பொது செய்தி

இந்தியா

வெளிநாடுகளில் இருந்து குவியுது நிவாரண பொருட்கள்

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனாவின் 2வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு, பல்வேறு வெளிநாடுகளில் இருந்து நிவாரண பொருட்கள் குவிந்து வருகின்றன.கொரோனாவின் 2வது அலை இந்தியாவில் தீவிரமாக உள்ளது. தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 4.01 லட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4,187 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து
india, corona, coronavirus, covid19, united states,  canada, japan, austrial, relef material, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19,

புதுடில்லி: கொரோனாவின் 2வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு, பல்வேறு வெளிநாடுகளில் இருந்து நிவாரண பொருட்கள் குவிந்து வருகின்றன.

கொரோனாவின் 2வது அலை இந்தியாவில் தீவிரமாக உள்ளது. தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 4.01 லட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4,187 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, உலக நாடுகள் இந்தியாவிற்கு உதவி வருகின்றன. பல்வேறு நாடுகள் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளன.


latest tamil news


அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி உள்ளதாவது: கிலீட் சயின்ஸ் மருந்து நிறுவனத்தின் 25 ஆயிரம் டோஸ் ரெம்டெசிவிர் மருந்து, அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து சேர்ந்தது. இதுவரை 1,80,000 டோஸ் மருந்துகள் இந்தியா வந்துள்ளது. இன்னும் மருந்து வர உள்ளது.


latest tamil news


Advertisement

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்ட பதிவில், நமது கூட்டாளி மற்றும் நட்பு நாடான ஜப்பானில் இருந்து 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்தள்ளது. இதற்காக பாராட்டுகிறோம் என தெரிவித்து உள்ளார்


latest tamil newsகனடாவில் இருந்து 50 வெண்டிலேட்டர்கள், 25 ஆயிரம் ரெம்டெசிவர் மருந்துகள் டில்லி வந்து சேர்ந்தது.


latest tamil news


4,00,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன்பெற்ற ஆக்சிஜன் உற்பத்தி கருவியை ஜெர்மனி இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. அவை, டில்லியில் உள்ள சர்தர் வல்லபால் படேல் கொரோனா சிறப்பு மையத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை, இந்தியாவிற்கான ஜெர்மனி தூதர் வால்டர் லிண்ட்னர் நேரில் ஆய்வு செய்தார்.


latest tamil newsஆஸ்திரியாவில் இருந்து 1900 ஆக்சிஜன் கொள்முதல் செய்யும் இயந்திரம், 396 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் செக் குடியரசில் இருந்து 500 ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் போர் விமானம் இந்தியா வந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijayalakshmanan S - CHENNAI,இந்தியா
09-மே-202107:59:27 IST Report Abuse
Vijayalakshmanan S சுங்க துறையில் தேக்கமில்லாமல் நிவாரண பொருள்கள் தேவையா இடங்களிலுங்க்கு போய் சேர்ந்தனவா
Rate this:
Cancel
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
09-மே-202104:00:08 IST Report Abuse
Naz Malick பல முஸ்லீம் நாடுகளிலிருந்து பல விதமான உதவி பொருள்கள் இந்தியாவிற்கு வந்ததை பற்றி சொல்ல என்ன கூச்சமோ ?
Rate this:
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
09-மே-202110:11:46 IST Report Abuse
Jit Onetஅது என்ன முஸ்லீம் நாடு?...
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
10-மே-202111:37:03 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுஹிந்துத்வா பேசும் கட்சியின் பிரதமர் என்றாலும் அனைத்து முஸ்லீம் கூட்டமைப்பு நாடுகளுடன் நல்லுறவு இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள் இதை ஒப்புக்கொள்வதில் உங்களுக்கு என்ன கூச்சமோ ?...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-மே-202123:19:22 IST Report Abuse
Pugazh V புது இந்தியா பொறக்குது பொறக்குது என்று சொல்லி சொல்லி நல்லா இருந்த இந்தியா வை இப்படி கையேந்த வெச்சுட்டிங்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X