வீடுகளுக்கான டைல்ஸ் வகைகளை தேர்ந்தெடுக்கும் முறைகள் என்ன?| Dinamalar

வீடுகளுக்கான 'டைல்ஸ்' வகைகளை தேர்ந்தெடுக்கும் முறைகள் என்ன?

Added : மே 08, 2021
Share
நாம் வீடு கட்டும் போது, சீரமைக்கும் போது சரியான டைல்ஸ்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இது வீட்டின் தோற்றம், உணர்வை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சந்தையில் சிறந்த டைல்ஸ் அதிகம் கிடைக்கிறது. வடிவம், நிறம், பினிஷிங் பார்த்து உரிய டைல்ஸ்களை வாங்க வேண்டும். அதே போல் டைல்ஸ் ஒட்டும் முறையை தேர்வு செய்ய வேண்டும். செராமிக்ஸ் டைல்ஸ் கற்கள் வீட்டின் ஈரமான பகுதிகளில்,
வீடுகளுக்கான 'டைல்ஸ்' வகைகளை தேர்ந்தெடுக்கும் முறைகள் என்ன?

நாம் வீடு கட்டும் போது, சீரமைக்கும் போது சரியான டைல்ஸ்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இது வீட்டின் தோற்றம், உணர்வை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சந்தையில் சிறந்த டைல்ஸ் அதிகம் கிடைக்கிறது. வடிவம், நிறம், பினிஷிங் பார்த்து உரிய டைல்ஸ்களை வாங்க வேண்டும். அதே போல் டைல்ஸ் ஒட்டும் முறையை தேர்வு செய்ய வேண்டும். செராமிக்ஸ் டைல்ஸ் கற்கள் வீட்டின் ஈரமான பகுதிகளில், சமையலறையில் எண்ணெய்கள், வேறு பொருட்கள் சிந்தினால் கறை படிந்து விடும். அதனால் இது போன்ற பகுதிகளுக்கு சரியான டைல்ஸ்களை தேர்ந்தெடுத்து பதிக்க வேண்டும்.

வீட்டு அலங்காரத்தில் பலருக்கும் பல விருப்பங்கள் உள்ளன. அந்த வகையில் சாம்பல் நிற டைல்ஸ் வீட்டின் வரவேற்பரையில் பதிக்கும் போது ஒரு நல்ல தோற்றத்தை தரும். அதே போல் இன்றைய சந்தையில் மிக முக்கியமான டைல்ஸ்களில் ஒன்று பீங்கான். சீனாவில் அதிகம் பயன்படுத்தும் சீன ஓடுகள் அல்லது பீங்கான் என பெயரிடப்பட்டுள்ளது. பீங்கான் ஒரு கடின வகை செராமிக்ஸ் என்பதால் வீட்டின் எந்த பகுதிக்கும் பயன்படுத்தலாம்.
விலை குறைந்த டைல்ஸ், விலை உயர்ந்த டைல்ஸ்கள் பல இருந்தாலும், பளிங்கு, ஸ்லேட், செராமிக் டைல்ஸ் போன்றவை தரையில் பதிக்க நல்ல தரத்தில் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. தரையை அழகாக்கும் முதன்மை வடிவமைப்புகளில் டைல்ஸ் ஒன்றாகும், இது விரும்பிய சூழலை ஏற்படுத்த உதவும் எளிய வழிகளில் ஒன்றாகும். வீட்டின் ஒரு குறிப்பிட்ட அறையில் சுவர் முழுக்க டைல்ஸ் ஒட்டினால் அது பார்க்க சலிப்பை தான் தரும். சமயலறை, குளியல், கழிப்பறைகளில் பாதி அளவு சுவரில் சிறு டைல்ஸ் ஒட்டினால் போதும்.

டைல்ஸ் பதிப்பதோடு நம் வேலை முடிந்து விடாது. அதை முறையாக பராமரித்தால் தான் காலம் முழுக்க அழகான தோற்றம் தரும். தரைதளத்தில் முறையாக பதிக்கப்பட்ட டைல்ஸ்களில் குறைந்த அளவு பராமரிப்பாவது செய்தால் தான் அழகாக இருக்கும். டைல்ஸ் பதிக்க முடிவு செய்யும் போது, அதன் பயன் குறித்து அறிய வேண்டும். சில வகை டைல்ஸ் இயற்கை வளங்கள் பாதிக்காத வகையில் மறுசுழற்சி மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X