பொது செய்தி

இந்தியா

முதல்வர்கள் உத்தவ், ஸ்டாலின், சிவராஜ் உடன் பிரதமர் போனில் ஆலோசனை

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா நிலவரம் தொடர்பாக, தமிழகம் , மஹாராஷ்டிரா, ம.பி., மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். இந்த மாநிலத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில்,54,022 பேர் கொரோனாவினால்
பிரதமர் மோடி, கொரோனா, முதல்வர்கள், மஹாராஷ்டிரா, ம.பி. மத்திய பிரதேசம், சிவராஜ் சிங் சவுஹான்,  ஜெய்ராம் தாக்கூர், ஹிமாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம், இமாச்சல், ஹமாச்சல், நரேந்திர மோடி, ஆலோசனை, கொரோனா வைரஸ், கோவிட்19,

புதுடில்லி: கொரோனா நிலவரம் தொடர்பாக, தமிழகம் , மஹாராஷ்டிரா, ம.பி., மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். இந்த மாநிலத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில்,54,022 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 898 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதன் பின்னர், ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுஹானுடன் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,708 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.பிரதமருடனான ஆலோசனைக்கு பிறகு சவுஹான் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி உள்ளதாவது:
மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதையும், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமரிடம் விளக்கினேன். மாநில அரசின் நடவடிக்கைகளில் பிரதமர் திருப்தி தெரிவித்தார். மத்திய அரசு மூலம் அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதியளித்தார் என தெரிவித்து உள்ளார். இது போல் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பேசினா். மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் உறுதி அளித்தார்.

தொடர்ந்து, மோடியுடன் ஆலோசனை நடத்திய பிறகு, ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் மற்றும் தடுப்பூசி குறித்து பிரதமரிடம் விளக்கினேன். மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் உறுதியுளித்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,177 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. 56 பேர் உயிரிழந்து உள்ளனர்.


latest tamil news



கடந்த 10 நாட்களில் மட்டும், 10 மாநில முதல்வர்கள் மற்றும் 2 துணை நிலை கவர்னர்களுடன், கொரோனா நிலவரம் குறித்து மோடி ஆலோசனை நடத்தி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
praj - Melbourn,ஆஸ்திரேலியா
09-மே-202103:08:27 IST Report Abuse
praj கைதட்டி ,விளக்கு கொளுத்தி கொரனவை வரவேற்ற மோடி உடனடியாக பதவி விலக வேண்டும்..
Rate this:
Cancel
08-மே-202123:01:58 IST Report Abuse
ஆப்பு தினமும் நான் இருக்கேன்னு ஒரு ஆய்வு. ஒரு ஆலோசனை.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
08-மே-202122:56:36 IST Report Abuse
தல புராணம் இம்புட்டு நாளும் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு வீராப்பு வசனம் பேசியவர் தான் இவர்.. பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மூச்சுக் காற்றுக்கு தவித்து சாவதற்கு முழுமுதல் காரணமானவர் இவர். இப்போ கூட போன வாரம் இம்புட்டு அத களத்திலேயும் வெறும் 897 பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் 1.45 லட்சம் கோடிக்கு வரிச்சலுகை / தள்ளுபடி அறிவிச்சு சுகம் கண்டார்.. ஆனால் அதே வேளையில் தடுப்பூசி மருந்துக்கு 40,000 கோடி விலையேற்றம் செய்து மக்கள் வரிப்பணத்தை ஒரு நிறுவனத்துக்கு அள்ளிக் கொடுத்தார்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X