பொது செய்தி

இந்தியா

கடந்த 7 நாட்களாக 180 இந்திய மாவட்டங்களில் கொரோனா இல்லை..!

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த ஏழு நாட்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 180 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அறவே இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் அளித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து தமிழகம், கேரளா, பீகார், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊரடங்கு
Health Minister, No New Covid Case, LastWeek,

புதுடில்லி: கடந்த ஏழு நாட்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 180 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அறவே இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து தமிழகம், கேரளா, பீகார், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊரடங்கு மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஒருபக்கம் அதிகரித்துக்கொண்டிருக்க, மரணம் அடைவோரது எண்ணிக்கை சில இடங்களில் அதிகரித்து மயானங்களில் கூட்டம் அதிகரிக்கிறது.


latest tamil news


இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‛இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 180 மாவட்டங்களில் கடந்த ஏழு நாட்களாக ஒரு வைரஸ் பாதித்த நோயாளிகூட தென்படவில்லை,' என்று கூறியுள்ளார். இது இந்திய சுகாதாரத் துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.


latest tamil news


கடந்த 21 நாட்களாக 54 மாவட்டங்களில் வைரஸ் தாக்கம் ஒருவருக்கு கூட இல்லை என்றுள்ளார். ஆனால் மறுபக்கம் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 187 பேர் வைரஸ் தாக்கத்தில் மரணமடைந்துள்ளனர். இதனையடுத்து வைரஸ் தாக்கத்தால் பலியானோரது மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 270 ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 7-ம் தேதி வரை 16 கோடியே 73 லட்சத்து 46 ஆயிரத்து 544 தடுப்பு மருந்து குப்பிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-மே-202114:46:27 IST Report Abuse
Malick Raja கவனிக்க வக்கற்ற நிர்வாகம் .. நிர்வாக திறனின்மை , தர்க்குறித்தனமான தற்ப்பெருமை,அகங்காரம் ,மனிதநேயமின்மை போன்ற வன்மங்கள் அகன்று /நீங்கி மீண்டும் இந்தியாவின் தனித்தன்மை பெற்று திகழ விளைவோம் ...
Rate this:
Cancel
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
09-மே-202108:52:30 IST Report Abuse
Gokul Krishnan பொய்யை மட்டும் மூலதனமாக கொண்டு ஆட்சி நடத்துபவர்கள் மே ஒன்று முதல் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று படோகப வெற்று அறிவிப்பு இது வரை எத்தனை நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று கூற முடியுமா
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-மே-202106:23:13 IST Report Abuse
Mani . V "சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. இருந்தாலும் இல்லை என்று பொய் சொல்லி வைப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X