காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 40 சதவீதம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2016 - 20 ஆண்டுகளில் பொதுமக்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், 3,977 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 1,600 பேர் குழந்தைகள். கடந்த 14 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு நாளும் ஐந்து குழந்தைகள் வரை கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பார்க்கப்படும் அமெரிக்கத் தலைமையிலான படைகள் வெளியேறுவதற்கு முன்னதாக, சர்வதேச கூட்டணி படைகளின் வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் இறப்பு 2017ல் 247 ஆக இருந்து 2019ல் 757 ஆக மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவித் திட்டத்தின் (யுனாமா) புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆப்கானிஸ்தான் இயக்குனர் கிறிஸ் நியாமண்டி கூறுகையில், 'ஆப்கானிஸ்தான் பல ஆண்டுகளாக குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான நாடாகவுள்ளது' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE