பொது செய்தி

இந்தியா

ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பதுக்கி விற்ற ஆம் ஆத்மி அமைச்சர் : டுவிட்டரில் விளாசல்

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
புதுடில்லி : தலைநகர் டில்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ.,வும் அமைச்சருமான ஒருவர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பதுக்கி, விநியோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் போில் அவருக்கு டில்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் சுனாமி போன்று பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு
OxygenChorAAP, Oxygen,

புதுடில்லி : தலைநகர் டில்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ.,வும் அமைச்சருமான ஒருவர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பதுக்கி, விநியோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் போில் அவருக்கு டில்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் சுனாமி போன்று பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு நோய் தொற்றின் பாதிப்பு 4 லட்சத்தை எட்டி உள்ளது. குறிப்பாக இம்முறை இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் பலரும் மூச்சு விட சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய ஆக்ஸிஜன் இல்லாததால் பலர் இறக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. தலைநகர் டில்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. தங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குபடி மாநில முதல்வர் மத்திய அரசிடம் கேட்டு வருகிறார். மேலும் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் பெற நடவடிக்கை எடுத்து வருகிறார்.


latest tamil newsஇந்நிலையில் இவரது கட்சி எம்எல்ஏ.,வும் அமைச்சருமான இம்ரான் உசேன் என்பவர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்து முறைகேடாக விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக வக்கீல் ஒருவர் அவர் மீது டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து விளக்கம் கேட்டு இம்ரான் உசைனுக்கு நோட்டீஸ் அனுப்பி ஐகோர்ட் உத்தரவிட்டு, வழக்கை தி்ங்கள் கிழமைக்கு தள்ளி வைத்தது. இந்த விவகாரம் சமூகவலைதளமான டுவிட்டரில் கடும் விவாத்தை ஏற்படுத்தி உள்ளது.

‛‛மாநில முதல்வர் ஆக்ஸிஜன் கொடுங்க என கெஞ்சி வருகிறார், ஆனால் அவரது கட்சி எம்எல்ஏ.,வே ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பதுக்கி விற்பனை செய்து வருகிறார்''. ‛‛ஆக்ஸிஜன் இன்றி பலரும் மடிந்து வருகிறார்கள். ஆனால் அவரது கட்சி அமைச்சரே சிலிண்டரை பதுக்கி, முறைகேடாக விற்பனை செய்கிறார். ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் மோடி அரசு மீது குற்றம்சாட்டுகிறார் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால்''. ‛‛இம்ரான் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்''... இப்படியாக பலரும் இம்ரானை சாடி கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் இந்த விஷயம் #OxygenChorAAP என்ற ஹேஷ்டாக்கில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
13-மே-202109:29:03 IST Report Abuse
meenakshisundaram ஹலோ கெஜ்ரிவால் கண்ணு தெரியாதே உனக்கு ?காதும் கேட்காதே ?கமிஷன் எம்பூட்டு வாங்கினே ?- அண்ணா ஹாசாரே கிட்டே சொல்லு ,ஆசீர்வாதம் பண்ணுவார் ?
Rate this:
Cancel
09-மே-202110:47:07 IST Report Abuse
அருணா இவன் போன்ற மனிதமற்ற துரோகிகளை இவனோடு சம்மந்தப்பட்டவர்களை விசாரணையே இல்லாமல் Encounter செய்தால் பதுக்கும் மற்றவர்களுக்கு பயம் வரும்.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
09-மே-202107:26:15 IST Report Abuse
sridhar AAP mla, on top of it , a Muslim . Media is on long leave .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X