பொது செய்தி

இந்தியா

பவுடர் வடிவில் கொரோனா மருந்து: அவசர பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கொரோனா நோயாளிகளுக்கான மருந்தை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. கொரோனா 2வது அலை இந்தியாவை திணறடித்துக் கொண்டிருக்கிறது. அன்றாட பாதிப்பு 4 லட்சத்தை சர்வ சாதாரணமாகக் கடந்து செல்கிறது. உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்

புதுடில்லி: தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கொரோனா நோயாளிகளுக்கான மருந்தை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.latest tamil news


கொரோனா 2வது அலை இந்தியாவை திணறடித்துக் கொண்டிருக்கிறது. அன்றாட பாதிப்பு 4 லட்சத்தை சர்வ சாதாரணமாகக் கடந்து செல்கிறது. உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.

கொரோனா சிகிச்சைக்கான மருந்து என்றால் இப்போதைக்கு ரெம்டெசிவிர் மட்டுமே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. அதனால், அந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கொரோனாவுக்கு எதிராக புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இது பவுடர் வடிவில் உள்ளது. இந்த மருந்தை தண்ணீரில் கலக்கிக் குடிக்கலாம். இந்த மருந்தை டி.ஆர்.டி.ஓ., அமைப்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. இந்த மருந்துக்கு டிஆக்ஸி டி- குளுகோஸ் (2-deoxy-D-glucose (2-DG) எனப் பெயரிடப்பட்டுள்ளது.


latest tamil news


கடந்த மே முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்த மருந்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது 110 கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டது. மருந்தை உட்கொண்ட நோயாளிகள் தொற்றிலிருந்து வேகமாகக் குணமடைவதும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனை தற்போது நாடு முழுவதும் 6 மருத்துவமனைகளில் நடந்துவருகிறது.

மேலும் இந்த மருந்து மருத்துவ ஆக்சிஜனை சார்ந்திருக்கும் நிலையை வெகுவாகக் குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்துக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பும் அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. 'இந்த மருந்து சந்தைக்கு வந்தால் ரெம்டெசிவிரை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் மாறலாம். இது கொரோனா சிகிச்சையில் புதிய மைல்கல்லாக அமையும்' என, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நல விரும்பி முதலில் தடுப்பூசி, அடுத்து நாசி வழியாக வழங்கும் ஸ்பிரே மருந்து, இப்போது 2DG, தற்சார்பு இந்தியா பட்டொளி வீசி பறக்கிறது. வாழ்க பாரதம், வாழ்க விஞ்ஞானிகள், வாழ்க மோடி ஜி. மோடி எதிர்ப்பாளர்கள் எப்போதுமே எதிர்மரை கருத்துக்களையும். பொய்யையும் கூறுகின்றனர். உலகமெங்கும் பெரிய மற்றும் கொடூர தொற்று பரவி நமது தேசமும் இக்கட்டில் இருக்கும் போது மத்திய அரசு மிகச்சிறந்த பங்களிப்பை செய்து வருகிறது. இந்த நேரத்தில் அவர்களை பாராட்ட விட்டாலும், காலை வாராமல் இருக்கலாம். தீர்ப்பு வழங்கும் இடங்களும் எதிர் கட்சிகளை போல கருத்துக்கள் மற்றும் உத்தரவுகள் பிறப்பிப்பது மிகவும் துரதிர்ஷ்டம்.
Rate this:
Cancel
T.SRINIVASAN - GUDUVANCHERI,இந்தியா
09-மே-202114:26:37 IST Report Abuse
T.SRINIVASAN இந்த ஊகிக்கலாம் எதை மோடி அரசு கொண்டு வந்தாலும் அதை முதலில் எதிர்க்க வேண்டும். இதையே தான் செய்தார்கள் கோவிட் ஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் விஷயத்திலும். அதன் காரணமாக பலர் போட்டுக்கொள்ள முன்வரவில்லை. விளைவு அதிக மக்கள் அவதியுற்றனர். இப்போது மருந்தை தேடி கூட்டமாக ஓடு. மருந்து பற்றாக்குறை. இவர்களுடைய செயலால் இரண்டாவது தவணைக்காக காந்திருந்தவர்களுக்கு அவஸ்தை. இந்த எதிர்மறை கும்பல் என்று திருந்தும்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
09-மே-202100:30:16 IST Report Abuse
தல புராணம் "பல மருந்துகளின் காக்டெய்ல்" இது போன்ற ஒரு சிகிச்சையை டிரம்புக்கும் கொடுத்தார்கள். ஸ்டெராய்ட், மற்றும் இவைகளும் (ஒரு வகையில் ஸ்டெராய்டு மருந்தின் வீரியம் உள்ளவை ) டிரம்புக்கு தரப்பட்டது.. இது வர்றவன் போறவன் எல்லாம் கடையில் வாங்கி முழுங்குற கலவை கிடையாது.. மேலே சொன்னது போல ஸ்டெராய்டு மருந்துகள் .. தவறாக பயன்படுத்தினால் உடலில் பயங்கர பின்விளைவுகள் (addiction) சார்ந்திருக்கும் தன்மை, எலும்பை சிதைக்கும் பண்பு, என்று உதவியை விட உபத்திரவங்கள் அதிகம்.. சிகிச்சை முறை மிகத்துல்லியமாக இருக்கவேண்டும்.. இவையெல்லாம் பொதுப்பயன்பாட்டுக்கான மருந்துகளே இல்லை.. பணம் மட்டுமே குறியாக உள்ள இந்திய பிரதமர், மருந்து நிறுவனங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் இருக்கும் போது, மக்கள் பணத்துக்கு பாதுகாப்பில்லை, உயிருக்கும் உத்திரவாதம் இல்லை.
Rate this:
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
09-மே-202109:39:08 IST Report Abuse
Jit Onetசும்மா வாய்க்கு வந்ததை சொல்லி ஏன் இப்படி புளுக வேண்டும்? இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டம் பரிசோதனைகள் நடத்துவது ஒரு மருந்தின் பக்க விளைவுகளை ஓரளவு தெரிந்து கொள்ளத்தான். அந்த முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை - அதற்கும் உனக்கு எப்படி இதெல்லாம் ஆகும் என்று தெரியும்? சும்மா மோடி மேல் உள்ள வெறுப்பில் வாய்க்கு வந்ததை உளறுவது மடத்தனம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X