தட்டோடுகளுக்கு மாற்றாக கூல் ரூப் டைல்ஸ் கற்கள்| Dinamalar

தட்டோடுகளுக்கு மாற்றாக 'கூல் ரூப் டைல்ஸ்' கற்கள்

Added : மே 08, 2021
Share
வீட்டு அறைகளின் வெப்பநிலையை சமமாக வைத்திருப்பதில் ஓடுகளுக்கு முக்கிய இடம் உண்டு. அதிலும், தரைதளத்தில் இருந்து கூரைகள் அமையும் உயரத்திற்கு ஏற்ப வெப்பம், குளிரும் இருக்கும். உதாரணமாக சிமென்ட் ஓடுகளை சரியான அளவில் பொருத்தவில்லை என்றால் வெப்பம் உள் கிரகிப்பு அதிகரிக்கும். இதனால், வீட்டிற்குள் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். மொட்டை மாடியில் சுருக்கி போட்டு சிவப்பு

வீட்டு அறைகளின் வெப்பநிலையை சமமாக வைத்திருப்பதில் ஓடுகளுக்கு முக்கிய இடம் உண்டு. அதிலும், தரைதளத்தில் இருந்து கூரைகள் அமையும் உயரத்திற்கு ஏற்ப வெப்பம், குளிரும் இருக்கும்.

உதாரணமாக சிமென்ட் ஓடுகளை சரியான அளவில் பொருத்தவில்லை என்றால் வெப்பம் உள் கிரகிப்பு அதிகரிக்கும். இதனால், வீட்டிற்குள் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். மொட்டை மாடியில் சுருக்கி போட்டு சிவப்பு வண்ண தட்டோடுகள் பதித்துள்ளோம். கோடை காலத்தில் தட்டோடு வெப்பத்தை வீட்டிற்குள் கடத்தும். மொட்டை மாடியில் சுருக்கி, தட்டோடு அனைத்தும் சரியாக அமைத்தாலும் 'கிராஸ் வென்டிலைசேஷன்' முறையாக இருக்க வேண்டும். கட்டடத்தின் உயரம் 10 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் சூடு உள்ளே இறங்குவது தடுக்கப்படும்.

தற்போது தட்டோடுகளுக்கு பதிலாக 'கூல் ரூப் டைல்ஸ்' என்ற ஓடுகள் சந்தையில் கிடைக்கிறது. இவற்றை பயன்படுத்துவதால் 4 முதல் 5 டிகிரி வெப்பநிலை குறைக்கப்படுகிறது. கருப்பு, வெள்ளை என பல நிறங்களில் இந்த வகையான ஓடுகள் கிடைக்கின்றன. கதிர் வீச்சை வீட்டுக்குள் கடத்தாமல் திருப்பி அனுப்பிவிடும் தன்மை இந்த ஓடுகளுக்கு உள்ளதால் அறையின் வெப்ப நிலை குறையும் என்கிறார்கள் கட்டுமான வல்லுனர்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X