அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயணம்: ஸ்டாலின் விரைவில் முடிவு

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் அரசு நகர பேருந்துகளில் மகளிர் அனைவரும் இலவசமாக பஸ்சில் பயணிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டம் குறித்து பரிசீலித்து விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (மே 7) பதவியேற்ற நிலையில், முதல் கையெழுத்தாக 5 முக்கிய
TamilnaduCM, Stalin, TransGender, FreeBusTravel, முதல்வர், ஸ்டாலின், திருநங்கைகள், இலவச பஸ் பயணம்

சென்னை: தமிழகத்தில் அரசு நகர பேருந்துகளில் மகளிர் அனைவரும் இலவசமாக பஸ்சில் பயணிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டம் குறித்து பரிசீலித்து விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (மே 7) பதவியேற்ற நிலையில், முதல் கையெழுத்தாக 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், மகளிர்கள் அரசு நகர கட்டணப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்கான அறிவிப்பும் இடம்பெற்றது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள இத்திட்டம் பெண்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், மகளிரை போல திருநங்கைகளுக்கும் இலவச பயண திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.


latest tamil news


இதனை ஏற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:


Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekkar Venkataraman - Trivandrum,இந்தியா
08-மே-202123:05:08 IST Report Abuse
Sekkar Venkataraman சாதாரண ஆண்கள், பெண்கள் போல் ஆடையணிந்து திருநங்கை என்று சொல்லி ஓசி பிரயாணம் செய்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
08-மே-202121:40:25 IST Report Abuse
Matt P ஸ்டாலின் யாரிடமும் எதையும் ஆலோசிப்பஆரா இவருக்கு ஆலோசனை சொல்லும் தைரியம் யாருக்காவது இருக்குமா என்பது சந்தேகமே.இவர் கருணாநிதியின் மகன். இவர் வைத்தது தான் சட்டம் என்று இருக்கும்போது , தமிழகம் தடுமாற வாய்ப்பிருக்கிறது.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
08-மே-202121:25:08 IST Report Abuse
Matt P இனிமேல் பெண்களுக்கு கொண்டாட்டம் தான். ஒவ்வொரு நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்த வேண்டிய தேவை ஏற்படலாம். இன்நிக்கு மாமா வீடு நாளைக்கு பெரியம்மா வீடு சின்ன பயன் வீடு பெரிய மகன் வீடு என்று தினசரி பயணம் நடக்கலாம். பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியலாம். நடத்துனர் இறங்கும்போது நிரம்பாத பண பஐயை எடுத்து கொண்டு அலுவலலகத்துக்கு போவார். நமது விருப்பத்துக்கு ஆட்சி அல்ல. மக்கள் விருப்பத்துக்கு தான் ஆட்சி என்ற நிலை இருக்க வேண்டும். எந்த பெண்ணும் இதுவரை கோரிக்கை வைக்காத ஓன்று. பெண புத்தி பின் புத்தி எனார்கள். இந்த ஆணுக்கு தான் பின் புத்தி என உள்ளாரா நினைட்து கொள்வார்கள் பெண்கள்.நம் விருப்பத்துக்கு ஆட்சி அல்ல. மக்கள் விருப்பத்துக்கு தான் ஆட்சி.பொதுவாக பேருந்து பயணத்தை குறைத்து பொதுமக்களுக்கு பொதுவாக இருந்திருக்கலாம். தங்களுக்கு பெருமை ஏற்ப்படுவதற்கும் வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்குமா ஆட்சி என்ற நிலை மாற வேண்டும்...(தனியாக பெண் ஓட்டுனர்களை .வைத்து பெண்களுக்கு தனி பேருந்து இயக்கினால் நடத்துனர்கள் தேவை இல்லை. பெண்களுக்கும் வூர் கதைகளை பேசி பயணம் செய்ய வசதியாக இருக்குமே.) திருநங்கைகளுக்கு ஏன் விரைவில் முடிவெடுக்க வேண்டும்? ஏற்கெனவே முடிவெடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் குறைந்த ளவு மக்கள் தானே.பேருந்து துரையின் வருமானத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X