சென்னை: தேர்தலுக்கு முன்னாடி, தி.மு.க., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக, அவரோட மனைவி துர்கா, பல கோவில்களுக்கு போய், மனமுருக வேண்டிக்கிட்டாங்க. வேண்டுதல் நிறைவேறினால், நேர்த்திக் கடனை நேரில் வந்து செலுத்துவதாக, ஒன்பது கோவில்கள்ல, துர்கா வேண்டிகிட்டாங்களாம்...

இப்ப, ஸ்டாலின் முதல்வரானதால, நேர்த்தி கடனை செலுத்த, ராமேஸ்வரம் உட்பட ஒன்பது கோவில்களுக்கு மறுபடியும் அவங்க போகப்போறாங்க. தன் சகோதரி ஒருவரை அழைச்சிட்டு, கோவில் கோவிலா போக, துர்கா தயாராகிட்டு இருக்காங்க...!