பொது செய்தி

இந்தியா

70 ஆயிரம் படுக்கையுடன் 4,400 தனிமை பெட்டிகள் தயார்: ரயில்வே அறிவிப்பு

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, 70 ஆயிரம் படுக்கைகளுடன், 4,400 தனிமைப் பெட்டிகள் தயார் நிலையில் இருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே தெரிவித்துள்ளதாவது: கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்காக 70,000 படுக்கை வசதிகளுடன் 4,400 தனிமைப் பெட்டிகள் ரயில்வேயிடம் தயார் நிலையில் உள்ளன. மாநிலங்கள் விடுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப, இந்தத் தனிமைப்

புதுடில்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, 70 ஆயிரம் படுக்கைகளுடன், 4,400 தனிமைப் பெட்டிகள் தயார் நிலையில் இருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது.



latest tamil news


இதுகுறித்து இந்திய ரயில்வே தெரிவித்துள்ளதாவது: கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்காக 70,000 படுக்கை வசதிகளுடன் 4,400 தனிமைப் பெட்டிகள் ரயில்வேயிடம் தயார் நிலையில் உள்ளன. மாநிலங்கள் விடுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப, இந்தத் தனிமைப் பெட்டிகளை ரயில்வே உடனடியாக அனுப்பி வருகிறது. சமீபத்தில், அசாம் மாநில அரசு விடுத்த வேண்டுகோளின்படி குவஹாதிக்கு 21 தனிமைப் பெட்டிகளையும், சில்சர் அருகேயுள்ள பாதர்பூர் ரயில் நிலையத்துக்கு 20 தனிமைப் பெட்டிகளையும் ரயில்வே விரைவாக அனுப்பியுள்ளது.


latest tamil news


இந்த வாரத்தின் தொடக்கத்தில், சமர்பதி, சந்த்லோதியா மற்றும் திமாப்பூர் ஆகிய இடங்களுக்குத் தனிமைப் பெட்டிகள் அனுப்பப்பட்டன. மாநிலங்களின் கோரிக்கைப்படி 298 தனிமைப் பெட்டிகள் 4,700 படுக்கை வசதிகளுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 2 ஜோடி ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ள தனிமைப் பெட்டிகளில் 177 பேர் அனுமதிக்கப்பட்டு, 117 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 60 கொரோனா நோயாளிகள் தற்போது தனிமைப் பெட்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundar - San Jose,யூ.எஸ்.ஏ
09-மே-202106:12:25 IST Report Abuse
sundar நான் இதுவரை ரயில் பேட்டி ஹாஸ்பிடல் இல் பயன் பெற்றவர்கள் யாரையும் பார்க்கவில்லை, எல்லாம் ஒரு. ஏமாற்று வித்தாய் ...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
08-மே-202121:42:11 IST Report Abuse
தல புராணம் போட்டோ மட்டும் தான் காட்டுறாங்க.. பெட்டி எங்கேன்னா, சவப்பட்டியை காட்டி அதான் இதுன்னு சொல்றாய்ங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X