கட்டுமான பணிகளுக்கு பயன்படும் நவீன கட்டுமான கருவிகள்

Added : மே 08, 2021
Share
Advertisement
இக்காலத்தில் அமைக்கும் கட்டடங்கள் 'பிரேம்டு ஸ்ட்ரக்சர்' முறையில் உள்ளன. பில்லர்கள், காலம்கள், பீம்கள், லிண்டல் போன்ற செங்குத்து, குறுக்கு துாண்களில் நீளம், அகலம், உயரங்களில் அமைக்கப்படும் முறை. பில்லர்களுக்கு இடையில் செங்கல், பிற வகை சிமென்ட் பிளாக் வைத்து சுவர் எழுப்பி சிமென்ட் பூசுவது வழக்கம். இதோடு நவீன கட்டுமான கருவிகள் பயன்படுத்துவதால் பணிகள் எளிதாக முடிந்து

இக்காலத்தில் அமைக்கும் கட்டடங்கள் 'பிரேம்டு ஸ்ட்ரக்சர்' முறையில் உள்ளன. பில்லர்கள், காலம்கள், பீம்கள், லிண்டல் போன்ற செங்குத்து, குறுக்கு துாண்களில் நீளம், அகலம், உயரங்களில் அமைக்கப்படும் முறை.

பில்லர்களுக்கு இடையில் செங்கல், பிற வகை சிமென்ட் பிளாக் வைத்து சுவர் எழுப்பி சிமென்ட் பூசுவது வழக்கம். இதோடு நவீன கட்டுமான கருவிகள் பயன்படுத்துவதால் பணிகள் எளிதாக முடிந்து விடுகிறது. கான்கிரீட் பில்லர்கள் பழைய காலங்களில் கட்டடங்கள் நான்கு புறமும் உள்ள அஸ்திவாரம் மீது சுவர் எழுப்பிய பின் மேற்கூரை அமைக்கப்படும். கட்டட பொறியியல் நுட்பம் வளர்ந்த பின் புதுமைகள் வந்து விட்டன. அதன் விளைவாக சுவர்கள் நேரடியாக கட்டுமான எடை தாங்குவதால் பாதிப்புகள் எளிதாக தெரியும்.

அதனால் சுவர்கள் அமைப்பதற்கு பதில் இரும்பு கம்பிகளால் சென்டிரிங் செய்யப்பட்ட கான்கிரீட் பில்லர்கள் அமைத்து சுவர்கள் கட்டப்படுகிறது.பில்லர்களுக்கு இடையில் சுவர்கள் அமைத்த பின் பூச்சு வேலை செய்ய வேண்டும். ஒரு வீடு முழு தோற்றம் வர வெளிப்பூச்சு அவசியம். கலவை பூச அதிக மனித உழைப்பு தேவை. ஒரு அங்குல கனத்தில் சிமென்ட், மணல் கலவை ஒரு அறை, சுவருக்கு பூச குறைந்தது 3 நபர்கள் தேவை. மேல் பூச்சு வேலை முடிந்ததும்'லெவல்' செய்து,சிமென்ட் பாலில் பாலிஷ் தர வேண்டும்.

மோட்டார் பம்பிங் மெஷின்

கான்கிரீட் கலவையை இந்த கருவியில் நிரப்பினால் தண்ணீர் அளவு சரியாக இருக்கும்படி தானாக சரி செய்யும் தன்மை கொண்டது. இக்கருவி குறைந்த மின்சக்தியில் இருவர் மட்டும் இயக்கப்படுவதுபோல உள்ளது. எளிதில் எடுத்து செல்லலாம், ரிமோட் மூலம் இயங்கலாம்.சிமென்ட் ஸ்பிரேயர் கருவி கட்டமைப்புகளின் உட்புறம், வெளிப்புறம் இந்த உபகரணத்தை கொண்டு சுலபமாக பூசலாம். அதற்கு ஏற்ப இது மல்டி பர்ப்பஸ் கருவி.

சுவர்களுக்கு பெயின்ட் பூசுவதாக இருந்தால் இக்கருவி பொருத்தமாக இருக்கும். கருவியின் இயக்கத்தின் போது ரப்பர் குழாய், நாஸில் என்ற குழாய் முனை பரிசோதிப்பது அவசியம்.ஆட்டோமேட்டிக் பிளாஸ்டரிங்குறைந்த பணியாளர்களை கொண்டு உட்புற, வெளிப்புற சிமென்ட் கலவை பூச இது உதவும். சரியான கலவை கலக்கப்பட்டு கருவி மேற்புறமாக நிரப்பி இயக்கினால் வீணாவது தவிர்க்கப்படும். பணியாளர் செய்யும் பூச்சு வேலைகளை ஒப்பிடும் போது இதில் செலவு குறைவாகும் என்கிறார்கள் கட்டுமான வல்லுனர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X