அரசியல் செய்தி

தமிழ்நாடு

5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை: மா.சுப்பிரமணியன்

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் வரும் 15ம் தேதிக்குள்
Remdesivir, HealthMinister, Subramaniyan, ரெம்டெசிவிர், சுகாதாரத்துறை, அமைச்சர், சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் வரும் 15ம் தேதிக்குள் கூடுதலாக 12,500 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் தயார்படுத்தப்படும். மே 10ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் 750 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும். ரெம்டிசிவிர் மருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களுக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, சென்னை போன்ற 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும்.


latest tamil news


கொரோனா தடுப்பூசி செலுத்துவது போன்ற அனைத்து மருத்துவ சேவைகளும் ஊரடங்கு நேரத்திலும் தொடரும். தனியார் மருத்துவமனைகளில் காப்பீடு மூலம் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டண விவரம் இன்று மாலைக்குள் இறுதி செய்யப்படும். சித்தா, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளை பின்பற்றுவது குறித்த கோரிக்கை மருத்துவ நிபுணர்களுடனான கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா சித்தா சிகிச்சை மையம் திங்கட்கிழமை துவங்கும். போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள ‛வார் ரூம்' திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
09-மே-202105:00:24 IST Report Abuse
Aanandh அமைச்சர் மா. சுப்பிரமணியன் என்று குறிப்பிட்டால் நல்லது.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
10-மே-202111:59:34 IST Report Abuse
 Muruga Velசுருக்கமா மாசு .....
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-மே-202123:44:44 IST Report Abuse
Pugazh V எதை மத்திய அரசு இலவசமாக தருகிறது? இவர்கள் விற்கிறார்கள்? என்ன பேத்தல் இது? எழுதும் முன் கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டார்களா?
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-மே-202123:43:15 IST Report Abuse
Pugazh V பாஜக வாசகர்கள் கதறிக் கதறியே செத்துடுவாங்க போல. கொரோனா தாக்கி உயிரிழப்பை விட.இப்படி வயத்தெரிச்சல் பட்டு இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கப்போகிறது. வயதான காலத்தில் ஏன் இப்படி ப்ளட் ப்ரஷரை ஏத்திக்கறாங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X