அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம்; மே 10ல் முதல்வர் துவக்கி வைக்கிறார்

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை: கொரோனா நிவாரணமாக அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மே 10-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.4000 கொரோனா நிவாரணம் வழங்குவது தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், முதல் தவணையாக ரூ.2000-ஐ வரும் 10ம்
CovidRelief, TamilnaduCM, Stalin, முதல்வர், ஸ்டாலின், கொரோனா நிவாரணம்

சென்னை: கொரோனா நிவாரணமாக அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மே 10-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.4000 கொரோனா நிவாரணம் வழங்குவது தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், முதல் தவணையாக ரூ.2000-ஐ வரும் 10ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:


latest tamil news


கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என கூறியிருந்தோம். இதற்காக சுமார் 2.07 லட்சம் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.4,153 கோடி நிதி வழங்கப்பட இருக்கிறது. முதல் தவணையாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் (மே 10) துவங்கி வைக்கிறார். அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒரு நாளைக்கு 200 வீதம் டோக்கன் வழங்கப்பட்டு, ஒருவார காலத்திற்குள் முதல் தவணை நிவாரணம் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் காலை 8 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை இந்த நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம் தட்டை உலகம். குரானா நிராவண நிதியாக முதல்தவணை20000 குடத்த வீரத் தள்ளபதி வாழ்க வாழ்க! இன்னும்100 நாட்களுக்குள் குரானா துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தெறித்து மரத்த தமிழ்நாட்டை விட்டு ஓடிவிடும்.
Rate this:
Cancel
09-மே-202104:12:03 IST Report Abuse
மனுநீதி ஐந்து பேர் குடும்பத்துக்கு ரூ 2000 ஒருவேளை பிரியாணி வாங்கவே பத்தாது... அதனால் தான் அடிமைகள் திருவல்லிக்கேணியில் அண்டாவோடு திருடிக்கொண்டு ஓடினார்கள்...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-மே-202123:39:12 IST Report Abuse
Pugazh V மத்திய பீஜெபீ இலவசம் அறிவித்நால் சொம்படிக்கும் கூட்டம் காவடி தூக்கும். ஆனால் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா கலைஞர் இப்போது ஸ்டாலின் இவர்கள் இலவசம் அறிவித்தால் ஆ...இது தவறு..மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்குகிறார்கள் என்று ஊளையிடுவது என்ன டிஸைன்?? பீஜேபீ வாசகர்கள் ஏன் இப்படி அறிவற்ற கருத்துப் பதிவு இடுகிறார் கள்??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X