரசம், மேலும் நாற்பது நாடுகளும் இதை பயன்படுத்தி பயனடையும் போது, ரஷிய வேக்சின் உடன் சீன வேக்சினையும் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் தவறே இல்லை.. வெறிபிடித்த சங்கிகளின் அறிவற்ற கூவலுக்கு அரசாங்கம் செவி சாய்க்காமல் மக்களை காப்பாற்ற வேண்டும்.
Rate this:
mathimandhiri - chennai,இந்தியா
09-மே-202120:54:39 IST Report Abuse
mathimandhiriஇது மோடி ஊசி. நான் போட்டுக் கொள்ள மாட்டேன், அவர் முதலில் போட்டுக்கட்டும். பிறகு நாங்கள் போட்டுக்குவோம் என்று கூவிய பகுத்தறிவுப் பதர்களிடம் இதை பற்றி வாய் திறக்க வில்லையே ? ஏன் ? பயமா அல்லது விசுவாசமா? அப்புறம் அப்படிப் பேசினவனெல்லாம் ஏன் போட்டுக்கிட்டாங்கன்னு கேட்டாயா ? உயிர் மேல் ஆசை தானே? சீன தடுப்பூசியை மொத ஆளா நீயோ அல்லது உன் பேச்சைக் கேக்கும் ஆட்களையோ போட்டுக்கச் சொல் பாக்கலாம்....
Rate this:
mathimandhiri - chennai,இந்தியா
09-மே-202121:06:47 IST Report Abuse
mathimandhiriமுதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டாவது உருமாறிய கொரோனாவை ""இந்தியன் வேரியன்ட்"" என்று கூறுகிறார்கள். அதாவது இந்தியாவை மட்டுமே குறி வைத்து உயிர்களை பறிக்கும் ரகமாக உள்ளதாம்///. அப்படி என்றால் என்ன ? சீனாவில் உள்ள கைதிகள் அல்லது அடிமைகள் இப்படி ஒரு நூறு இருநூறு பேரைப் பிடித்து அவர்களுக்கு இந்த ரக வைரஸை பரவ விட்டு, பின்பு அவர்களை வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் வங்க தேசம் காஷ்மீர் போன்ற வசதியான ரூட்களில் இந்தியாவுக்குள் பரவ விட்டிருக்கிறான் சீனா காரன்.////பொருட்ச் செலவோ ராணுவ இழப்போ இல்லாத சீப் ஆன முறையில் இந்தியாவுடன் அவன் பயோ யுத்தம் நடத்தி கொண்டிருக்கிறான். இதை எதிர்க்கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் அறிந்த போதும் மத்தியிலிருந்து ஆக்சிஜன் கொடுக்க வில்லை என்று அங்கிருந்து மட்டும் மீடியாவில் அலறுவதின் பின்னணி என்ன ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X